India vs Oman: ஒரே போட்டியில் 2 முறை.. ஒரே பந்துவீச்சாளரிடம் ஒரே மாதிரி அவுட்டான ஹர்திக், அர்ஷ்தீப்!
Asia Cup 2025: ஓமனுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம், ஓமன் அணிக்கு 189 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 56 ரன்கள் எடுத்திருந்தார்.

2025 ஆசியக் கோப்பையில் (2025 Asia Cup) இந்திய அணி தனது கடைசி லீக் போட்டியில் ஓமனுக்கு எதிராக அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் ஸ்டேடியத்தில் விளையாடி வருகிறது. ஓமனுக்கு எதிராக அதிரடியாக இந்திய அணி (Indian Cricket Team) வீரர்கள் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முடிவில் ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து ஏமாற்றம் அளித்தனர். இந்த விக்கெட்டுகளில் ஒன்று ஹார்டிக் பாண்ட்யாவின் விக்கெட் ஆகும். அதேநேரத்தில், ஹர்திக் பாண்ட்யா அவுட்டான முறையானது, ஓமன் பந்துவீச்சாளர்களே நம்பியிருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு, ஹர்திக் பாண்ட்யா எதிர்பாராதவிதமாக துரதிர்ஷ்டத்தால் ஆட்டமிழந்தார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
என்ன நடந்தது..?
இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்த 2025 ஆசியக் கோப்பை போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது இதுவே முதல் முறை. இதற்கு முன்பாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி இலக்கை மட்டுமே துரத்தியது. தொடக்க வீரராக அபிஷேக் சர்மாவுடன் களமிறங்கிய துணை கேப்டன் சுப்மன் கில் 5 ரன்கள் மட்டுமே எடுத்து சீக்கிரமே ஆட்டமிழந்தார். அதன்பிறகு, இணைந்த அபிஷேக் சர்மாவும் சஞ்சு சாம்சன் கூட்டணி இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தியது.




ALSO READ: ஓமனுக்கு எதிரான போட்டி..! இந்திய அணிக்கு இவ்வளவு முக்கியமானதா..? புது சாதனையுடன் களம்!
அபாரமான ஃபார்மில் இருந்த அபிஷேக் சர்மா வழக்கம்போல் வெறும் 15 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உட்பட 38 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து வந்த ஹர்திக் பாண்ட்யா, ரன் அவுட் ஆவதற்கு முன்பு ஒரு பந்தை மட்டுமே விளையாடியிருந்தார். அதாவது, சஞ்சு சாம்சன் எட்டாவது ஓவரில் ஒரு ஃபார்வர்டு ஷாட்டை ஆடினார். அப்போது, எதிர் முனையில் இருந்த ஹர்திக் பாண்ட்யா ரன் எடுப்பதற்காக முன்கூட்டியே க்ரீஸை விட்டு வெளியேறி வந்தார். சஞ்சு சாம்சன் அடித்த பந்து வீச்சாளரை நோக்கி வந்தபோது, பந்துவீசிய ஜித்தேன் ராமானந்தி கேட்ச் எடுக்க முயற்சி செய்தார். அப்போது, பந்தானது அவரது கையில் இருந்து குதித்து ஸ்டம்புகளைத் தாக்கியது.
ஒரே போட்டியில் 2 முறை:
I’ve never seen a more unlucky cricketer than Hardik Pandya 💔 pic.twitter.com/ojDlyWyzU1
— RISHAV (@Imrishav108) September 19, 2025
பந்து ஸ்டம்புகளைத் தாக்கியபோது பாண்ட்யா தனது க்ரீஸுக்கு வெளியே இருந்தார். அதனால், ஹர்திக் பாண்ட்யா ரன் அவுட் ஆகி வெளியேறினார். இதேபோல், இதே போட்டியில் ஜித்தேன் ராமனந்தி அர்ஷ்தீப் சிங்கையும் ரன் அவுட் செய்தார். பேட்டிங் ஆடிகொண்டிருந்த ஹர்சித் ராணா பந்தை நேராக அடிக்க, அதை தடுக்க முயற்சித்த ஜித்தேன் கைகளில் பட்டு எதிர்முனையின் ஸ்டம்பை தாக்கியது. அப்போது, ரன் எடுக்க ஓடி வந்த அர்ஷ்தீப் சிங் ரன் அவுட்டானார்.
ALSO READ: 40 வயதில் நங்கூர பேட்டிங்.. 5 பந்துகளில் 5 சிக்ஸர்கள்! கலக்கிய முகமது நபி..!
189 ரன்கள் இலக்கு:
#INDvOMA : Arshdeep Singh 1(1) Run Out. #AsiaCup2025 pic.twitter.com/mCTHdNVENm
— TrendHubX (@TrendHubX) September 19, 2025
ஓமனுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம், ஓமன் அணிக்கு 189 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 56 ரன்கள் எடுத்திருந்தார்.