2025 Asia Cup: 2025 ஆசியக் கோப்பை.. இந்திய அணியின் தொடக்க வீரர்கள், பந்துவீச்சாளர்கள் யார்?
2025 Asia Cup India's Probable XI: 2025 ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியின் தேர்வு குழப்பத்தில் உள்ளது. தொடக்க வீரர்களாக கில், ஜெய்ஸ்வால், சாம்சன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இளம் வீரர்களின் சேர்க்கை, அனுபவம் வாய்ந்த வீரர்களுடன் கலந்து இந்திய அணியின் வெற்றிக்கான வாய்ப்பை அதிகரிக்கும்.

2025 ஆசியக் கோப்பையை வெல்ல வேண்டும் என்று பங்கேற்கும் 8 அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. வருகின்ற 2025 செப்டம்பர் 9ம் தேதி முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 2025 ஆசியக் கோப்பை (2025 Asia Cup) தொடங்கும் நிலையில், இதற்கு ஒருநாள் கழித்து அதாவது 2025 செப்டம்பர் 10ம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிராக இந்திய அணி (Indian Cricket Team) தனது முதல் போட்டியில் விளையாடுகிறது. இதில் பங்கேற்பதற்காக அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு நாளை அதாவது 2025 செப்டம்பர் 19ம் தேதி இந்திய அணியை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2025 ஆசியக் கோப்பையில் களமிறங்கும் இந்திய அணி முற்றிலும் இளம் படையாக இருக்குமா அல்லது அனுபவம் மற்றும் இளம் படை கலந்த அணியாக இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
கில், ஜெய்ஸ்வால் அல்லது சாம்சன்: யார் தொடக்க வீரர்?
2025 ஆசியக் கோப்பையில் இந்திய அணிக்காக யார் தொடக்க வீரர்களாக களமிறங்குவார்கள் என்பது தெரியவில்லை. அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் கடந்த 12 டி20 போட்டிகளில் இந்தியாவின் சிறந்த தொடக்க ஜோடியாக உள்ளனர். 2025ம் ஆண்டு தொடக்கத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் அபிஷேக் 219.68 என்ற அபாரமான ஸ்ட்ரைக் ரேட்டில் 279 ரன்கள் எடுத்து அதிவேக சாதனை படைத்தார், இதில் வான்கடேயில் 54 பந்துகளில் 135 ரன்கள் எடுத்தார்.
ALSO READ: ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆதிக்கம்.. இத்தனை வெற்றி கண்டதா இந்திய அணி..?




அதேநேரத்தில், சஞ்சு சாம்சன் டி20 போட்டிகளில் அடுத்தடுத்து 3 சதம் அடித்து கலக்கி வருகிறார். கடந்த ஆண்டு உலகக் கோப்பையில் ஜெய்ஸ்வால் மாற்று தொடக்க வீரராக இருந்தார், அதே நேரத்தில் தற்போது இந்தியாவின் டெஸ்ட் கேப்டனாக இருக்கும் கில், ஜிம்பாப்வே அணிக்கு எதிராக கேப்டனாகவும், இலங்கை அணிக்கு எதிராக துணை கேப்டனாகவும் பணியாற்றினார். தேர்வாளர்கள் மாற்றத்தை நாடினால், சாம்சனை வெளியேற்றி கில்லுக்கு வாய்ப்பு வழங்கலாம்.
மிடில் ஆர்டரில் திலக் வர்மாவா..? ஷ்ரேயாஸ் ஐயரா..?
இந்திய அணிக்காக 3வது இடத்தில் யார் களமிறங்குவார்கள் என்பது மிகப்பெரிய கேள்வியாக இருந்து வருகிறது. தென்னாப்பிரிக்காவில் திலக் வர்மா சிறப்பாக செயல்பட்டாலும், ஐபிஎல் 2025 சீசனில் மந்தமாகவே விளையாடினார். அதேநேரத்தில் ஷ்ரேயாஸ் ஐயர், பஞ்சாப் கிங் அணிக்காக சிறப்பாக விளையாடியது மட்டுமின்றி 600க்கும் மேற்பட்ட ரன்களை குவித்தார். இதனால், 3வது இடத்தில் திலக் வர்மாவா..? ஷ்ரேயாஸ் ஐயரா..? என்ற கேள்வி எழுகிறது. சூர்யகுமார், ஹர்திக் பாண்ட்யா மற்றும் அக்சர் படேல் ஆகியோர் இடம் உறுதியாக உள்ளதால், பினிஷர் இடத்தில் ஜிதேஷ் சர்மா இறங்கலாம்.
ALSO READ: 10 வினாடி விளம்பரத்திற்கு ரூ. 16 லட்சம் பணம்.. களைகட்ட தொடங்கிய 2025 ஆசியக் கோப்பை..!
வேகப்பந்து வீச்சில், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோரின் இடம் உறுதி செய்யப்பட்டாலும், மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர் இடத்திற்கு பிரசித் கிருஷ்ணாவும், ஹர்ஷித் ராணாவும் போட்டியிடுகின்றனர். சுழற்பந்தை பொறுத்தவரை காயத்திலிருந்து மீண்டு வந்த குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி இடையே போட்டி நிலவலாம். கீழ் மிடில் ஆர்டரைப் பொறுத்தவரை, சிவம் துபே, ரியான் பராக், ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ராமன்தீப் சிங் மற்றும் விப்ராஜ் நிகம் போன்ற இளம் வீரர்கள் அனைவரும் தொடர்ந்து போட்டியில் உள்ளன. 2025 ஆசியக் கோப்பையை கொண்டே 2026 டி20 உலகக் கோப்பைக்கான வலுவான இந்திய அணியை தேர்வாளர்கள் உருவாக்க முடியும்.