Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ரோகித் சர்மாவுக்கு பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர் ? பிசிசிஐயின் மாஸ்டர் பிளான்!

BCCI Big Move: இந்திய அணியின் ஒருநாள் போட்டிகளின் கேப்டன் ரோகித் சர்மா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியுடன் ஓய்வு பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து அவருக்கு பதிலாக இந்திய அணியின் ஒருநாள் போட்டிகளின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயரை தேர்வு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரோகித் சர்மாவுக்கு பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர் ? பிசிசிஐயின் மாஸ்டர் பிளான்!
ரோகித் சர்மா - ஸ்ரேயாஸ் ஐயர்
Karthikeyan S
Karthikeyan S | Published: 21 Aug 2025 11:11 AM

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ இந்திய அணியின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு முக்கிய எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இந்திய அணியின் ஒரு நாள் போட்டிகளின் கேப்டனாக ரோகித் சர்மா (Rohit Sharma) இருந்து வரும் நிலையில் அவர், வருகிற ஆஸ்திரேலியா தொடருடன் ஒய்வு பெற வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு பிறகு அவரது இடத்தை நிரப்ப, ஒரு வலுவான வீரரைத் தேர்ந்தெடுப்பது முக்கியம். இந்த நிலையில் ரோகித் சர்மாவுக்கு பதிலாக ஸ்ரேயாஸ் ஐயரை கேப்டனாக களமிறக்க, பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

கேப்டனாக ரோகித் சர்மாவின் பங்களிப்பு

ரோகித் சர்மா இந்திய அணிக்கு கேப்டனாக பல வெற்றிகளைக் குவித்தவர். இந்த நிலையில் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற அவர், ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் ஒருநாள் போட்டிகளில் இருந்தும் அவர் ஓய்வு பெற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக வருகிற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டிகளுக்கு பிறகு அவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரை இந்திய அணியின் வழிகாட்டியாக, முக்கிய பொறுப்பு வழங்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் இடத்தை நிரப்ப அவர் அளவுக்கு திறமையான, அனுபவம் வாய்ந்த கேப்டனை தேர்ந்தெடுப்பது முக்கியம்.

இதையும் படிக்க : மீண்டும் கழட்டிவிடப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர்.. கேள்வி எழுப்பிய ரசிகர்கள்.. பிசிசிஐ விளக்கம்..!

சுப்மன் கில் சிறப்பான செயல்பாடு

கடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சுப்மன் கில் சிறப்பான பங்களிப்பை வழங்கினார். ஒரு கேப்டனாகவும் அவர்  அணியை சிறப்பாக வழிநடத்தினார். சமீபத்தில் ஆசிய கோப்பை அணியை அறிவிக்கும்போது தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் எதிர்காலத்தில் டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகள் என 3 ஃபார்மெட்களிலும் சுப்மன் கில் இந்திய அணியை திறம்பட வழிநடத்தக் கூடியவர் என தெரிவித்தார். ஆனால் தற்போது பிசிசிஐ, சுப்மன் கில்லுக்கு அதிக வேலைப்பளு கொடுப்பது சரியாக இருக்காது என நினைக்கிறது. அவர் ஏற்கனவே டெஸ்ட் அணியை வழிநடத்துகிறார். தற்போது ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் சுப்மன் கில் துணைக் கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் தற்போதைய சூழ்நிலையில் மூன்று ஃபார்மெட்களிலும் ஒருவரை கேப்டனாக வைத்திருப்பது சாத்தியமில்லை என பிசிசிஐ நினைக்கிறது. இதனால் நீண்ட காலத்திற்கு ஒரு நாள் போட்டிக்கு என தனியாக கேப்டனாக நியமிக்க திட்டமிட்டுள்ளது.

இதையும் படிக்க : 10 வினாடி விளம்பரத்திற்கு ரூ. 16 லட்சம் பணம்.. களைகட்ட தொடங்கிய 2025 ஆசியக் கோப்பை..!

இந்திய அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர்?

தற்போது 30 வயதாகும் ஸ்ரேயா ஐயர் கேப்டனாக ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். கடந்த 2025 ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை இருதிப்போட்டி வரை அழைத்து சென்றார். மேலும் இந்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியில் முக்கிய பங்கு வகித்தார். தொடர்ந்து 5 போட்டிகளில் 243 ரன்கள் எடுத்தார். மேலும் ஒரு போட்டிகளை தவிர மற்ற 4 போட்டிகளிலும், 56, 79, 45, 48 என ஸ்கோர் செய்தார்.  இதுவரை 70 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 2845 ரன்கள் குவித்துள்ள அவர் 48.22 சராசரி வைத்திருக்கிறார். இதுவரை 5 சதங்கள் குவித்திருக்கிறார். தொடர்ந்து தனது ஒரு நாள் போட்டிகளில் நம்பகமான வீரராக இருந்து வருகிறார். எனவே அவரை இந்திய அணியின் கேப்டனாக தேர்வு செய்ய பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. குறிப்பாக 2027 ஆம் ஆண்டு வரை அவர் கேப்டனாக செய்லபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.