Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

IND vs PAK: இணையத்தில் விவாதத்தை கிளப்பும் ஃபகர் ஜமான் அவுட்.. இந்திய அணிக்கு 172 ரன்கள் இலக்கு!

Fakhar Zaman Catch Controversy: ஹர்திக் பாண்ட்யா வீசிய 2.3 ஓவரின் பந்து மெதுவாக செல்ல ஃபகர் ஜமானின் பேட்டின் எட்ஜில் பட்டு விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் கைகளுக்கு சென்றது. அப்போது, பந்து சரியான வேகத்தில் வராததால் சஞ்சு சாம்சன் கைகளை நீட்டி தரையோடு தரையாக பந்தை பிடித்தார்.

IND vs PAK: இணையத்தில் விவாதத்தை கிளப்பும் ஃபகர் ஜமான் அவுட்.. இந்திய அணிக்கு 172 ரன்கள் இலக்கு!
ஃபகர் ஜமான் அவுட் சர்ச்சைImage Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 21 Sep 2025 22:11 PM IST

2025 ஆசிய கோப்பையின் (2025 Asia Cup)  சூப்பர் 4 போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் (India – Pakistan) அணிகள் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பந்துவீசுவதாக முடிவு செய்தார். இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி ஆரம்பத்தில் சிறப்பாக பேட்டிங் செய்தாலும், பின்வரிசையில் சொதப்பியது. ஆரம்பத்தில் இந்தியாவின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா மெதுவான பந்தை வீச பாகிஸ்தான் பேட்ஸ்மேன் ஃபகர் ஜமான் வெறும் 14 ரன்களில் சஞ்சு சாம்சனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இருப்பினும், அவுட் ஆன பிறகு, ஃபகர் ஜமான் 3வது அம்பயரின் முடிவில் திருப்தி அடையாததால் ஆத்திரத்துடன் தனது வெறுப்பையும் வெளிப்படுத்தினார். தற்போது, அந்த வீடியோ காட்சியானது சமூக வலைதளங்களில் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ: உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறை! முழுக்க பெண்கள் குழுவை நடுவராக களமிறக்கிய ஐசிசி!

என்ன நடந்தது..?


ஹர்திக் பாண்ட்யா வீசிய 2.3 ஓவரின் பந்து மெதுவாக செல்ல ஃபகர் ஜமானின் பேட்டின் எட்ஜில் பட்டு விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் கைகளுக்கு சென்றது. அப்போது, பந்து சரியான வேகத்தில் வராததால் சஞ்சு சாம்சன் கைகளை நீட்டி தரையோடு தரையாக பந்தை பிடித்தார். அந்தநேரத்தில், கள நடுவர்கள் அவுட் கொடுத்தாலும், மூன்றாவது நடுவரின் உதவியை நாட வேண்டிய சூழல் ஏற்பட்டது.

3வது அம்பயர் சஞ்சு சாம்சனின் கேட்சை பரிசோதித்தபோது, ​​பந்து நேராக அவரது கையுறைக்குள் சென்றது கண்டறியப்பட்டது. அப்போது,  ஃபகர் ஜமானை அவுட் என அறிவிக்கப்பட்டது. இருப்பினும், மூன்றாவது நடுவரின் முடிவை ஏற்றுகொள்ள முடியாமல் ஃபகர் ஜமான் கள நடுவரிடம் புகார் செய்யத் தொடங்கினார். முன்னதாக, சஞ்சு சாம்சனின் கையுறைகளைத் தாக்குவதற்கு முன்பு பந்து தரையில் பட்டதாக ஃபகர் நினைத்தார். ஆனால் அது அப்படி நடக்கவில்லை. பெவிலியனுக்குத் திரும்பிய ஃபக்கர் ஜமான் தனது தலைமை பயிற்சியாளர் மைக் ஹெஸனிடம் புகார் அளித்தபோது நிலைமை இன்னும் மோசமாகியது, அவர் முடிவில் திருப்தி அடைந்ததாக தெரியவில்லை.

ALSO READ: அடுத்தடுத்து இந்திய அணி கேட்ச் ட்ராப்! சொதப்பிய அபிஷேக், குல்தீப் யாதவ்..!

ஃபகர் ஜமானின் கேட்ச் குறித்த சர்ச்சை:


இந்தநிலையில், ஃபகர் ஜமானின் கேட்ச் ஒரு சூடான சர்ச்சையைத் தூண்டியது. சமூக ஊடகங்களில் பாகிஸ்தான் ரசிகர்கள் இந்த கேட்ச் முடிவு தவறானது என்று கூறி வருகின்றனர்.  அதில், ஃபகார் ஜமானின் கேட்ச் சரியானது என்பதை ரீப்ளேக்கள் தெளிவாகக் காட்டிய போதிலும், நடுவர் இந்தியாவுக்கு ஆதரவாக இருப்பதாக பாகிஸ்தான் ரசிகர்கள் குற்றம் சாட்டினர். சஞ்சு சாம்சன் ஒரு அற்புதமான கேட்சை எடுத்தார். இருப்பினும், இந்திய அணி பவர்பிளேயில் இரண்டு கேட்சுகளையும், அதன்பிறகு, 3 கேட்சுகளையும் தவறவிட்டு ஏமாற்றம் அளித்தது.

இந்திய அணிக்கு எதிரான சூப்பர் 4 சுற்றில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்துள்ளது.