Asia Cup 2025: பாபர், ரிஸ்வான் நீக்கம்! இளம் வீரர் தலைமையில் களமிறங்கும் இறங்கும் பாகிஸ்தான் அணி!
Pakistan's Asia Cup 2025 Squad: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் 2025 ஆசியக் கோப்பைக்கான 17 பேர் கொண்ட டி20 அணியை அறிவித்துள்ளது. நட்சத்திர வீரர்கள் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் அணியில் இடம் பெறாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வரவிருக்கும் டி20 முத்தரவு தொடர் மற்றும் 2025 ஆசியக் கோப்பைக்கான 17 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது. அதன்படி, பாகிஸ்தான் டி20 அணியின் கேப்டனாக சல்மான் அலி ஆகா (Salman Ali Agha) தொடர்ந்து செயல்படுவார் என்று தெரிவித்துள்ளது. ஆசிய கோப்பைக்கு முன், ஷார்ஜாவில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுடன் முத்தரப்பு தொடரில் பாகிஸ்தான் விளையாடுகிறது. இது 2025 ஆசியக் கோப்பைக்காக பாகிஸ்தான் அணியின் முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. அறிவிக்கப்பட்ட பாகிஸ்தான் அணியில் நட்சத்திர வீரர்களான பாபர் அசாம் (Babar Azam) மற்றும் முகமது ரிஸ்வான் (Mohammad Rizwan) என இரு அணிகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் அணியில் இடம்பெறாத பாபர் அசாம், முகமது ரிஸ்வான்:
அனுபவ வீரர்களான பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் 2025 ஆசியக் கோப்பைக்கான டி20 அணியில் இடம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது நடக்கவுல்லை. அதாவது, பாகிஸ்தான் தேர்வாளர்கள் அணியின் நலனை கருத்தில்கொண்டு, வரவிருக்கும் டி20 முத்தரப்பு தொடர் மற்றும் ஆசியக் கோப்பை 2025க்கான இளம் மற்றும் திறமையான வீரர்களை தேர்ந்தெடுத்துள்ளனர்.




ALSO READ: இந்திய அணியின் அடுத்த போட்டி எப்போது…? யாருடன்..? முழு விவரம் இதோ!
அறிவிக்கப்பட்ட பாகிஸ்தான் அணி:
🚨 NO BABAR & RIZWAN IN PAKISTAN SQUAD FOR ASIA CUP 🚨
Salman Ali (C), Abrar, Faheem, Fakhar, Rauf, Hasan Ali, Hasan Nawaz, Talat, Khushdil Shah, Haris (WK), Nawaz, Waseem Jnr, Farhan, Saim Ayub, Salman Mirza, Shaheen, Sufyan Moqim. pic.twitter.com/9jfFKEoXwk
— Johns. (@CricCrazyJohns) August 17, 2025
சல்மான் அலி ஆகா (கேப்டன்), அப்ரார் அகமது, ஃபஹீம் அஷ்ரஃப், ஃபகர் ஜமான், ஹாரிஸ் ரவூப், ஹசன் அலி, ஹசன் நவாஸ், ஹுசைன் தலாத், குஷ்தில் ஷா, முகமது ஹாரிஸ் (விக்கெட் கீப்பர்), முகமது நவாஸ், முகமது வாசிம் ஜூனியர், சஹிர்ஹான், சஹிர்ஹான். ஷஹீன் ஷா அப்ரிடி, சுஃபியான் முகிம்
முத்தரப்பு தொடர் அட்டவணை:
- 2025 ஆகஸ்ட் 29- ஆப்கானிஸ்தான் vs பாகிஸ்தான்
- 2025 ஆகஸ்ட் 30- ஐக்கிய அரபு எமிரேட்ஸ் vs பாகிஸ்தான்
- 2025 செப்டம்பர் 1- ஐக்கிய அரபு எமிரேட்ஸ் vs ஆப்கானிஸ்தான்
- 2025 செப்டம்பர் 2- பாகிஸ்தான் vs ஆப்கானிஸ்தான்
- 2025 செப்டம்பர் 4- பாகிஸ்தான் vs ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
- 2025 செப்டம்பர் 5- ஆப்கானிஸ்தான் vs ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
- 2025 செப்டம்பர் 7- இறுதிப் போட்டி
எட்டு அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை போட்டி வருகின்ற 2025 செப்டம்பர் 9 முதல் 28 வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அபுதாபி மற்றும் துபாயில் நடைபெறும். இதில், குரூப் ஏ பிரிவில் இந்தியா, ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பாகிஸ்தான் அணியும், குரூப் பி பிரிவில் ஹாங்காங், இலங்கை, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம்பெற்றுள்ளன.
ALSO READ: இந்தியா – பாகிஸ்தான் மோதலில் எந்த பிரச்சனையும் இல்லை.. ஆதரவு தெரிவித்த சவுரவ் கங்குலி!
பாகிஸ்தான் போட்டிகள் (ஆசிய கோப்பை 2025)
- 2025 செப்டம்பர் 12 – ஓமன் vs பாகிஸ்தான், துபாய்
- 2025 செப்டம்பர் 14 – இந்தியா vs பாகிஸ்தான், துபாய்
- 2025 செப்டம்பர் 17 – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் vs பாகிஸ்தான், துபாய்