Asia Cup 2025: இந்தியா – பாகிஸ்தான் மோதலில் எந்த பிரச்சனையும் இல்லை.. ஆதரவு தெரிவித்த சவுரவ் கங்குலி!
India-Pakistan Clash: 2025 ஆசிய கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி குறித்த சர்ச்சைக்கு மத்தியில், சவுரவ் கங்குலி தனது ஆதரவை தெரிவித்துள்ளார். பஹல்காம் தாக்குதலைக் கண்டித்தாலும், விளையாட்டு அரசியலுக்கு அப்பாற்பட்டது என அவர் கருதுகிறார். இந்திய ரசிகர்கள் போட்டியை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினாலும், கங்குலி விளையாட்டை தொடர வேண்டும் என வலியுறுத்துகிறார்.

2025ம் ஆண்டு ஆசிய கோப்பையில் (Asia Cup 2025) இந்தியா – பாகிஸ்தான் (India – Pakistan) அணிகள் மோதுவது பற்றிய செய்திகள் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஆசியக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக 8 அணிகள் பங்கேற்கிறது. இருப்பினும், 2025 ஆசியக் கோப்பை அட்டவணை வெளியான பிறகு, இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போட்டி ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மறுபுறம், இந்தியா vs பாகிஸ்தான் போட்டிக்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. இந்த பரபரப்புக்கு மத்தியில், முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி இந்த வரவிருக்கும் போட்டி மற்றும் இந்தியா vs பாகிஸ்தான் இடையிலான போட்டி குறித்து பேசியுள்ளார்.
பயங்கரவாத தாக்குதல்:
📍Sourav Ganguly on India vs Pakistan in Asia Cup: “I am OKAY. The sport must GO ON.”
— Do You Agree: YES or NO…? pic.twitter.com/T4bsn34xwQ
— Megh Updates 🚨™ (@MeghUpdates) July 27, 2025
கடந்த 2025 ஏப்ரல் 22ம் தேதி பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்திய மக்கள் பாகிஸ்தான் நாட்டின் மீது மிகுந்த கோபத்தில் உள்ளனர். எனவே, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியைப் புறக்கணிக்க வேண்டும் என்று சமூக ஊடகங்களில் இந்திய ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதற்கெல்லாம் மத்தியில், எந்த சூழ்நிலையும் விளையாட்டில் எந்த விளைவையும் ஏற்படுத்தக்கூடாது என்று சவுரவ் கங்குலி கூறுகிறார்.




ALSO READ: ஆசியக் கோப்பை 2025 தொடங்கும் தேதி அறிவிப்பு.. உறுதி செய்யப்பட்ட இந்தியா – பாகிஸ்தான் மோதல்!
செய்தி நிறுவனமான ANI-யிடம் பேசிய சவுரவ் கங்குலி, “2025 ஆசியக் கோப்பையில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதுவதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. இந்த விளையாட்டு தொடர வேண்டும். பஹல்காம் தாக்குதல் ஒரு துயர சம்பவம், அது நடந்திருக்கக் கூடாது. பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும். பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா கடுமையான நடவடிக்கை எடுத்தது, விளையாட்டு தொடர வேண்டும்” என்றார்.
இந்திய ரசிகர்கள் எதிர்ப்பு:
இந்தியா vs பாகிஸ்தான் போட்டியை மட்டுமல்ல, முழு ஆசிய கோப்பையையும் ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வரும் நேரத்தில் சவுரவ் கங்குலியின் இந்த அறிக்கை வந்துள்ளது. முன்னதாக, 2025 உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் இந்தியாவும், பாகிஸ்தான் அணியும் விளையாட இருந்தனர். அப்போது, ஷிகர் தவான் மற்றும் ஹர்பஜன் சிங் உள்ளிட்ட பல இந்திய வீரர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட மறுத்துவிட்டனர். இதன் காரணமாக உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் ஏற்பாட்டாளர்கள் இந்தியா-பாகிஸ்தான் போட்டியை ரத்து செய்தனர். இப்போது, அதற்கு சில நாட்களுக்குப் பிறகு, ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுடன் விளையாட இந்தியா எடுத்த முடிவை பலரும் விமர்சித்து வருகின்றனர்.
ALSO READ: 5 இடது கை பேட்ஸ்மேன்களும் அரைசதம்.. டெஸ்ட் வரலாற்றில் புதிய வரலாறு படைத்த இந்திய அணி!
2026 டி20 உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு, 2025 ஆசியக் கோப்பை டி20 வடிவத்திலும் நடத்தப்பட இருக்கிறது. இந்தப் போட்டியானது வருகின்ற 2025 செப்டம்பர் 9 முதல் 2025 செப்டம்பர் 28 வரை நடைபெறுகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான் உட்பட மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும்.