Asia Cup 2025 Points Table: முதலிடத்தை விட்டுகொடுக்காமல் இலங்கை.. தடுமாறிய ஆப்கானிஸ்தான்.. சூப்பர் 4ல் வங்கதேசமா?
Asia Cup 2025 Group B Points Table: ஆசிய கோப்பை குரூப் பியின் புள்ளிகள் பட்டியலில் இலங்கை அணி 2 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளது. மேலும், இந்த அணியின் நிகர ரன் ரேட்டும் பிளஸ்ஸில் உள்ளது. வங்கதேச அணியை பொறுத்தவரை 3 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் 2வது இடத்தில் உள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வரும் 2025 ஆசிய கோப்பையில் (2025 Asia Cup) குரூப் ஏ பொறுத்தவரை இந்திய அணி (Indian Cricket Team) மட்டுமே சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. அதேநேரத்தில், குரூப் பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் ஆகிய அணிகளில் ஹாங்காங் மட்டுமே சற்று பலவீனமாக உள்ளது. இதன் காரணமாக, இந்த அணி சூப்பர் 4 பந்தயத்தில் இருந்து வெளியேறியது. இருப்பினும், குரூப் பி பிரிவில் சூப்பர் 4 சுற்றுக்கு செல்ல 2 இடங்களுக்கு ஆப்கானிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேசம் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. கடையில் போட்டியில்தான் இந்த குழுவிலிருந்து எந்த 2 அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும் என்பது தெரியவரும்.
தப்பித்த வங்கதேசம்:
Points Table of Asia Cup 2025 🏏 pic.twitter.com/sSpH7IIjB2
— CricketGully (@thecricketgully) September 16, 2025
குரூப் பியில் நேற்று அதாவது 2025 செப்டம்பர் 16ம் தேதி வங்கதேசம் – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதியது. இந்த போட்டியில் வங்கதேச அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் எப்படியோ வெற்றி பெற்றது. ஒருவேளை வங்கதேசம் தோல்வியுற்றிருந்தால், ஹாங்காங்கிற்கு பிறகு குரூப் பியில் இருந்து வங்கதேச அணி வெளியேறி இருக்கும். அந்த நேரத்தில், இலங்கையும், ஆப்கானிஸ்தானும் சூப்பர் 4க்கு தகுதி பெற்றிருக்கும். ஆனால், அடுத்ததாக வருகின்ற 2025 செப்டம்பர் 18ம் தேதி இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெறுகிறது. இதில், ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றால் சூப்பர் 4க்கு தகுதி பெறும். அதேநேரத்தில், இலங்கை அணி வெற்றிபெற்றால், வங்கதேசத்துடன் இலங்கை அணி சூப்பர் 4 சுற்றுக்கு செல்லும். எனவே, இது ஆப்கானிஸ்தான் அணிக்கு நாக் அவுட் போன்றது.




ALSO READ: 1993 முதல் 2025 வரை.. இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்சர் யார்..? முழு லிஸ்ட்!
ஆசிய கோப்பை 2025 குரூப் பி புள்ளிகள் அட்டவணை: இலங்கை முதலிடம்
குரூப் ஏ | விளையாடிய போட்டிகள் | வெற்றி | தோல்வி | புள்ளிகள் | ரன் ரேட் |
இலங்கை | 2 | 2 | 0 | 4 | +1.546 |
வங்கதேசம் | 3 | 2 | 1 | 4 | -0.270 |
ஆப்கானிஸ்தான் | 2 | 1 | 1 | 2 | -2.150 |
ஹாங்காங் (E) | 3 | 0 | 3 | 0 | -2.151 |
ஆசிய கோப்பை குரூப் பியின் புள்ளிகள் பட்டியலில் இலங்கை அணி 2 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளது. மேலும், இந்த அணியின் நிகர ரன் ரேட்டும் பிளஸ்ஸில் உள்ளது. வங்கதேச அணியை பொறுத்தவரை 3 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் 2வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 2 போட்டிகளில் 1 வெற்றி 1 தோல்வியுடன் 3வது இடத்திலும் உள்ளது. இருப்பினும், வங்கதேசத்தின் ரன் ரேட்டைவிட, ஆப்கானிஸ்தான் ரன் ரேட் மிக சிறப்பாக உள்ளது. ஹாங்காங் 3 போட்டிகளிலும் தோல்வியடைந்து சூப்பர் 4ல் இருந்து வெளியேறியது.
ALSO READ: இந்திய அணியின் அடுத்த போட்டி எப்போது? யாருடன்..? முழு விவரம் இங்கே!
ஆசிய கோப்பை 2025 குரூப் ஏ புள்ளிகள் அட்டவணை:
குரூப் ஏ | விளையாடிய போட்டிகள் | வெற்றி | தோல்வி | புள்ளிகள் | ரன் ரேட் |
இந்தியா (Q) | 2 | 2 | 0 | 4 | +4.793 |
பாகிஸ்தான் | 2 | 1 | 0 | 2 | +1.649 |
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் | 2 | 1 | 1 | 2 | -2.030 |
ஓமன் (E) | 2 | 0 | 2 | 0 | -3.375 |
இந்திய அணி இடம்பெற்றுள்ள குரூப் ஏ பிரிவில் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் புள்ளிகள் அட்டவணை அப்படியே உள்ளது. குரூப் ஏ பிரிவில் 2வது இடத்தில் உள்ள பாகிஸ்தானும், 3வது இடத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியும் இன்று அதாவது 2025 செப்டம்பர் 17ம் தேதி மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி சூப்பர் 4க்கு நேரடியாக செல்லும்.