Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Asia Cup Super 4: எந்த அணி பைனலில்..? சிக்கி தவிக்கும் இலங்கை, பாகிஸ்தான்.. சுவாரஸ்யமாகும் சூப்பர் 4!

Asia Cup 2025 Super 4 Preview: இந்தியாவிற்கு எதிரான முதல் சூப்பர் ஃபோர் போட்டியில் தோல்வியடைந்த பிறகு, பாகிஸ்தான் அணி மீதான அழுத்தம் அதிகரித்துள்ளது. இப்போது, ​​பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு முன்னேற விரும்பினால், மீதமுள்ள இலங்கை மற்றும் வங்கதேசத்திற்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும்.

Asia Cup Super 4: எந்த அணி பைனலில்..? சிக்கி தவிக்கும் இலங்கை, பாகிஸ்தான்.. சுவாரஸ்யமாகும் சூப்பர் 4!
2025 ஆசியக் கோப்பை சூப்பர் 4Image Source: Twitter and PTI
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 23 Sep 2025 11:22 AM IST

2025 ஆசிய கோப்பையின் (2025 Asia Cup) சூப்பர் 4 சுற்று பரபரப்பான சூழலை எட்டியுள்ளது. சூப்பர் 4 சுற்றில் இதுவரை 2 போட்டிகள் முடிந்துவிட்டன. அதில், இந்திய அணி பாகிஸ்தானை (India – Pakistan) 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து இந்தியா வலுவான தொடக்கத்தை அளித்தது, அதே நேரத்தில், சல்மான் அலி ஆகா தலைமையிலான பாகிஸ்தான் அணி சிரமங்கள் அதிகரித்துள்ளன. அதேநேரத்தில், இலங்கை அணியும், வங்கதேச அணியும் இறுதிப் போட்டிக்கு முன்னேற கடுமையாக முன்னேறி வருகின்றனர். இந்தநிலையில், 2025 ஆசியக் கோப்பையின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகள் எந்தெந்த இடத்தில் உள்ளன.

பாகிஸ்தானின் பாதை:

இந்தியாவிற்கு எதிரான முதல் சூப்பர் ஃபோர் போட்டியில் தோல்வியடைந்த பிறகு, பாகிஸ்தான் அணி மீதான அழுத்தம் அதிகரித்துள்ளது. இப்போது, ​​பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு முன்னேற விரும்பினால், மீதமுள்ள இலங்கை மற்றும் வங்கதேசத்திற்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். அதன்படி, பாகிஸ்தானின் அடுத்த போட்டி இன்று அதாவது 2025 செப்டம்பர் 23ம் தேதி இலங்கைக்கு எதிராகவும், கடைசி லீக் போட்டி வருகின்ற 2025 செப்டம்பர் 25ம் தேதி வங்கதேசத்திற்கு எதிராகவும் நடைபெறுகிறது.

பாகிஸ்தான் அணி இன்றைய இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் தோற்றால், ஆசியக் கோப்பையிலிருந்து வெளியேற்றப்படுவது கிட்டத்தட்ட உறுதி. இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கு இப்போது செய் அல்லது செத்துமடி என்ற நிலையை எதிர்கொள்கிறது பாகிஸ்தான்.

ALSO READ: ஒருநாள் ஓய்வு முடிவு வாபஸ்! 2 ஆண்டுகளுக்கு பிறகு.. பாகிஸ்தான் எதிராக களமிறங்கும் டிக் காக்..!

இலங்கை மற்றும் வங்கதேச சமன்பாடு

இலங்கை அணி குரூப் கட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு, தோல்வியடையாமல் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றது. ஆனால் முதல் சூப்பர் ஃபோர் போட்டியில் வங்கதேச அணியிடம் தோல்வியடைந்தது. இதற்கிடையில், வங்கதேச அணி, ஏற்கனவே ஒரு வெற்றியைப் பதிவு செய்து, புள்ளிகள் பட்டியலில் வலுவான நிலையைக் கொண்டுள்ளது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி இன்றைய போட்டியில் தோற்றால் வெளியேறும்.

இந்த வகையில், இரண்டு போட்டிகளும் பாகிஸ்தானுக்கு மிகவும் சவாலானதாக இருக்கும். ஏனெனில் இலங்கை மற்றும் வங்கதேசம் இரண்டும் வலுவான அணிகள் மற்றும் எதிரணி அணிக்கு எதிராக வெற்றி பெறும் திறனைக் கொண்டுள்ளன.

இந்தியாவின் நிலை

பாகிஸ்தானை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றில் இந்தியா தனது நிலையை வலுப்படுத்தியுள்ளது. இருப்பினும், இறுதிப் போட்டியில் இந்தியாவின் இடம் இன்னும் முழுமையாக உறுதிப்படுத்தப்படவில்லை. இறுதிப் போட்டிக்கு வர, இந்திய அணி அடுத்த 2 போட்டிகளில் (வங்கதேசம் மற்றும் இலங்கைக்கு எதிராக) குறைந்தபட்சம் ஒன்றில் வெற்றி பெற வேண்டும். இந்தியா நாளை அதாவது 2025 செப்டம்பர் 23ம் தேதி வங்கதேசத்தையும்,  வருகின்ற 2025 செப்டம்பர் 26ம் தேதி இலங்கையையும் எதிர்கொள்ளும். இந்தப் போட்டிகளில் ஒன்றில் கூட இந்தியா வெற்றி பெற்றால், இறுதிப் போட்டிக்குள் நுழைவது உறுதி செய்யப்படும்.

ALSO READ: இந்தியாவிற்கு எதிரான தோல்வி..! மீண்டும் நடுவரை கைகாட்டும் பாகிஸ்தான்.. ஐசிசியிடம் புகார்!

இறுதிப் போட்டி எப்போது..?

ஆசியக் கோப்பை இறுதிப் போட்டி வருகின்ற செப்டம்பர் 28 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும். இந்தியாவும் பாகிஸ்தானும் மூன்றாவது முறையாக இந்தப் போட்டியில் மோதுமா என்பது அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இறுதி போட்டியை எட்ட பாகிஸ்தான் அடுத்து வரும் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும்.