AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

டான் படத்தின் கதையை கேட்கும்போதே சொன்னேன்… சமுத்திரக்கனியின் சுவாரஸ்ய பேச்சு

Samuthirakani talks about movies success: தென்னிந்திய சினிமாவில் பிரபல இயக்குநராகவும் நடிகராகவும் வலம் வருபவர் சமுத்திரக்கனி. இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் படத்தின் கதையை கேட்கும்போதே வெற்றியடையுமா இல்லையா என்பதை கண்டுபிடிப்பேன் என்று தெரிவித்து உள்ளார். அது தற்போது வைரலாகி வருகின்றது.

டான் படத்தின் கதையை கேட்கும்போதே சொன்னேன்… சமுத்திரக்கனியின் சுவாரஸ்ய பேச்சு
சமுத்திரக்கனிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 26 Feb 2026 14:54 PM IST

தமிழ் சினிமாவில் கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் டான். இந்தப் படத்தை இயக்குநர் சிபி சக்ரவர்த்தி எழுதி இயக்கி இருந்தார். இவர் இந்தப் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் சிவ்கார்த்திகேயன் நாயகனாக நடித்து இருந்தார். அவருடன் இணைந்து நடிகர்கள்பி.சமுத்திரக்கனி, எஸ்.ஜே. சூர்யா, பிரியங்கா மோகன், சூரி, பால சரவணன், ஆர்ஜே விஜய், சிவாங்கி கிருஷ்ணகுமார், சிங்கம்புலி, முனிஷ்காந்த், காளி வெங்கட், ராஜு ஜெயமோகன், ஷாரிக் ஹாசன், ஸ்வேதா வெங்கிட், ராதா ரவி, ஆதிரா பாண்டிலட்சுமி, கஜராஜ், மனோபாலா, ஜார்ஜ் மரியன், மகேஸ்வரி சாணக்கியன், கவிதா பாரதி, கௌதம் வாசுதேவ் மேனன், நாகூரான் ராமச்சந்திரன் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.

மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. பிரபல தயாரிப்பு நிறுவனங்களான லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் சார்பாக தயாரிப்பாளர்கள் அல்லிராஜா சுபாஸ்கரன் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் இணைந்து தயாரித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

டான் படத்தின் கதையை கேட்கும்போதே சொன்னேன்:

இந்த நிலையில் டான் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தையாக நடிகர் சமுத்திரக்கனி நடித்து இருந்தார். இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் பேசியதாவது, ஒரு படத்தின் கதையை கேட்கும் போதே பாதி கதையை கேட்ட பிறகே படம் வெற்றியடையுமா இல்லையா என்பதை கண்டுபிடித்துவிடுவேன். அப்படிதான் சிபி சக்ரவர்த்தி டான் படத்தின் கதையை சொல்லும் போதே படம் நிச்சயமாக சூப்பர் ஹிட் அடிக்கும் என்று கூறினேன். அதே மாதிரி படம் நல்ல வரவேற்பைப் பெற்றது என்று தெரிவித்து இருந்தார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… காமெடி மட்டும் இல்ல… கருத்தும் இருக்கு – ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில் படத்தை கண்டிப்பா பாருங்க

இணையத்தில் வைரலாகும் சமுத்திரக்கனியின் பேச்சு:

Also Read… கோலாகலமாக நடந்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா திருமணம்.. நெருங்கிய உறவினர்கள் பங்கேற்பு!

Follow Us