India – Pakistan: ஆசிய கோப்பையில் மீண்டும் இந்தியா – பாகிஸ்தான் போட்டியா? சமன்பாடு என்ன சொல்கிறது..?
Asia Cup 2025: குருப் ஏ பிரிவில் இடம் பெற்றிருந்த இந்தியாவும் பாகிஸ்தானும் தற்போது ஆசியக் கோப்பை 2025 இன் சூப்பர் 4 சுற்றில் விளையாடி வருகின்றன. சூப்பர் 4 புள்ளிகள் பட்டியலில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி முதலிடத்தில் உள்ளது.

2025 ஆசிய கோப்பையில் (2025 Asia Cup) இந்தியா-பாகிஸ்தான் (India – Pakistan) போட்டியானது 2 முறை நடந்தும், இரு அணிகளும் மீண்டும் எப்போது மோதும் என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து வருகிறது. கடந்த 2025 செப்டம்பர் 9ம் தேதி தொடங்கிய ஆசியக் போட்டியில், இந்த இரு அணிகளும் இதுவரை இரண்டு முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். இரண்டிலும் இந்தியா வென்றது. இந்தநிலையில், இதே 2025 ஆசிய கோப்பை இந்தியாவும் பாகிஸ்தான் அணியும் மீண்டும் மோத வாய்ப்புள்ளது. அதன்படி, அடுத்த இந்தியா-பாகிஸ்தான் போட்டி எப்போது நடைபெறும்? அதற்காக சாத்தியக்கூறுகள் என்ன உள்ளிட்ட விவரங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.
சூப்பர்-4 சுற்றில் இப்போது நிலைமை என்ன?
குருப் ஏ பிரிவில் இடம் பெற்றிருந்த இந்தியாவும் பாகிஸ்தானும் தற்போது ஆசியக் கோப்பை 2025 இன் சூப்பர் 4 சுற்றில் விளையாடி வருகின்றன. சூப்பர் 4 புள்ளிகள் பட்டியலில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி முதலிடத்தில் உள்ளது. இதன்மூலம், இந்திய அணி 2 புள்ளிகள் மற்றும் 0.689 ரன் விகிதத்தை பெற்றுள்ளது. மறுபுறம், பாகிஸ்தான் இந்தியாவிடம் தோல்வியடைந்த பிறகு சூப்பர் 4 புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இதன் அடிப்படையில், பாகிஸ்தான் புள்ளிகள் இன்றி -0.689 என்ற ரன்ரேட்டை பெற்றுள்ளது. சூப்பர் 4 சுற்றில் தலா போட்டிகளில் விளையாடிய பிறகு, வங்கதேசம் இரண்டாவது இடத்திலும், இலங்கை மூன்றாவது இடத்திலும் உள்ளன. வங்கதேசத்தின் ரன் விகிதம் ப்ளஸிலும், இலங்கையின் ரன் விகிதமும் மைனஸிலும் உள்ளது.




சூப்பர் 4 சமன்பாடு என்ன..?
சூப்பர் 4 சுற்றில், ஒவ்வொரு அணியும் மற்ற மூன்று அணிகளுடன் தலா ஒரு போட்டியில் விளையாட வேண்டும். அதன் பிறகு புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு இடையே இறுதிப் போட்டி நடைபெறும். இதன் அடிப்படையில்தான் இந்தியாவுடன் சேர்ந்து வங்கதேசம் மற்றும் இலங்கையை வீழ்த்தி பாகிஸ்தானும் இறுதிப் போட்டிக்கு வரும் என்று தெரிகிறது.
இந்திய அணியின் அடுத்த போட்டி எப்போது..?
இந்திய அணி தனது அடுத்த போட்டியில் வங்கதேச அணியை வருகின்ற 2025 செப்டம்பர் 24ம் தேதியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில், இந்திய அணி வங்கதேசத்தை வீழ்த்தினால் பாகிஸ்தானின் பாதையை எளிதாக்கும். இறுதிப் போட்டியில் இந்தியாவின் இடம் கிட்டத்தட்ட உறுதியானது. மறுபுறம், இறுதிப் போட்டிக்கு வர பாகிஸ்தான் தனது அடுத்த இரண்டு போட்டிகளிலும் கட்டாய வெற்றி பெற்றாக வேண்டும். பாகிஸ்தானின் அடுத்த போட்டி வருகின்ற செப்டம்பர் 23ம் தேதி இலங்கைக்கு எதிராக உள்ளது. அதன் பிறகு, வருகின்ற 2025 செப்டம்பர் 25ம் தேதி வங்கதேசத்தை எதிர்கொள்ளும்.
ALSO READ: பாகிஸ்தான் வொர்த் இல்ல.. நக்கலாக பதிலளித்த சூர்ய குமார் யாதவ்!
2025 ஆசிய கோப்பை இறுதிப் போட்டி எப்போது?
2025 ஆசியக் கோப்பையின் இறுதிப் போட்டி வருகின்ற 2025 செப்டம்பர் 28ம் தேதி நடைபெறுகிறது. இந்தியாவும் பாகிஸ்தானும் இறுதிப் போட்டிக்கு வந்தால், அது இருவருக்கும் இடையிலான தொடர்ச்சியான மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை போட்டியாக அமையும். ஆனால் இந்தப் போட்டி முந்தைய இரண்டு ஞாயிற்றுக்கிழமையை விட இன்னும் சிறப்பானதாக இருக்கும்.