சிலம்பரசன் – விஜய் சேதுபதியின் காட்சி பிரம்மாண்டமாக இருக்கும் – அரசன் படம் குறித்து அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்!
Kalaipuli S Thanu About Arasan Movie : நடிகர் சிலம்பரசன் மற்றும் இயக்குநர் வெற்றிமாறனின் கூட்டணியில் மிக பிரம்மாண்டமாக தயாராகிவரும் படம்தான் அரசன். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட இப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, அரசன் படத்தின் அப்டேட்டை தெரிவித்துள்ளார்.
நடிகர் சிலம்பரசனின் (Silambarasan) 49வது திரைப்படமாக மிக பிரம்மாண்டமாக தயாராகிவரும் படம் அரசன் (Arasan). இந்த படத்தை இயக்குநர் வெற்றிமாறன் (Vetrimaaran) இயக்க, சிலம்பரசன் லீட் கதாநாயகனாக நடித்த்துவருகிறார். இந்த படமானது நடிகர் தனுஷின் (Dhanush) நடிப்பில் வெளியான வட சென்னை (Vada Chennai) படத்தின் டைம் லைனில் உருவாக்கப்பட்டு வருகிறதாம். சிலம்பரசனின் இந்த திரைப்படத்தை வீ கிரியேஷன் நிறுவனத்தின் கீழ், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு (Kalaipuli S Thanu) தயாரித்துவருகிறார். இப்படத்தில் சிம்புவுடன் நடிகர்கள் விஜய் சேதுபதி (Vijay Sethupathi), சமுத்திரக்கனி, டீஜெய், யோகலட்சுமி மற்றும் ஆண்ட்ரியா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்துவருகின்றனர்.
இந்த படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் கோவில்பட்டியில் நடைபெற்றிருந்த நிலையில், 2வது கட்ட ஷட்டிங் இன்னும் தொடங்கவில்லை. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, அரசன் திரைப்படம் குறித்து சூப்பர் அப்டேட்டை தெரிவித்துள்ளார்.




இதையும் படிங்க: மீண்டும் இயக்குநராக புது படத்தை இயக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் – தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!
அரசன் திரைப்படம் குறித்து கலைப்புலி எஸ் தாணு பேச்சு :
அந்த நேர்காணலில் பேசிய அரசன் பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, “சிலம்பரசன் சில நாட்களுக்கு முன்புதான் வெளிநாட்டிலிருந்து வந்தார், இதையடுத்து அரசன் படத்தின் ஷூட்டிங்கிற்காக வெற்றிமாறனுடன் பேசியிருந்தார். அடுத்தகட்ட ஷூட்டிங் வரும் 2026 மார்ச் மாதத்தில் தொடங்குகிறது. இப்படத்தில் சிலம்பரசன் மற்றும் விஜய் சேதுபதி மோதும் காட்சிகள் மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும்.
இதையும் படிங்க: டான் படத்தின் கதையை கேட்கும்போதே சொன்னேன்… சமுத்திரக்கனியின் சுவாரஸ்ய பேச்சு
மேலும் சிலபேர் வியூஸ் பெறுவதற்காக விஜய் சேதுபதி அரசன் படத்திலிருந்து விலகிவிட்டார் என போலியான வதந்திகளை பரப்பி வருகிறார்கள். அது உண்மை அல்ல. இந்த அரசன் படமானது சிலம்பரசனுக்கு ஒரு மைல்கல்லை எட்டும் படமாக இருக்கும்” என அதில் அவர் தெரிவித்துள்ளார்.
அரசன் திரைப்படம் குறித்து தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு பேசியது குறித்த பதிவு:
Producer #Thanu:
“#SilambarasanTR has came from the abroad 3 days back & discussed with VetriMaaran about #Arasan shooting🎬. Next schedule begins in March. #STR & #Vijaysethupathi face off scene gonna be a blast🥶🔥. Some have spread rumour that VJS is out of the project to gain… pic.twitter.com/r5GxxdJU20— AmuthaBharathi (@CinemaWithAB) February 27, 2026
அரசன் திரைப்படமானது மிக பிரம்மாண்டமாக தயாராகிவரும் நிலையில், இந்த 2026ம் ஆண்டிற்குள் வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துவரும் நிலையில், இப்படமானது மிக பிரம்மாண்ட கூட்டணி படமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் பாடல்கள் குறித்த அப்டேட்டுகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.