Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Quinton de Kock: ஒருநாள் ஓய்வு முடிவு வாபஸ்! 2 ஆண்டுகளுக்கு பிறகு.. பாகிஸ்தான் எதிராக களமிறங்கும் டிக் காக்..!

Quinton de Kock reverses ODI retirement: 2 ஆண்டுகளுக்கு பிறகு, குயிண்டன் டி காக் தென்னாப்பிரிக்கா அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாட தயாராக உள்ளார். அதன்படி, 2025 அக்டோபர்-நவம்பர் மாதங்களில் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்திற்கான தென்னாப்பிரிக்காவின் ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் டி காக் சேர்க்கப்பட்டுள்ளார்.

Quinton de Kock: ஒருநாள் ஓய்வு முடிவு வாபஸ்! 2 ஆண்டுகளுக்கு பிறகு.. பாகிஸ்தான் எதிராக களமிறங்கும் டிக் காக்..!
டிக் காக்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 22 Sep 2025 22:16 PM IST

தென்னாப்பிரிக்காவின் (South africa) அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் குயிண்டன் டி காக் (Quinton de Kock), தற்போது கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார். 32 வயதான குயிண்டன் டிக் காக், ஓய்வு முடிவை திரும்ப பெற்று ஒருநாள் சர்வதேச போட்டிகளில் மீண்டும் விளையாட தயாராகியுள்ளார். கடந்த 2021ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற டி காக், 2023 ஒருநாள் உலகக் கோப்பைக்கு பிறகு ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இருப்பினும், டி20 சர்வதேச போட்டிகளில் இருந்து இதுநாள் வரை ஓய்வு பெறுவதாக அறிவிக்கவில்லை.

ஒருநாள் போட்டிகளில் ஓய்வு முடிவை திரும்ப பெற்ற டி காக்:

2 ஆண்டுகளுக்கு பிறகு, குயிண்டன் டி காக் தென்னாப்பிரிக்கா அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாட தயாராக உள்ளார். அதன்படி, 2025 அக்டோபர்-நவம்பர் மாதங்களில் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்திற்கான தென்னாப்பிரிக்காவின் ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் டி காக் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், 2025 அக்டோபர் 11ம் தேதி நமீபியாவுக்கு எதிரான ஒரே ஒரு டி20 போட்டிக்கும் அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ALSO READ: பாகிஸ்தான் வொர்த் இல்ல.. நக்கலாக பதிலளித்த சூர்ய குமார் யாதவ்!

டி காக் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை:


தென்னாப்பிரிக்கா அணிக்காக குயிண்டன் டி காக் இதுவரை 155 ஒருநாள் போட்டி, 54 டெஸ்ட் போட்டி, 92 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில், 155 ஒருநாள் போட்டிகளில் 21 சதங்கள் மற்றும் 30 அரைசதங்களுடன் 6770 ரன்களும், 54 டெஸ்ட் போட்டிகளில் 6 சதங்கள் மற்றும் 22 அரைசதங்களுடன் 3300 ரன்களும், 92 டி20 போட்டிகளில் 1 சதம் மற்றும் 16 அரைசதங்களுடன் 2584 ரன்களும் அடித்துள்ளார்.

பாகிஸ்தான் சுற்றுப்பயணத்திற்கான தென்னாப்பிரிக்க ஒருநாள் அணி:

மேத்யூ பிரீட்ஸ்கே (கேப்டன்), கார்பின் போஷ், டெவால்ட் ப்ரூவிஸ், நந்த்ரே பர்கர், ஜெரால்ட் கோட்ஸி, குயின்டன் டி காக், டோனி டி ஜோசி, டோனோவன் ஃபெரீரா, பிஜோர்ன் ஃபோர்டுயின், ஜார்ஜ் லிண்டே, குவேனா எம்பாகா, லுங்கி நிகிடி, ந்காபா பீட்டர்சன், லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், சினெதெம்பா கெஷில்.

பாகிஸ்தான் சுற்றுப்பயணத்திற்கான தென்னாப்பிரிக்கா T20I அணி:

டேவிட் மில்லர் (கேப்டன்), கார்பின் போஷ், டெவால்ட் ப்ரூயிஸ், நான்ட்ரே பர்கர், ஜெரால்ட் கோட்ஸி, குயின்டன் டி காக், டொனோவன் ஃபெரீரா, ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஜார்ஜ் லிண்டே, க்யூனா எம்பாகா, லுங்கி என்கிடி, லுங்கி பியர்ஸ், நகாபா பியர்ஸ் லிசாட் வில்லியம்ஸ்

ALSO READ: பாகிஸ்தான் செய்தது பிடிக்கல.. பேட்டிங்கால் பதிலடி! அபிஷேக் சர்மா ஓபன் டாக்..!

நமீபியாவுக்கு எதிரான டி20 போட்டிக்கான தென்னாப்பிரிக்கா அணி:

டோனோவன் ஃபெரீரா (கேப்டன்), நாண்ட்ரே பர்கர், ஜெரால்ட் கோட்ஸி, குயின்டன் டி காக், ஜார்ன் ஃபோர்டுயின், ரீசா ஹென்ட்ரிக்ஸ், ரூபின் ஹெர்மன், குவெனா எம்பாகா, ரிவால்டோ மூன்சாமி, நகாபா பீட்டர்ஸ், லுவான், ஜேட்ரீல், ப்ரீடோரிஸ், ஆண்ட்ரேலி வில்லியம்ஸ்