AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Sanju Samson: டி20 உலகக் கோப்பையில் அடுத்தடுத்து 50+ ஸ்கோர்.. சாதனை பட்டியலில் கால் வைத்த சஞ்சு சாம்சன்!

IND vs NZ T20 WC Final: சஞ்சு சாம்சன் டி20 உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக 3 இன்னிங்ஸ்களில் 50 அல்லது அதற்கு மேல் அடித்த உலகின் 7வது பேட்ஸ்மேன் மற்றும் இந்தியர்கள் பட்டியலில் 3வது வீரர் ஆனார். விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் ஏற்கனவே இந்த சாதனையை படைத்துள்ளனர்.

Sanju Samson: டி20 உலகக் கோப்பையில் அடுத்தடுத்து 50+ ஸ்கோர்.. சாதனை பட்டியலில் கால் வைத்த சஞ்சு சாம்சன்!
சஞ்சு சாம்சன்Image Source: ICC/Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 08 Mar 2026 23:03 PM IST

2026 டி20 உலகக் கோப்பையில் (2026 T20 World Cup) இறுதிப்போட்டியில் இன்று அதாவது 2026 மார்ச் 8ம் தேதி இந்தியாவும் நியூசிலாந்தும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 255 ரன்கள் குவித்தது. அபிஷேக் சர்மாவை தொடர்ந்து, சஞ்சு சாம்சன் (Sanju Samson) 2026 டி20 உலகக் கோப்பையிலும் வரலாறு படைத்தார். நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் 50 ரன்களை எட்டியதன் மூலம் சஞ்சு சாம்சன் ஒரு தனித்துவமான சாதனையைப் படைத்தார். டி20 உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக 3 இன்னிங்ஸ்களில் அரைசதம் அல்லது அதற்கு மேல் அடித்த உலகின் ஏழாவது பேட்ஸ்மேன் என்ற பெருமையை  சஞ்சு சாம்சன் படைத்தார். இந்த பட்டியலில் விராட் கோலி உட்பட இரண்டு இந்திய பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.

ALSO READ: கோப்பையுடன் வந்த தோனி, ரோஹித்.. அதிர்ந்த ஸ்டேடியம்! ஐசிசி சிறப்பு கௌரவம்..!

வரலாறு படைத்த சஞ்சு சாம்சன்:

சஞ்சு சாம்சன் டி20 உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக 3 இன்னிங்ஸ்களில் 50 அல்லது அதற்கு மேல் அடித்த உலகின் 7வது பேட்ஸ்மேன் மற்றும் இந்தியர்கள் பட்டியலில் 3வது வீரர் ஆனார். விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் ஏற்கனவே இந்த சாதனையை படைத்துள்ளனர். முன்னதாக, சஞ்சு சாம்சன் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் 97 ரன்கள் எடுத்தார். பின்னர், இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் 89 ரன்களும், தற்போது ​​நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் 89 ரன்கள் எடுத்துள்ளார்.

உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக 3 இன்னிங்ஸ்களில் 50+ ஸ்கோர்கள்:


டி20 உலகக் கோப்பை வரலாற்றில் தொடர்ச்சியாக 3 இன்னிங்ஸ்களில் 50 அல்லது அதற்கு மேல் ரன்கள் எடுத்த 7 பேட்ஸ்மேன்கள் மட்டுமே உள்ளனர். இந்த ஏழு பேட்ஸ்மேன்களில் விராட் கோலி, மஹேலா ஜெயவர்தனே, பாபர் அசாம், கேஎல் ராகுல், குசல் மெண்டிஸ், சாஹிப்சாதா ஃபர்ஹான் தற்போது சஞ்சு சாம்சன் ஆகியோர் உள்ளனர்.

ALSO READ: 18 பந்துகளில் அபிஷேக் சர்மா அதிரடி அரை சதம் – விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி

கலக்கிய விராட் கோலி:

இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி கடந்த 2016 – 2021 உலகக் கோப்பைப் போட்டிகளில் தொடர்ச்சியாக 3 இன்னிங்ஸ்களில் 50+ ரன்கள் எடுத்தார். 2016 டி20 உலகக் கோப்பையின் கடைசி இரண்டு இன்னிங்ஸ்களில் கோலி 82 மற்றும் 89 ரன்கள் எடுத்தார். அப்போது, அந்த 2 இன்னிங்ஸ்களிலும் ஆட்டமிழக்காமல் விராட் கோலி இருந்தார். பின்னர், 2021 உலகக் கோப்பையில், விராட் தனது முதல் இன்னிங்ஸில் 57 ரன்கள் எடுத்தார். இது உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக மூன்று அரைசதங்களில் முதல் சாதனை பட்டியல் ஆகும்.

Follow Us