WTC Finals: அடுத்த 3 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியும் இங்கேதான்.. இடத்தை குறித்த ஐசிசி!
World Test Championship Finals: ஐசிசி, 2027, 2029, மற்றும் 2031 ஆம் ஆண்டுகளில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகளை இங்கிலாந்தில் நடத்த அனுமதி அளித்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் கிரிக்கெட் வரலாறு மற்றும் முந்தைய வெற்றிகரமான போட்டி நடத்துதல் ஆகியவை இந்த முடிவில் முக்கிய பங்கு வகித்தன.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் (World Test Championship) எதிர்காலம் குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதன்படி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் அடுத்த மூன்று பதிப்புகளின் இறுதிப் போட்டிகள் எந்த நாட்டில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் நடைபெற்ற ஐசிசி (ICC) ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, ஐசிசி இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதில், சிறப்பு என்னவென்றால், அடுத்த மூன்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளின் இறுதிப் போட்டிகளும் ஒரே நாட்டில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
ALSO READ: விராட் கோலி கூட எட்ட முடியாத இடம்.. முக்கிய சாதனையை படைக்கப்போகும் கே.எல்.ராகுல்..!




உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிகள் எங்கு நடைபெறுகிறது..?
2027, 2029 மற்றும் 2031ம் ஆண்டுகளில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகளை நடத்தும் உரிமை இங்கிலாந்துக்கு வழங்கப்பட்டுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டை மேலும் உற்சாகப்படுத்துவதற்கான ஒரு முக்கியமான படியாக இந்த முடிவு கருதப்படுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை நடத்த இங்கிலாந்து தேர்ந்தெடுக்கப்பட்டதற்குப் பின்னால் பல காரணங்கள் உள்ளன. இங்கிலாந்து கிரிக்கெட்டின் கோட்டையாகக் கருதப்படுகிறது. இதுவரை 3 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. மேலும் 3 போட்டிகளும் இங்கிலாந்தில் நடத்தப்பட்டுள்ளன. 2021ம் ஆண்டில், முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நியூசிலாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையே சவுத்தாம்ப்டனிலும், 2023ம் ஆண்டில் இறுதிப் போட்டி ஓவலில் நடைபெற்றது. அதே நேரத்தில், இந்த முறை போட்டி லார்ட்ஸ் போன்ற வரலாற்று சிறப்புமிக்க மைதானத்தில் நடைபெற்றது.
பைனலுக்கான அறிவிப்பு:
🏴 are confirmed hosts for the 2027, 2029 & 2031 WTC finals 🏆
Despite some speculation that the contest could be set for a relocation to India from 2027 onwards, the ICC cited the ECB’s “successful track record in hosting recent finals” in confirming its decision pic.twitter.com/PER7w0BxZs
— ESPNcricinfo (@ESPNcricinfo) July 20, 2025
இதுகுறித்து ஐசிசி வெளியிட்ட அறிக்கையில், ”சமீபத்திய இறுதிப் போட்டிகளை நடத்துவதில் வெற்றிகரமான சாதனையின் அடிப்படையில், 2027, 2029 மற்றும் 2031 பதிப்புகளுக்கான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை நடத்தும் உரிமையை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்திற்கு வாரியம் வழங்கியுள்ளது” என்று தெரிவித்துள்ளது.
ALSO READ: அன்ஷுல் கம்போஜை அழைத்த இந்திய அணி.. நாடு திரும்பும் அர்ஷ்தீப் சிங்! காரணம் என்ன..?
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் எப்போது தொடங்கியது..?
டெஸ்ட் கிரிக்கெட்டை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்வதற்காக 2019ம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடங்கப்பட்டது. இந்த போட்டி டெஸ்ட் வடிவத்தை மேம்படுத்துவதற்கும், டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளின் ஆதிக்கத்திற்கு மத்தியில் அதை உயிர்ப்புடன் வைத்திருப்பதற்கும் மேற்கொள்ளப்பட்ட முயற்சியாகும். 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த இறுதிப் போட்டி, உலகின் இரண்டு சிறந்த டெஸ்ட் அணிகளுக்கு இடையேயான போட்டியாகும். இதுவரை, நியூசிலாந்து (2021), ஆஸ்திரேலியா (2023) மற்றும் தென்னாப்பிரிக்கா (2025) ஆகியவை இந்தப் பட்டத்தை வென்றுள்ளன.