India vs Oman: இந்தியாவை ஓரங்கட்ட முயற்சித்த ஓமன்.. கடைசி நேரத்தில் கரை சேர்ந்து சூர்யா படை வெற்றி!
2025 Asia Cup: முதல் இன்னிங்ஸில் ஓமன் அணியின் பந்துவீச்சாளர்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக செயல்பட்டு, இந்தியாவை வெறும் 188 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினர். இலக்கை துரத்திய ஓமன் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.

2025 ஆசியக் கோப்பையில் (2025 Asia Cup) இந்தியா – ஓமன் அணிகள் தனது கடைசி லீக் போட்டியில் விளையாடி வருகிறது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். இதன் அடிப்படையில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 188 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியில் (Indian Cricket Team) அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 56 ரன்கள் எடுத்தார். இருப்பினும், ஓமனுக்கு எதிராக சுப்மன் கில் வெறும் 5 ரன்கள் மட்டுமே எடுத்து படுதோல்வியடைந்தார். ஹர்திக் பாண்ட்யா ஒரு ரன் மட்டுமே எடுத்தார். சிவம் துபே 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஓமன் அணியின் பந்துவீச்சாளர்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக செயல்பட்டனர், இந்தியாவை வெறும் 188 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினர். இலக்கை துரத்திய ஓமன் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.
ALSO READ: ஒரே போட்டியில் 2 முறை.. ஒரே பந்துவீச்சாளரிடம் ஒரே மாதிரி அவுட்டான ஹர்திக், அர்ஷ்தீப்!




189 ரன்கள் இலக்கு:
189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஓமன் அணியின் தொடக்க வீரர்களாக ஜந்திதர் சிங் மற்றும் ஆமிர் கலீம் களமிறங்கினர். இருவரும் ஆரம்பம் முதலே இந்திய அணியை சோதிக்க தொடங்கினர். பொறுமையாக தொடங்கிய இவர்கள், முதல் விக்கெட்டுக்கு 56 ரன்கள் குவித்தனர். 33 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து, ஜந்திதர் சிங் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஹமத் மிர்சா, ஆமிர் கலீமுடன் இணைந்து அசத்தலான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.
இவர்களின் பேட்டிங் பார்ட்னர்ஷிப்பை முறியடிக்க கேப்டன் சூர்யகுமார் யாதவ் 8 பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியும் எதுவும் வேலைக்கு ஆகவில்லை. தொடக்க வீரராக களமிறங்கிய கலீம் அரைசதம் அடிக்க, மறுபுறம், சிக்ஸர் அடித்து மிர்சா மிரட்டி கொண்டிருந்தார். ஓமன் அணி 17.4 ஓவரில் 149 ரன்கள் எடுத்து பயம் காட்டும்போது 64 ரன்கள் எடுத்திருந்த கலீம் தூக்கி அடிக்க, எல்லை கோட்டில் ஹர்திக் பாண்ட்யா மிக சிறப்பான கேட்சை பதிவு செய்தார். இதுதான் போட்டியின் முக்கிய தருணமாக மாறியது.
ALSO READ: 40 வயதில் நங்கூர பேட்டிங்.. 5 பந்துகளில் 5 சிக்ஸர்கள்! கலக்கிய முகமது நபி..!
பயம் காட்டிய ஓமன்:
Asia Cup T20 2025. India Won by 21 Run(s) https://t.co/XAsd5MHLmC #INDvOMA #AsiaCup2025
— BCCI (@BCCI) September 19, 2025
ஓமன் அணிக்கு கடைசி 12 பந்துகளில் 49 ரன்கள் தேவை என்ற நிலையில் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச வந்தார். முதல் பந்து டாட்டாக அமைய, 2வது பந்தில் பவுண்டரி அடித்து மிர்சா அரைசதத்தை பதிவு செய்தார். அடுத்த வைட்டாக மாறிய நிலையில் பதட்டம் தொற்றியது. அடுத்த 2 பந்துகளை டாட் செய்து ஹர்திக் பாண்ட்யா நம்பிக்கை கொடுத்தார். 18. 5 வது பந்தில் மிர்சா கேட்ச் கொடுத்த ஆட்டமிழக்க, கடைசி 6 பந்தில் ஓமன் வெற்றிக்கு 34 ரன்கள் தேவையாக இருந்தது. கடைசி ஓவர் வீசிய அர்ஷ்தீப் சிங் 1 விக்கெட்டுடன் 12 ரன்களை விட்டுக்கொடுக்க, இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.