Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Axar Patel Injury: ஓமனுக்கு எதிரான போட்டியில் தலையில் காயம்.. சூப்பர் 4ல் அக்சர் படேல் களமிறங்குவாரா?

India vs Pakistan Super 4: அபுதாபியில் ஓமனுக்கு எதிரான இந்தியாவின் குரூப் ஏ போட்டியின் போது இந்திய ஆல்ரவுண்டர் அக்சர் படேலுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ஓமன் பேட்டிங்கின் போது பந்தை கேட்ச் பிடிக்க முயற்சித்த அக்சர் படேலுக்கு தலை மற்றும் கழுத்தில் காயம் ஏற்பட்டது.

Axar Patel Injury: ஓமனுக்கு எதிரான போட்டியில் தலையில் காயம்.. சூப்பர் 4ல் அக்சர் படேல் களமிறங்குவாரா?
அக்சர் படேல் காயம்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 20 Sep 2025 13:30 PM IST

2025 ஆசிய கோப்பையின் (2025 Asia Cup) இறுதி குரூப் லீக் போட்டியில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, ஓமனை 21 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து ஹாட்ரிக் வெற்றிகளைப் பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி (Indian Cricket Team) 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது. 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஓமன் அணி 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதை தொடர்ந்து, சூப்பர் 4 சுற்று இன்று முதல் அதாவது 2025 செப்டம்பர் 20ம் தேதி தொடங்க உள்ளது. அதேநேரத்தில்,  இந்திய அணி தனது முதல் சூப்பர் 4 ஆட்டத்தில் நாளை அதாவது 2025 செப்டம்பர் 20ம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் ஒரு இந்திய வீரர் பங்கேற்பது கடினம் என்று கூறப்படுகிறது. இந்த வீரர் ஓமனுக்கு எதிரான போட்டியில் காயமடைந்தார்.

ALSO READ: இந்தியாவை ஓரங்கட்ட முயற்சித்த ஓமன்.. கடைசி நேரத்தில் கரை சேர்ந்து சூர்யா படை வெற்றி!

இந்திய அணி வீரருக்கு காயம்:


அபுதாபியில் ஓமனுக்கு எதிரான இந்தியாவின் குரூப் ஏ போட்டியின் போது இந்திய ஆல்ரவுண்டர் அக்சர் படேலுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ஓமன் பேட்டிங்கின் போது பந்தை கேட்ச் பிடிக்க முயற்சித்த அக்சர் படேலுக்கு தலை மற்றும் கழுத்தில் காயம் ஏற்பட்டது. அதாவது, ஓமன் அணியின் இன்னிங்ஸின் 15வது ஓவரில், பேட்ஸ்மேன் ஹமீத் மிர்சா ஒரு பெரிய ஷாட் அடித்தார், அக்சர் படேல் மிட்-ஆஃப்பிலிருந்து ஓடி வந்து கேட்ச் எடுத்தார். கேட்ச் பிடிக்க முயற்சிக்கும் போது அவர் சமநிலையை இழந்து, கீழே விழுந்து அவரது தலை மற்றும் கழுத்தில் காயம் ஏற்பட்டது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, வலியால் துடித்த அக்சர், ஒரு பிசியோதெரபிஸ்ட்டின் உதவியுடன் களத்தை விட்டு வெளியேறினார். ஓமனின் மீதமுள்ள இன்னிங்ஸில் பீல்டிங் மற்றும் பந்துவீச மீண்டும் வரவில்லை. இது தற்போது இந்திய அணிக்கு கவலையை ஏற்படுத்தியது. போட்டிக்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில், இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் டி. திலீப், அக்சரின் உடல்நிலை குறித்து ஒரு புதுப்பிப்பை வழங்கினார், அவர் தற்போது நலமாக இருப்பதாகக் கூறினார். இருப்பினும், துபாயில் அதாவது 2025 செப்டம்பர் 21ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 போட்டியில் அவர் பங்கேற்பது சந்தேகமே என்று கூறப்படுகிறது. போட்டிகளுக்கு இடையில் 48 மணி நேரத்திற்கும் குறைவான நேரம் மட்டுமே மீதமுள்ளதால், இது குணமடைய போதுமானதாக இருக்குமா என்பது தெரியவில்லை. எனவே, அக்சர் படேல் சரியான நேரத்தில் குணமடையவில்லை என்றால், இந்திய அணிக்கு பின்னடைவை தரலாம்.

ALSO READ: ஒரே போட்டியில் 2 முறை.. ஒரே பந்துவீச்சாளரிடம் ஒரே மாதிரி அவுட்டான ஹர்திக், அர்ஷ்தீப்!

மற்றொரு வீரர் களமிறங்க வாய்ப்பு..?

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் அக்சர் படேலின் காயம் குறித்து பிசிசிஐ விரைவில் ஒரு முடிவை எடுக்கும். அவர் போட்டியில் இருந்து நீக்கப்பட்டால், மாற்று வீரர் அறிவிக்கப்படலாம். அதன்படி, இந்திய அணியில் ஆல்ரவுண்டர்களான ரியான் பராக் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தயார் நிலையில் உள்ளனர். எனவே, தேவைப்பட்டால் இந்த வீரர்களில் யாரையாவது இந்தியாவில் இருந்து துபாய்க்கு விரைவில் பறக்கலாம்.