Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

India – Pakistan: டாஸ்தான் முதல் டார்க்கெட்! போட்டா போட்டியில் இந்தியா – பாகிஸ்தான்.. இது ஏன் முக்கியம்..?

India vs Pakistan Asia Cup 2025: இந்தியா - பாகிஸ்தான் கைகுலுக்கல் சர்ச்சைக்குப் பிறகு இரு அணிகளும் முதல் முறையாக மோதுகின்றன. இந்த போட்டியில் இதுவரை ஒரு போட்டியில் கூட இந்திய அணி தோல்வியடையவில்லை. சூப்பர் 4 சுற்றில் இந்த வெற்றிப் பயணத்தைத் தொடர இந்திய அணி தொடர்ந்து முயற்சிக்கும்.

India – Pakistan: டாஸ்தான் முதல் டார்க்கெட்! போட்டா போட்டியில் இந்தியா – பாகிஸ்தான்.. இது ஏன் முக்கியம்..?
இந்தியா - பாகிஸ்தான்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 21 Sep 2025 10:50 AM IST

2025 ஆசிய கோப்பையில் (2025 Asia Cup) சூப்பர் 4 போட்டி நேற்று அதாவது 2025 செப்டம்பர் 21ம் தேதி முதல் தொடங்கிவிட்டது. லீக் ஸ்டேஜ் கட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் (India – Pakistan) போட்டியானது மிகப்பெரிய சர்ச்சைக்கு மத்தியில் நடந்து முடிந்தது. இந்தநிலையில், இரு அணிகளும் சூப்பர் 4 சுற்றில் மீண்டும் இன்று அதாவது 2025 செப்டம்பர் 21ம் தேதி மீண்டும் மோதுகின்றன. ஆசிய கோப்பை போட்டியின் லீக் கட்டத்தில், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இந்திய அணி (Indian Cricket Team) ஏற்கனவே இந்த போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பாகிஸ்தான் மற்றும் ஓமன் ஆகிய அணிகளை அடுத்தடுத்து வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றிகளைப் பெற்றுள்ளது. அதன்படி, சூப்பர் 4 லும் இந்த வெற்றிப் பயணத்தைத் தொடர இந்திய அணி விரும்பும். இருப்பினும், துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் முக்கிய பங்கு வகிக்க முடியும். ஒரு முக்கியமான உண்மை வெளிவந்துள்ளது.

டாஸ் வென்று முதலில் பந்து வீசுவது ஏன் முக்கியம்:

இந்தியாவும் பாகிஸ்தானும் 2025 செப்டம்பர் 21ம் தேதி துபாயில் மோதுகின்றன. இதுவரை இங்கு விளையாடிய 9 டி20 போட்டிகளிலும் இரண்டாவது பேட்டிங் செய்து ரன் சேஸிங் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளதால், டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்யும். அதன்படி, டாஸ் முக்கிய பங்கு வகிக்கும். இதைக் கருத்தில் கொண்டு, டாஸ் வென்ற பிறகு இரு அணிகளும் முதலில் பந்து வீச முடிவு செய்யலாம்.

ALSO READ: சூப்பர்-4 ஐ வெற்றியுடன் தொடங்கிய வங்கதேசம்… ஆசியக் கோப்பை புள்ளிகள் பட்டியல் அப்டேட்!

ஒவ்வொரு போட்டியிலும் ரன்களை சேஸிங் செய்த அணி வெற்றி பெறுகிறது. மேலும், இந்த ஸ்டேடியத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் இதுவரை 4 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளன. இந்த ஒவ்வொரு போட்டியிலும், சேஸிங் அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியின் லீக் போட்டியில், ரன் சேஸிங் அணியான இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றபோது இது தெளிவாகத் தெரிந்தது. இந்த ஸ்டேடியத்தில் 185 ரன்கள் என்ற இலக்கை இதுவரை எந்த அணியும் துரத்தியதில்லை. எனவே, முதலில் பேட்டிங் செய்த வெற்றி பெற வேண்டுமெனில் 180க்கும் மேற்பட்ட ரன்களை பதிவு செய்வது மிக முக்கியம்.

கைகுலுக்கல் சர்ச்சைக்குப் பிறகு முதல் போட்டி


இந்தியா – பாகிஸ்தான் கைகுலுக்கல் சர்ச்சைக்குப் பிறகு இரு அணிகளும் முதல் முறையாக மோதுகின்றன. இந்த போட்டியில் இதுவரை ஒரு போட்டியில் கூட இந்திய அணி தோல்வியடையவில்லை. சூப்பர் 4 சுற்றில் இந்த வெற்றிப் பயணத்தைத் தொடர இந்திய அணி தொடர்ந்து முயற்சிக்கும். ஆசிய கோப்பை 2025 லீக் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 9 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்தது.

ALSO READ: சூப்பர் 4ல் மோதும் இந்தியா – பாகிஸ்தான்.. போட்டியை எங்கு, எப்போது காணலாம்..?

இந்திய அணியின் வலுவான சாதனை

இதையடுத்து, 15.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து இந்த இலக்கை இந்தியா அடைந்தது. இப்போது, ​​இந்த தோல்விக்கு பழிவாங்க பாகிஸ்தான் அணி நிச்சயமாக முயற்சிக்கும். இருப்பினும், இந்திய அணி தற்போது சிறந்த ஃபார்மில் உள்ளதால், பாகிஸ்தான் அணிக்கு கடுமையான சவாலை கொடுக்கும் என நம்பப்படுகிறது. கடந்த 2024ல் டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு, இந்திய கிரிக்கெட் அணி ஒரு டி20 தொடரை கூட இழக்கவில்லை. இந்த நேரத்தில், இந்தியா மொத்தம் 23 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் மட்டுமே தோல்வியடைந்தது. இதைக் கருத்தில் கொண்டு, பாகிஸ்தான் வெற்றி பெற மிகச் சிறப்பாக செயல்பட வேண்டும்.