India Cricket Sponsorship: இந்திய அணியின் புதிய ஸ்பான்சராக அப்போல்லோ டயர்ஸ்.. ஒரு போட்டிக்கு இவ்வளவு பணம் வழங்குமா..?
Apollo Tyres New Jersey Sponsor of India: இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சியில் உள்ள ட்ரீம் 11 இடம் பெற்றிருந்த இடத்தில் அப்பல்லோ டயர்ஸ் பெயர் பொறிக்கப்படும். 2025ம் ஆண்டு முதல் அப்பல்லோ டயர்ஸுடனான இந்திய கிரிக்கெட் அணியின் ஒப்பந்தம் 2027 வரை உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் (Indian Cricket Team) புதிய டைட்டில் ஸ்பான்சராக அப்பல்லோ டயர்ஸ் (Apollo Tyres) நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தமானது வருகின்ற 2027ம் ஆண்டு வரை அதாவது 2027 ஒருநாள் உலகக் கோப்பை வரை இருக்கும் என கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், அப்பல்லோ டயர்ஸ் பிசிசிஐக்கு (BCCI) ஒரு போட்டிக்கு ரூ. 4.5 கோடியை வழங்கும் என்று கூறப்படுகிறது. முன்னதாக, இந்திய அணியின் ஜெர்சி டைட்டில் ஸ்பான்சராக இருந்த ட்ரீம் 11 ஒரு போட்டிக்கு ரூ. 4 கோடியை வழங்கியது குறிப்பிடத்தக்கது. அப்பல்லோ டயர்ஸுடனான மொத்த ஒப்பந்தம் ரூ.579 கோடி மதிப்புடையது. இதில் 121 இருதரப்பு ஆட்டங்களும் 21 ஐசிசி போட்டிகளும் அடங்கும். ஜெர்சி ஸ்பான்சருக்கான ஏல செயல்முறை செப்டம்பர் 16ம் தேதியான இன்று நடந்தது.
அப்போல்லோ டயர்ஸ்:
🚨 APOLLO TYERS × INDIAN CRICKET 🚨
– Apollo Tyres will be the new Jersey Sponsor of the Indian team. [Sahil Malhotra from TOI]
4.5 Crore per game which is higher than the previous Jersey Sponsors. pic.twitter.com/voRGKLQtR2
— Johns. (@CricCrazyJohns) September 16, 2025
கிடைத்த தகவலின்படி, கேன்வா மற்றும் ஜே.கே. டயர் ஆகிய நிறுவனங்களும் இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்சராக வருவதற்கு கடுமையாக போட்டியிட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், அப்பல்லோ டயர்ஸ் நிறுவனம் இந்த இரண்டு நிறுவனங்களையும் பின்தள்ளி ஒப்பந்தத்தில் கையெழுத்தினர். முன்னதாக, பிர்லா ஆப்டஸ் பெயிண்ட்ஸும் ஸ்பான்சராக ஆர்வம் காட்டியது. ஆனால் அவர்கள் ஏலம் எடுக்க முன்வரவில்லை.




ALSO READ: ஆசியக் கோப்பையில் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறிய இந்திய அணி.. உற்சாகத்தில் இந்திய ரசிகர்கள்..!
ஏலத்தின்போது, அப்பல்லோ டயர்ஸ் இந்த பந்தயத்தில் வெற்றி பெற்றுள்ளது. அதன்படி, இப்போது இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சியில் உள்ள ட்ரீம் 11 இடம் பெற்றிருந்த இடத்தில் அப்பல்லோ டயர்ஸ் பெயர் பொறிக்கப்படும். 2025ம் ஆண்டு முதல் அப்பல்லோ டயர்ஸுடனான இந்திய கிரிக்கெட் அணியின் ஒப்பந்தம் 2027 வரை உள்ளது. இந்த காலக்கட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி சுமார் 130 சர்வதேச போட்டிகளில் விளையாடும்.
இந்த புதிய ஒப்பந்தத்திற்கு பிறகு, இந்திய அணியின் ஜெர்சியில் அப்பல்லோ டயர்ஸின் லோகோ இனி உதயமாகும். இந்தியாவில் உள்ள தொழில் வல்லுநர்களின் கூற்றுப்படி, புதிய ஒப்பந்தத்தின்படி இந்திய கிரிக்கெட் அணிக்கு சிறந்த பிராண்டின் ஆதரவை வழங்குவதோடு மட்டுமல்லாமல், அப்பல்லோ டயர்ஸின் பிராண்ட் மதிப்பை ஒரு புதிய நிலைக்கு கொண்டு செல்லும் என்று தெரிவிக்கின்றனர்.
ALSO READ: சூதாட்ட செயலி வழக்கு.. உத்தப்பா, யுவராஜ் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்!
முன்னதாக, இந்திய ஆண்கள் அணி 2025 ஆசிய கோப்பையில் எந்த ஸ்பான்சரும் இல்லாமல் விளையாடி வருகிறது. மேலும், மகளிர் இந்திய அணியும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஸ்பான்சர் இல்லாமல் விளையாடுகிறது. மத்திய அரசு சமீபத்தில் ஆன்லைன் கேமிங்கிற்கு தடை விதித்ததை தொடர்ந்து, இந்திய அணியின் டைட்டில் ஸ்பான்ஷராக இருந்த ட்ரீம் 11 விலகியது.