AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பள்ளி மாணவர்களிடேயே ஏற்பட்ட தகராறு… சிறுவனை கொலைசெய்த மர்ம கும்பல்

Boy Hacked To Death : தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பள்ளியில் மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக சிறுவன் மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவம் மாணவர்களிடையே வன்முறை போக்கு அதிகரித்து வருவதை காட்டுகிறது.

பள்ளி மாணவர்களிடேயே ஏற்பட்ட தகராறு… சிறுவனை கொலைசெய்த மர்ம கும்பல்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 27 Feb 2026 15:53 PM IST

தூத்துக்குடி, பிப்ரவரி 27 : கோவில்பட்டி அருகே பள்ளி மாணவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்னை காரணமாக சிறுவன் ஒருவரை மர்ம கும்பல் சரமாரியாக தாக்கியதில் அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சங்கரலிங்கபுரம் என்ற பகுதியை சேர்ந்தவர் திருப்பதி. இவரது மகன் மதன்ராஜ் பிப்ரவரி 26, 2026 அன்று இரவு சங்கரலிங்கபுரம் 3வது தெரு முனையில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அங்கு பைக்கில் ஹெல்மெட் போட்டு வந்த 7 பேர் கொண்ட கும்பல் மதன் ராஜ் மற்றும் அவர்களது நண்பர்களை தாக்கியுள்ளனர்.

பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட பிரச்னையால் சிறுவன் படுகொலை

இதில் அவரது நண்பர்கள் தப்பியோடிய நிலையில், மதன் ராஜ் மற்றும் கீழே தடுமாறி விழுந்துள்ளார். கீழே விழுந்த மதன் ராஜை அந்த கும்பல் கழுத்து, கை ஆகிய பகுதிகளில் சராமாரியாக வெட்டி விட்டு பைக்கில் தப்பி சென்றுள்ளனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை அப்பகுதியில் இருந்த மக்கள் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து சென்றுள்ளனர். மேலும் காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க : தமிழகத்தில் நீடிக்கும் மழை.. அடுத்த 7 நாட்களுக்கு எங்கெல்லாம் மழை இருக்கும்?

இந்த நிலையில் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் மதன்ராஜிற்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, உடனடியாக மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மரணம் சங்கரலிங்கபுரம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறுவனை கொன்ற மர்ம கும்பல்

இந்த நிலையில் மதன் ராஜ் தாக்கப்பட்ட பகுதியில் ஆய்வு செய்த கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநதான் உள்ளிட்ட காவல்துறையினர், அப்பகுதி மக்களிடையே விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில் பள்ளி மாணவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக சிலர் பஞ்சாயத்து பேச சென்ற நிலையில் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டதாகவும் அதன் காரணமாக மதன் ராஜ் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக சிறுவன் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதையும் படிக்க : திமுக முன்னாள் எம்எல்ஏ உள்பட 7 பேருக்கு ஆயுள் தண்டனை… கொலை வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

கடந்த சில ஆண்டுகளாக பள்ளி மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு மற்றும் வன்முறை போக்கு அதிகரித்திருப்பது மக்களிடையே மிகுந்த கவலையை அதிகரித்திருக்கிறது.  அதனை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

Follow Us