Asia Cup 2025 Points Table: ஆசிய கோப்பையில் இந்திய அணி முதலிடத்தில் ஆதிக்கம்.. இலங்கை, பாகிஸ்தான் நிலைமை என்ன..? புள்ளிகள் பட்டியல் இதோ!
Asia Cup 2025 Points Table Group-A India Top: ஆசிய கோப்பை 2025 குரூப்-ஏ-வின் புள்ளிகள் அட்டவணையைப் பொறுத்தவரை, இந்திய அணி சூப்பர்-4க்கு தகுதி பெற்றுள்ளது. 4 புள்ளிகள் மற்றும் +4.793 நிகர ரன் விகிதத்துடன் முதலிடத்தில் உள்ளது. அதேநேரத்தில், ஓமன் அணி 2 தோல்விகளுடன் சூப்பர் 4 சுற்றுக்கான பந்தயத்தில் இருந்து வெளியேறியது.

2025 ஆசியக் கோப்பையில் (2025 Asia Cup) நேற்று அதாவது 2025 செப்டம்பர் 15ம் தேதி இரண்டு போட்டிகள் நடைபெற்றது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஓமானை 42 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது, இலங்கை ஹாங்காங்கை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இந்த இரண்டு போட்டிகளின் முடிவுகளுக்குப் பிறகு, தோற்ற இந்த 2 அணிகளும் சூப்பர் 4 சுற்றுக்கான பந்தயத்தில் இருந்து வெளியேறின. அதேநேரத்தில், 2025 ஆசியக் கோப்பையின் சூப்பர் 4 சுற்றுக்கு சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி (Indian Cricket Team) தகுதி பெற்றது. இப்போது சூப்பர் 4ன் மீதமுள்ள 3 இடங்களுக்கு 6 அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. பாகிஸ்தான் நிலைமை சற்று அபாயத்தில் உள்ளது.
சூப்பர் 4 சுற்று: குரூப் ஏ பிரிவு
ஆசிய கோப்பை 2025 குரூப்-ஏ-வின் புள்ளிகள் அட்டவணையைப் பொறுத்தவரை, இந்திய அணி சூப்பர்-4க்கு தகுதி பெற்றுள்ளது. 4 புள்ளிகள் மற்றும் +4.793 நிகர ரன் விகிதத்துடன் முதலிடத்தில் உள்ளது. அதேநேரத்தில், ஓமன் அணி 2 தோல்விகளுடன் சூப்பர் 4 சுற்றுக்கான பந்தயத்தில் இருந்து வெளியேறியது. இருப்பினும், ஓமன் அணி இந்தியாவிற்கு எதிரான கடைசி லீக் போட்டியில் விளையாடவுள்ளது. இதன் முடிவுகள் அட்டவணையை பாதிக்காது. இந்த குரூப்பில் பாகிஸ்தான் அணி 2வது இடத்திலும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 3வது இடத்திலும் உள்ளன. குரூப் ஏவில் ஓமன் நான்காவது மற்றும் கடைசி இடத்தில் உள்ளது.




ALSO READ: கைக்குலுக்காத இந்திய வீரர்கள்.. அம்பயர் மீது கோபம் கொண்ட பிசிபி.. புறக்கணிக்கும் பாகிஸ்தான்!
அட்டவணை:
Points Table of Asia Cup 2025 🏏 pic.twitter.com/1gUurOxQUx
— CricketGully (@thecricketgully) September 15, 2025
குரூப் ஏ | விளையாடிய போட்டிகள் | வெற்றி | தோல்வி | புள்ளிகள் | ரன் ரேட் |
இந்தியா (Q) | 2 | 2 | 0 | 4 | +4.793 |
பாகிஸ்தான் | 2 | 1 | 0 | 2 | +1.649 |
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் | 2 | 1 | 1 | 2 | -2.030 |
ஓமன் (E) | 2 | 0 | 2 | 0 | -3.375 |
குரூப் பி பிரிவு:
ஆசிய கோப்பை 2025 குரூப்-பி-யின் புள்ளிகள் அட்டவணையில் இலங்கை அணி 2 போட்டிகளில் 4 புள்ளிகளுடன் +1.546 என்ற நிகர ரன் ரேட்டுடன் முதலிடத்தில் உள்ளது. குரூப் பியில் யாரும் இன்னும் சூப்பர்-4க்கு தகுதி பெறவில்லை, ஆனால் ஹாங்காங் தனது மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது. ஆப்கானிஸ்தான் இரண்டு புள்ளிகள் மற்றும் +4.700 நிகர ரன் விகிதத்துடன் இரண்டாவது இடத்திலும், வங்கதேச அணி இரண்டு புள்ளிகள் மற்றும் -0.650 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
ALSO READ: ஆசியக் கோப்பையில் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறிய இந்திய அணி.. உற்சாகத்தில் இந்திய ரசிகர்கள்..!
அட்டவணை:
குரூப் ஏ | விளையாடிய போட்டிகள் | வெற்றி | தோல்வி | புள்ளிகள் | ரன் ரேட் |
இலங்கை | 2 | 2 | 0 | 4 | +1.546 |
ஆப்கானிஸ்தான் | 1 | 1 | 0 | 2 | +4.700 |
வங்கதேசம் | 2 | 1 | 1 | 2 | -0.650 |
ஹாங்காங் (E) | 3 | 0 | 3 | 0 | -2.151 |