Asia Cup 2025: ஆசியக் கோப்பை 2025 தொடங்கும் தேதி அறிவிப்பு.. உறுதி செய்யப்பட்ட இந்தியா – பாகிஸ்தான் மோதல்!
Asia Cup 2025 schedule: ஆசியக் கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மொஹ்சின் நக்வி, 2025 ஆசியக் கோப்பை 2025 செப்டம்பர் 9 முதல் 28 வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும் என அறிவித்துள்ளார். இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி வருகின்ற 2025 செப்டம்பர் 14 அன்று நடைபெறுகிறது.

ஆசியக் கோப்பை 2025 (Asia Cup 2025) போட்டியானது வருகின்ற 2025 செப்டம்பர் 9ம் தேதி முதல் 28ம் தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும் என்றும், விரிவான அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மொஹ்சின் நக்வி (Mohsin Naqvi) அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். அதன்படி, 2025 ஆசிய கோப்பையின் முதல் போட்டி மற்றும் இறுதிப் போட்டிக்கான தேதி மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா (Indian Cricket Team) மற்றும் பாகிஸ்தான் இடையிலான சமீபத்திய மோதல் மற்றும் புறக்கணிக்க வேண்டும் என்ற அனைத்து கோரிக்கைகளும் இருந்தபோதிலும், இந்த போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே குழுவில் இடம்பெற்று, வருகின்ற 2025 செப்டம்பர் 14ம் தேதி விளையாடும் என்று தெரிகிறது. அதேநேரத்தில், இந்தியாவும் பாகிஸ்தான் அணியும் 3 போட்டிகளில் விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகாரப்பூர்வமாக அறிவித்த மொஹ்சின் நக்வி:
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மொஹ்சின் நக்வி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும் ஏ.சி.சி ஆண்கள் ஆசிய கோப்பை 2025க்கான தேதிகளை உறுதிப்படுத்துவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த முக்கிய போட்டியானது வருகின்ற 2025 செப்டம்பர் 9ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறும். கிரிக்கெட்டின் அற்புதமான போட்டியை காண ஆவலுடன் இருக்கிறோம். விரிவான அட்டவணை விரைவில் வெளியிடப்படும்” என்று தெரிவித்திருந்தார்.




ALSO READ: அடுத்த 3 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியும் இங்கேதான்.. இடத்தை குறித்த ஐசிசி!
டி20 வடிவத்தில் 2025 ஆசியக் கோப்பை:
🚨 BREAKING: ACC president Mohsin Naqvi confirms the dates of Asia Cup 2025 pic.twitter.com/Of0lBJMmOH
— RevSportz Global (@RevSportzGlobal) July 26, 2025
இந்தியா மற்றும் இலங்கை இணைந்து 2026 டி20 உலகக் கோப்பையை நடத்த இருக்கிறது. இந்த போட்டியானது நடைபெற இன்னும் 7 மாதங்கள் மட்டுமே உள்ளது. டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் 2025 ஆசியக் கோப்பை டி20 வடிவத்தில் நடத்தப்பட இருக்கிறது. முன்னதாக, கடந்த 2023 ஒருநாள் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் 2023 ஆசியக் கோப்பை ஒருநாள் போட்டி வடிவத்தில் நடத்தப்பட்டது. இதில், இலங்கை அணியை இறுதிப்போட்டியில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
ALSO READ: 5 டி20, 3 ஒருநாள் போட்டி.. 2026ம் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியின் அட்டவணை இதோ!
2025 ஆசியக் கோப்பையை நடத்தும் உரிமையை பிசிசிஐ பெற்றிருந்தாலும், போட்டியை நடுநிலையாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்தப்பட இருக்கிறது. இந்த போட்டியில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. அதன்படி இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஹாங்காங், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமன் ஆகிய நாடுகள் விளையாட இருக்கின்றன.