Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Varun Chakaravarthy: டி20யில் அனைத்திலும் நம்பர் 1.. பந்துவீச்சாளர் தரவரிசையில் வருண் சக்கரவர்த்தி முதலிடம்!

ICC T20I Bowler Rankings: வருண் சக்ரவர்த்தி இந்தியாவின் மட்டுமல்ல, உலகின் சிறந்த டி20 பந்து வீச்சாளராக உருவெடுத்துள்ளார். ஐசிசி டி20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ரவி பிஷ்னோய் 2 இடங்கள் சரிந்து 8வது இடத்திற்கு வந்துள்ளார். அதேநேரத்தில், அக்சர் படேல் ஒரு இடம் முன்னேறி 12வது இடத்தை பிடித்துள்ளார்.

Varun Chakaravarthy: டி20யில் அனைத்திலும் நம்பர் 1.. பந்துவீச்சாளர் தரவரிசையில் வருண் சக்கரவர்த்தி முதலிடம்!
வருண் சக்கரவர்த்தி Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 17 Sep 2025 21:33 PM IST

2025 ஆசிய கோப்பைக்கு (2025 Asia Cup) மத்தியில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் என்று அழைக்கப்படும் ஐசிசி சமீபத்திய டி20 தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இதில், டி20 பந்துவீச்சாளருக்கான டி20 தரவரிசை பட்டியலில் தமிழ்நாடு வீரர் வருண் சக்ரவர்த்தி (Varun Chakaravarthy) நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளார். முன்னதாக, வருண் சக்கரவர்த்தி 4வது இடத்திலிருந்த நிலையில், முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். இதன்மூலம், டி20 அணியின் தரவரிசை பட்டியலில் இந்திய அணியும், பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் அபிஷேக் சர்மாவும், பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் வருண் சக்கரவர்த்தியும் முதலிடத்தில் உள்ளனர். மேலும், 3 இந்திய பந்துவீச்சாளர்கள் முதல் 20 இடங்களுக்குள் உள்ளனர். இதில், ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், உலகின் சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஜஸ்பிரித் பும்ரா, டி20 பந்துவீச்சு தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் இல்லை.

ALSO READ: இந்திய அணியின் புதிய ஸ்பான்சராக அப்போல்லோ டயர்ஸ்.. ஒரு போட்டிக்கு இவ்வளவு பணம் வழங்குமா..?

முதலிடத்தில் வருண் சக்ரவர்த்தி:


முன்னதாக, ஐசிசி டி20 பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் 4வது இடத்தில் இருந்த வருண் சக்ரவர்த்தி, 733 ரெய்டிங் புள்ளிகளுடன் 3 இடங்கள் முன்னேறி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.  2025 ஆசிய கோப்பையில் வருண் சக்கரவர்த்தி இதுவரை இந்தியாவுக்காக இரண்டு போட்டிகளிலும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிராக, 2 ஓவர்களில் வெறும் 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டையும், பாகிஸ்தானுக்கு எதிராக, 4 ஓவர்களில் 24 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.

டி20 போட்டிகளில் சிறந்த 5 இந்திய பந்து வீச்சாளர்கள்:

வருண் சக்ரவர்த்தி இந்தியாவின் மட்டுமல்ல, உலகின் சிறந்த டி20 பந்து வீச்சாளராக உருவெடுத்துள்ளார். ஐசிசி டி20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ரவி பிஷ்னோய் 2 இடங்கள் சரிந்து 8வது இடத்திற்கு வந்துள்ளார். அதேநேரத்தில், அக்சர் படேல் ஒரு இடம் முன்னேறி 12வது இடத்திற்கு வந்துள்ள நிலையில், ஆசிய கோப்பையில் இதுவரை ஒரு போட்டியில் கூட விளையாடாததால் அர்ஷ்தீப் சிங் முதல் 10 இடங்களிலிருந்து 14வது இடத்திற்கு பின்தங்கியுள்ளார். பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் ஆசிய கோப்பையில் சிறப்பாக பந்துவீசி வரும் குல்தீப் யாதவ் 16 இடங்கள் முன்னேறி 23வது இடத்திற்கு வந்துள்ளார்.

ALSO READ: இந்திய அணியின் அடுத்த போட்டி எப்போது? யாருடன்..? முழு விவரம் இங்கே!

இந்திய பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியல்:

  • வருண் சக்ரவர்த்தி – 1
  • ரவி பிஷ்னோய் – 8
  • அக்சர் படேல் – 12
  • அர்ஷ்தீப் சிங் – 14
  • குல்தீப் யாதவ் – 23

ஆசியக் கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, குல்தீப் யாதவ் டி20 தரவரிசையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளார். இதுவரை 2 போட்டிகளில் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்தப் போட்டியில் இந்தியாவின் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்களில் ஒருவராக உள்ளார்.