IND vs PAK: பும்ரா தரமான செய்கை.. நொந்துபோன பாகிஸ்தான் வீரர்!
Jasprit Bumrah vs Haris Rauf: ஆசியக் கோப்பை 2025 இறுதிப்போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. இப்போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா செய்த செயல் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

ஆசியக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா செய்த செயல் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. கடந்த 2025, செப்டம்பர் 9ம் தேதி தொடங்கிய ஆசியக் கோப்பை தொடர் 2025, செப்டம்பர் 28 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. 8 அணிகள் இரு குழுக்களாக களமிறங்கிய நிலையில் இந்தியா, இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய 4 அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற சூப்பர் 4 ஆட்டங்களின் முடிவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதிப் பெற்றது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே நேற்று (செப்டம்பர் 28) இறுதிப்போட்டி நடைபெற்றது.
இந்தியா – பாகிஸ்தான் இன்னிங்ஸ்
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களம் கண்ட பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து களம் கண்ட இந்திய அணி 19.4 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.




இப்படியான நிலையில் ஆசியக் கோப்பை தொடரில் ஒரு தோல்வியைக் கூட சந்திக்காத அணி என்ற பெருமையை இந்தியா பெற்றது. அதேசமயம் இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் லீக், சூப்பர் 4, இறுதிப் போட்டி என 3 முறை மோதிய நிலையில், அதில் இந்திய அணியே வெற்றி பெற்றது.
இதையும் படிங்க: வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு வேண்டாம்! 5 வீரர்களுக்கு வாய்ப்பை மறுத்த பிசிசிஐ.. காரணம் என்ன?
சர்ச்சைகளுக்கு பதிலடி
மேலும் இந்தியா – பாகிஸ்தான் போட்டி சர்ச்சைகள் பஞ்சமில்லாமல் சென்றது. அதாவது சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானுடனான மோதலின் போது, 2022 உலகக் கோப்பையின் போது விராட் கோலி அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்களை அடித்தது குறித்து இந்திய ரசிகர்கள் பவுண்டரி பகுதியில் நின்று கொண்டிருந்த பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் ரவூஃப்பை கிண்டல் செய்து கொண்டே இருந்தனர்.
இதனால் டென்ஷனான அவர் பகல்ஹாம் தாக்குதல் பதிலடியாக நடந்த ஆபரேஷன் சிந்தூர் திட்டத்தின்போது இந்திய ஜெட் விமானத்தை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதாக கூறப்பட்டு வரும் ஆதாரமற்ற தகவலைக் குறிக்கும் வகையில் சைகையைச் செய்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அவர் மீது ஐசிசி நிர்வாகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதில் ஹாரிஸ் ரவூஃப்புக்கு அவரது போட்டிக் கட்டணத்தில் 30 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: ரோகித் சர்மாவுக்கு பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர் ? பிசிசிஐயின் மாஸ்டர் பிளான்!
பும்ரா கொடுத்த வழியனுப்பும் செய்கை
Bumrah just did this. pic.twitter.com/7vZHesFKFM
— Shiv Aroor (@ShivAroor) September 28, 2025
இந்நிலையில் ஆசியக்கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் ரவூஃப் பேட் செய்த நிலையில், அவர் பும்ரா பந்து வீச்சில் ஸ்டம்புகள் சிதற வெளியேறினார். அப்போது அவரைப் பார்த்து பும்ரா, விமான விபத்து சைகையை செய்து காட்டினார். இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.