Mohammad Nabi: 40 வயதில் நங்கூர பேட்டிங்.. 5 பந்துகளில் 5 சிக்ஸர்கள்! கலக்கிய முகமது நபி..!
Srilanka vs Afganistan: துனித் வெல்லலாகேவுக்கு இது ஒரு பேரழிவு தரும் நாளாக அமைந்தது. முகமது நபியின் ஆட்டமிழப்பிற்குப் பிறகு, டி20 சர்வதேசப் போட்டிகளில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த இலங்கை பந்து வீச்சாளர்களின் பட்டியலில் துனித் வெலலேஜ் இரண்டாவது இடத்திற்கு முன்னேறினார்.

2025 ஆசிய கோப்பையின் (2025 Asia Cup) குரூப் பி போட்டியில் ஆப்கானிஸ்தானின் முகமது நபி தனது பேட்டிங்கால் அபாரமாக விளையாடினார். இலங்கை வீரர் துனித் வெல்லலாகே இறுதி ஓவரில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த 40 வயதான முகமது நபி (Mohammad Nabi) தொடர்ச்சியாக 5 சிக்ஸர்களை அடித்து சாதனை படைத்தார். இலங்கை அணி கடைசி ஓவரில் 32 ரன்கள் விட்டுக்கொடுத்த போதிலும், ஆப்கானிஸ்தான் அணியால் வெற்றி பெறவில்லை. இலங்கை அணி இந்தப் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சூப்பர் ஃபோர் சுற்றுக்கு முன்னேறியது.
ALSO READ: ஓமனுக்கு எதிரான போட்டி..! இந்திய அணிக்கு இவ்வளவு முக்கியமானதா..? புது சாதனையுடன் களம்!




என்ன நடந்தது..?
6️⃣6️⃣6️⃣6️⃣6️⃣
– 5 sixes in an over by a 40 year old Mohammad Nabi in Asia Cup 2025. 🤯pic.twitter.com/U5cnY0mr3y
— Mufaddal Vohra (@mufaddal_vohra) September 18, 2025
ஆப்கானிஸ்தான் அணியின் 20வது ஓவரை இலங்கை அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் துனித் வெல்லலாகே வீசினார். இந்த ஓவரின் முதல் 3 பந்துகளில் முகமது நபி சிக்ஸர்களை அடித்தார். அழுத்தத்தின் கீழ், துனித் வெல்லலாகே அடுத்த பந்தில் நோ-பால் வீசினார், நபி அதையும் சிக்ஸர் அடித்தார். பின்னர் அவர் ஐந்தாவது பந்தை ஸ்டேண்டிற்குள் அனுப்பினார். இருப்பினும், ஆறாவது பந்தில் அவர் ரன் அவுட் ஆனார். இந்த ஓவரில் முகமது நபி மொத்தமாக 32 ரன்கள் எடுத்தார். இது நபிக்கு முக்கியமான இன்னிங்ஸை மறக்கமுடியாததாக மாற்றியது.
ஆப்கானிஸ்தான் இன்னிங்ஸ்:
முகமது நபியின் இன்னிங்ஸ் ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. நபி 22 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகள் உட்பட 60 ரன்கள் எடுத்தார். டி20 சர்வதேச போட்டிகளில் ஆப்கானிஸ்தானுக்காக அதிவேக அரைசதத்தை அதாவது வெறும் 20 பந்துகளில் பதிவு செய்தார். முன்னதாக, இதே, 2025 ஆசிய கோப்பை போட்டியில் ஹாங்காங் அணிக்கு எதிராக அஸ்மத்துல்லா உமர்சாய் 20 பந்துகளில் இந்த மைல்கல்லை எட்டியிருந்தார்.
இலங்கை அணி வெற்றி:
169 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இலங்கை அணி அபாரமான தொடக்கத்தையே பெற்றது. டாப் ஆர்டர் ரன் ரேட்டை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டனர். இலங்கை அணி நடுவில் விக்கெட்டுகளை இழந்த போதிலும், பின் வரிசை வீரர்கள் தளர்ந்து போகாமல் ரன்களை குவித்தனர். இறுதியாக, 19வது ஓவரின் கடைசி பந்தில் இலங்கை அணி இலக்கை துரத்தியது. இதன் காரணமாக, இலங்கை அணி ஆப்கானிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து, சூப்பர் ஃபோர் சுற்றில் தங்கள் இடத்தைப் பிடித்தனர்.
ALSO READ: ஆசிய கோப்பை போட்டியில் அதிர்ச்சி.. இலங்கை வீரருக்கு நடந்த சோக சம்பவம்!
வெற்றிக்கு பிறகு நடந்த சோகம்:
துனித் வெல்லலாகேவுக்கு இது ஒரு பேரழிவு தரும் நாளாக அமைந்தது. முகமது நபியின் ஆட்டமிழப்பிற்குப் பிறகு, டி20 சர்வதேசப் போட்டிகளில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த இலங்கை பந்து வீச்சாளர்களின் பட்டியலில் துதுனித் வெலலேஜ் இரண்டாவது இடத்திற்கு முன்னேறினார். முன்னதாக, 2021ம் ஆண்டில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் கீரன் பொல்லார்ட் 6 பந்துகளுக்கு 6 சிக்ஸர்களை அகிலா தனஞ்சயா பந்தில் அடித்து, ஒரு ஓவரில் 36 ரன்கள் விட்டுக்கொடுத்திருந்தார். இதனை தொடர்ந்து, 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் இளம் வீரர் துனித் வெலலேவின் தந்தை உயிரிழந்தார்.