ICC Women’s World Cup 2025: உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறை! முழுக்க பெண்கள் குழுவை நடுவராக களமிறக்கிய ஐசிசி!
ICC Reveals Elite Umpires Panel: 2025 ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில் 14 பேர் கொண்ட கள நடுவர்கள் குழுவில் கிளேர் போலோசாக், ஜாக்குலின் வில்லியம்ஸ் மற்றும் சூ ரெட்ஃபெர்ன் ஆகிய மூவரும் அடங்குவர், அவர்கள் தங்கள் மூன்றாவது மகளிர் உலகக் கோப்பையில் நடுவர்களாக களமிறங்குகின்றனர்.

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 (ICC Womens World Cup 2025) வருகின்ற 2025 செப்டம்பர் 30ம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த போட்டியின் வரலாற்றில் முதல்முறையாக, உலகக் கோப்பையில் பங்கேற்கும் போட்டி அதிகாரிகள் குழுவில் முழுவதும் பெண்கள் மட்டுமே இடம்பெறுவார்கள் என ஐசிசி (ICC) தெரிவித்துள்ளது. அதன்படி, இந்த குழுவில் 4 போட்டி அதிகாரிகள் மற்றும் 14 கள நடுவர்கள் உள்ளனர். இதில், 9 வெவ்வேறு நாடுகளை சேர்ந்த பெண்கள் உள்ளனர். இது மகளிர் கிரிக்கெட் மட்டுமல்லாமல், மகளிர் விளையாட்டு உலகில் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. பர்மிங்காவில் நடந்த 2022 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளிலும், சமீபத்தில் நடந்த 2 ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைகளிலும் பெண் போட்டி அதிகாரிகள் மட்டுமே இடம் பெற்றிருந்தனர். மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் இதுவே முதல் முறை.
ALSO READ: சூப்பர்-4 ஐ வெற்றியுடன் தொடங்கிய வங்கதேசம்… ஆசியக் கோப்பை புள்ளிகள் பட்டியல் அப்டேட்!




14 கள நடுவர்கள்:
14 பேர் கொண்ட கள நடுவர்கள் குழுவில் கிளேர் போலோசாக், ஜாக்குலின் வில்லியம்ஸ் மற்றும் சூ ரெட்ஃபெர்ன் ஆகிய மூவரும் அடங்குவர், அவர்கள் தங்கள் மூன்றாவது மகளிர் உலகக் கோப்பையில் நடுவர்களாக களமிறங்குகின்றனர். அதேநேரத்தில், லாரன் ஏஜென்பேக் மற்றும் கிம் காட்டன் ஆகியோர் தங்கள் இரண்டாவது உலகக் கோப்பையில் நடுவர்களாக உள்ளனர். முன்னதாக 2022ம் ஆண்டு நியூசிலாந்தில் ஆஸ்திரேலியா 7வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றபோது லாரன் ஏஜென்பேக் மற்றும் கிம் காட்டன் நடுவர்களாக இருந்தனர். 4 பேர் கொண்ட போட்டி நடுவர் குழுவில் ட்ரூடி ஆண்டர்சன், ஷான்ட்ரே ஃபிரிட்ஸ், ஜிஎஸ் லட்சுமி மற்றும் மிஷேல் பெரேரா ஆகியோர் அடங்குவர்.
ஜெய் ஷா தகவல்:
Umpires – females.
Match referees – females.
THE ICC WOMEN’S WORLD CUP WILL BE OFFICIATED BY ALL FEMALE PANEL. pic.twitter.com/CaQL3I50SG— maddyCric (@imRaghav001) September 12, 2025
இதுகுறித்து பேசிய ஐசிசி தலைவர் ஜெய் ஷா, “பெண்கள் கிரிக்கெட்டின் பயணத்தில் இது ஒரு தீர்க்கமான தருணம். இது விளையாட்டின் அனைத்து அம்சங்களிலும் இன்னும் பல முன்னோடி கதைகளுக்கு வழி வகுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். முழுக்க முழுக்க பெண்களை மட்டுமே கொண்ட போட்டி அதிகாரிகள் குழுவை உருவாக்குவது ஒரு பெரிய சாதனை மட்டுமல்ல, கிரிக்கெட்டில் பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதில் ஐசிசியின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பின் சக்திவாய்ந்த பிரதிபலிப்பாகும்.
இந்த வளர்ச்சி குறியீட்டு மதிப்பிற்கு அப்பாற்பட்டது. இது தெரிவுநிலை, வாய்ப்பு மற்றும் வருங்கால தலைமுறையினரை ஊக்குவிக்கக்கூடிய அர்த்தமுள்ள முன்மாதிரிகளை உருவாக்குவது பற்றியது. உலகளாவிய அரங்கில் நடுவராக சிறந்து விளங்குவதை முன்னிலைப்படுத்துவதன் மூலம், கிரிக்கெட்டில் தலைமைத்துவமும் செல்வாக்கும் பாலின சார்பு இல்லாதது என்ற அபிலாஷைகளைத் தூண்டி வலுப்படுத்துவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
ALSO READ: டாஸ்தான் முதல் டார்க்கெட்! போட்டா போட்டியில் இந்தியா – பாகிஸ்தான்.. இது ஏன் முக்கியம்..?
பெண்கள் விளையாட்டின் வளர்ச்சியில் ஒரு புதிய அத்தியாயத்தை அங்கீகரிப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். இந்த முயற்சியின் தாக்கம் இந்தப் போட்டியைத் தாண்டி, உலகெங்கிலும் உள்ள அதிகமான பெண்கள் நடுவர் வாழ்க்கையைத் தொடர ஊக்கமளிக்கும் மற்றும் விளையாட்டிற்குள் உள்ள சாத்தியக்கூறுகளை மறுவரையறை செய்ய உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றார்.
போட்டி நடுவர்:
ட்ரூடி ஆண்டர்சன்
ஷாண்ட்ரே ஃபிரிட்ஸ்
ஜி.எஸ்.லட்சுமி
மைக்கேல் பெரேரா