India – Pakistan: கால்பந்திலும் சீண்டிய பாகிஸ்தான் வீரர்கள்..! வெற்றியுடன் தக்க இந்திய வீரர்கள் பதிலடி!
SAFF U17 Championship: தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு (SAFF) 17 வயதுக்குட்பட்டோர் சாம்பியன்ஷிப்பின் போது இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த இளம் கால்பந்து வீரர்கள் மைதானத்தில் நட்புறவை வெளிப்படுத்தினர் . கொழும்பில் உள்ள ரேஸ்கோர்ஸ் சர்வதேச மைதானத்தில் போட்டியின் தொடக்கத்தில் இரு அணிகளின் வீரர்களும் ஹைஃபைவ்களைப் பரிமாறிக் கொண்டனர்.

2025 ஆசியக் கோப்பையில் (2025 Asia Cup) இந்தியா – பாகிஸ்தான் (India – Pakistan) இடையிலான கிரிக்கெட் போட்டி இன்று வரை விவாத பொருளாக இருந்து வரும் நிலையில், அண்டர் 17 இந்தியா – பாகிஸ்தான் இடையிலான கால்பந்து போட்டியும் தற்போது சமூக வலைதங்களில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு காரணம், இந்த போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் செய்த சர்ச்சைக்குரிய கொண்டாட்டமே ஆகும். இதை தொடர்ந்து, பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்திய வீரர்கள் சொற்களால் அல்ல, செயல்களில் பதிலடி கொடுத்து வெற்றியும் பெற்றனர். தற்போது இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
என்ன நடந்தது..?
கடந்த 2025 செப்டம்பர் 22ம் தேதி நடைபெற்ற தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு (SAFF) 17 வயதுக்குட்பட்ட சாம்பியன்ஷிப்பில் இந்திய கால்பந்து அணியும், பாகிஸ்தான் கால்பந்து அணியும் மோதியது. இந்த போட்டியில், இந்திய கால்பந்து அணி 3-2 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி விளையாட்டு துறையில் தனது ஆதிக்கத்தை செலுத்தியது. போட்டிக்கு முன்னதாக, தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு (SAFF) 17 வயதுக்குட்பட்டோர் சாம்பியன்ஷிப்பின் போது இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த இளம் கால்பந்து வீரர்கள் மைதானத்தில் நட்புறவை வெளிப்படுத்தினர் . கொழும்பில் உள்ள ரேஸ்கோர்ஸ் சர்வதேச மைதானத்தில் போட்டியின் தொடக்கத்தில் இரு அணிகளின் வீரர்களும் ஹைஃபைவ்களைப் பரிமாறிக் கொண்டனர்.




ALSO READ: இந்தியாவிற்கு எதிரான தோல்வி..! மீண்டும் நடுவரை கைகாட்டும் பாகிஸ்தான்.. ஐசிசியிடம் புகார்!
பாகிஸ்தான் வீரர் செய்த செயல்:
They experienced an identical outcome.
Our Boys made us Proud again.
Jai Hind 🇮🇳#U17SAFF2025 pic.twitter.com/Gj3Sr0BHjm— Vivek Sharma 🇮🇳 (@SaffRonicMan) September 23, 2025
இரு அணிகளும் ஏற்கனவே தங்கள் அரையிறுதி போட்டியை உறுதி செய்துள்ள நிலையில், இரு அணிகளும் மோதினர். போட்டி தொடங்கிய 31வது நிமிடத்தில் இந்திய அணிக்காக டல்லால்மூன் காங்டே கோல் கணக்கை தொடங்கினார். தொடர்ந்து, 43வது நிமிடத்தில் பாகிஸ்தான் அணிக்காக அப்துல்லா பெனால்டி கிக்கை கோல்லாக மாற்றினார். இதன் தொடர்ச்சியாக, மைதானத்தில் மூலைக்கு ஓடி வந்து அமர்ந்து தனது சக வீரர்களுடன் டீ அருந்துவது, ராக்கெட் பறப்பது என இந்திய வீரர்களை கிண்டல் செய்வதுபோல் ஒரு சிறப்பு கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டார்.
இருப்பினும், 63வது நிமிடத்தில் இந்திய அணிக்காக குன்லீபா வாங்கெய்ரக்பம் கோல் அடிக்க, இதிலிருந்து 7வது நிமிடத்தில் பாகிஸ்தான் ஹம்சா யாசிர் கோல் அடித்து போட்டியை 2-2 என்ற கணக்கில் கொண்டு வந்தார். தொடர்ந்து, 73வது நிமிடத்தில் ரஹான் அகமது இந்தியாவுக்காக கோல் அடித்து இந்தியாவிற்கு வெற்றியை தேடி கொடுத்தார். இதையடுத்து, இந்திய அணி களத்தில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி, பாகிஸ்தானின் கேலி கொண்டாட்டத்தை மூட்டை கட்டியது. இருப்பினும், போட்டிக்கு பிறகு, அப்துல்லாவின் செயல் ஒரு முக்கிய பேசுபொருளாக மாறியது.
ALSO READ: இந்தியாவை கிண்டலடித்த ஹாரிஸ் ரவூப்.. களத்திலேயே பதிலடி கொடுத்த அர்ஷ்தீப் சிங்!
எல்லை மீறும் பாகிஸ்தான் வீரர்கள்:
கடந்த 2025 செப்டம்பர் 21ம் தேதி துபாயில் இந்தியாவுக்கு எதிரான ஆசியக் கோப்பை சூப்பர் 4 போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் ஹாரிஸ் ரவூப் மற்றும் சாஹிப்சாதா ஃபர்ஹான் ஆகியோர் வெறுப்பு ஏற்றும் சைகைகளை செய்தநிலையில், பாகிஸ்தான் அண்டர் 17 வீரரும் இதுபோல் சைகை செய்தது இந்திய ரசிகர்களின் கோபத்தை தூண்டியுள்ளது.