Abhishek Sharma: பாகிஸ்தான் செய்தது பிடிக்கல.. பேட்டிங்கால் பதிலடி! அபிஷேக் சர்மா ஓபன் டாக்..!
IND vs PAK Asia Cup 2025: இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது பாகிஸ்தான் அணிக்காக 5வது ஓவர் பந்து வீச வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவுஃப் வந்தார். அதிரடி காட்டி கொண்டிருந்த அபிஷேக் சர்மாவிடம் சென்று ரவுஃப் ஏதோ சொன்னார். அப்போது ரவுஃப்புக்கும், அபிஷேக் சர்மாவிற்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

2025 ஆசிய கோப்பையின் (2025 Asia Cup) சூப்பர் 4 போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி (Indian Cricket Team) பாகிஸ்தானை தோற்கடித்தது. துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்த போட்டியில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய அபிஷேக் சர்மா, ஷாஹீன் அப்ரிடி வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து மிரட்ட தொடங்கினார். தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிராக வெறும் 39 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் உதவியுடன் 74 ரன்கள் எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். இந்த அதிரடி இன்னிங்ஸிற்காக அபிஷேக் சர்மாவிற்கு (Abhishek Sharma) ஆட்ட நாயகன் விருதும் வழங்கப்பட்டது.
ALSO READ: பாகிஸ்தான் வொர்த் இல்ல.. நக்கலாக பதிலளித்த சூர்ய குமார் யாதவ்!




அபிஷேக் சர்மா vs ஹாரிஸ் ரவுஃப்:
Abhishek Sharma single-handedly reviving my interest in cricket 💥 pic.twitter.com/nThSZpRYGq
— EpicCommentsTelugu (@EpicCmntsTelugu) September 22, 2025
இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது பாகிஸ்தான் அணிக்காக 5வது ஓவர் பந்து வீச வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவுஃப் வந்தார். அதிரடி காட்டி கொண்டிருந்த அபிஷேக் சர்மாவிடம் சென்று ரவுஃப் ஏதோ சொன்னார். அப்போது ரவுஃப்புக்கும், அபிஷேக் சர்மாவிற்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் இருவரும் நேருக்கு நேர் சந்திக்க நெருங்கும்போது கள நடுவர் காஜி சோஹைல் தலையிட்டு பிரச்சனையை முடித்தார். அதே ஓவரின் கடைசி பந்தில் பவுண்டரி அடித்த சுப்மன் கில் ரவுஃப்பிடம் ஏதோ சொல்ல ஆட்டம் சூடுபிடித்தது. முன்னதாக, பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாஹீன் அப்ரிடியுடனும் களத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் சுப்மன் கில்.
அபிஷேக் சர்மா சொன்னது என்ன..?
ஆட்ட நாயகன் விருது வென்ற பிறகு பேசிய அபிஷேக் சர்மா, “ இன்று ஒரு சாதாரண நாளாகவே தொடங்கியது. எந்த காரணமும் இல்லாமல் அவர்கள் எங்களை நோக்கி வந்தது எனக்கு பிடிக்கவில்லை. அதனால் நான் பேட்டிங்கை கொண்டு பதிலடி கொடுத்தேன். அணிக்காக நன்றாக செயல்பட விரும்பினேன்.” என்றார்.
ALSO READ: ஆசிய கோப்பையில் மீண்டும் இந்தியா – பாகிஸ்தான் போட்டியா? சமன்பாடு என்ன சொல்கிறது..?
மேலும், சுப்மன் கில்லுடன் 105 ரன்கள் பார்டனர்ஷிப் குறித்து பேசிய அபிஷேக் சர்மா, “நாங்கள் பள்ளி நாட்களில் இருந்து ஒன்றாக விளையாடி வருகிறோம். ஒருவருக்கொருவர் துணையாக இருப்பதை ரசிக்கிறோம். இந்திய அணிக்காக இதை செய்ய நினைத்தோம். இன்றைய நாளும் அதற்கு ஏற்றார்போல் அமைந்தது. சுப்மன் கில் பதிலளித்த விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நானும் கடினமாக உழைக்கிறேன். எனது நாளாக எது அமைந்தாலும், எனது அணிக்காக வெற்றியை பெற்று தருவேன்” என்று கூறினார்.