Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பாகிஸ்தான் வொர்த் இல்ல.. நக்கலாக பதிலளித்த சூர்ய குமார் யாதவ்!

ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தியதை அடுத்து, கேப்டன் சூர்யகுமார் யாதவ் செய்தியாளர்களைச் சந்தித்தார். இந்தியா-பாகிஸ்தான் போட்டிகளை "போட்டி" என்று அழைப்பதை நிறுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இந்த போட்டியில் பாகிஸ்தானை விட இந்தியா சிறப்பாக விளையாடியதாகவும் அவர் தெரிவித்தார்.

பாகிஸ்தான் வொர்த் இல்ல.. நக்கலாக பதிலளித்த சூர்ய குமார் யாதவ்!
சூர்ய குமார் யாதவ்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 22 Sep 2025 09:02 AM IST

பாகிஸ்தானை எங்களுக்கு போட்டி என சொல்லாதீர்கள் என்று இந்திய அணியின் டி20 கேப்டன் சூர்ய குமார் யாதவ் தெரிவித்துள்ளார். ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் அணியுடனான சூப்பர் 4 சுற்று போட்டிக்குப் பின் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பாகிஸ்தானைச் சேர்ந்த ஊடகவியாளர் ஒருவர், ‘இந்தியாவும் பாகிஸ்தானும் டி20 போட்டிகளில் இதுவரை 15 முறை மோதியுள்ளன. அதில் 12 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. எனவே இரு அணிகளுக்கும் இடையிலான தரநிலைகளில் உள்ள இடைவெளி அதிகமாகிவிட்டதா?’ என கேள்வி கேட்டார்.  அதற்கு பதிலளித்த சூர்ய குமார் யாதவ், ‘முதலில் இந்தியா, பாகிஸ்தான் இடையேயான போட்டிகளை ஒரு போட்டி என்று அழைப்பதை நிறுத்த வேண்டும் என்பதே எனது வேண்டுகோள் என கூறினார்.

சூர்யகுமார் யாதவ் பதில்


இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த ஊடகவியலாளர், தான் இரு நாட்டுக்குமிடையேயான பகைமை குறித்து கேட்கவில்லை,விளையாட்டின் தரநிலைகள் குறித்து கேட்டேன்” என விளக்கம் கொடுத்தார். உடனே பேசிய சூர்யகுமார் யாதவ், போட்டியும் தரமும் எல்லாம் ஒன்றுதான். இப்போது போட்டி என்றால் என்ன? இரண்டு அணிகள் 15 போட்டிகளில் விளையாடி 8-7 என இருந்தால், அது ஒரு போட்டி. இங்கே அது 12-3 என இருக்கிறது. ஆகவே எந்தப் போட்டியும் இல்லை” என்று அவர் சிரித்துக் கொண்டே கூறினார்.

மேலும் சூப்பர் 4 சுற்றில் நாங்கள் பாகிஸ்தானை விட சிறப்பாக விளையாடினோம் என்று நினைக்கிறேன், மேலும் பந்துவீச்சும் சிறப்பாக இருந்தது சூர்யகுமார் தெரிவித்துள்ளார். இந்த மைதானத்தில் கேட்ச் டிராப் சதவீதம் மிக அதிகமாக உள்ளது, அது விளையாட்டின் ஒரு பகுதியாகும் என்பதால் கவலைப்பட தேவையில்லை. அடுத்தப்போட்டிகளில் அதனை சரி செய்து விடுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்தியா vs பாகிஸ்தான்

கடந்த 2025, செப்டம்பர் 9 ஆம் தேதி ஆசிய கோப்பை போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இரு பிரிவாக தலா நான்கு அணிகள் என 8 அணிகள் பங்கேற்ற நிலையில் லீக் போட்டிகள் முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றில் மோதியது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் ஒருமுறை மோத வேண்டும். செப்டம்பர் 28 ஆம் தேதி இறுதிப்போட்டி நடைபெற உள்ளது.

இந்த நிலையில் சூப்பர் 4 சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரிட்சை நடத்தியது. போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்தது இதன் பின்னர் களம் கண்ட இந்திய அணி 18.5 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது இதன் மூலம் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது இந்திய அணி தரப்பில் சிறப்பாக விளையாடிய அபிஷேக் ஷர்மா 74 ரன்கள் குவித்தார்