KL Rahul: விராட் கோலி கூட எட்ட முடியாத இடம்.. முக்கிய சாதனையை படைக்கப்போகும் கே.எல்.ராகுல்..!
KL Rahul's England Dominance: கே.எல். ராகுல் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். லார்ட்ஸில் சதம் அடித்த அவர், இங்கிலாந்தில் 1000 டெஸ்ட் ரன்களை நெருங்கிவிட்டார். சச்சின், டிராவிட், கவாஸ்கர் போன்ற ஜாம்பவான்களைத் தொடர்ந்து இங்கிலாந்தில் 1000 ரன்களை எட்டும் நான்காவது இந்திய வீரராக மாறும் வாய்ப்பு அவருக்கு உள்ளது.

இந்திய அணியின் (Indian Cricket Team) நட்சத்திர தொடக்க வீரர் கே.எல்.ராகுல் (KL Rahul) இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இங்கிலாந்து அணிக்கு எதிராக லாட்ர்ஸ் டெஸ்டில் 100 ரன்கள் எடுத்து கே.எல்.ராகுல் அற்புதமான சாதனையை படைத்தார். இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியை மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்டு மைதானத்தில் (Old Trafford Cricket Ground) விளையாடவுள்ளது. இப்போது நான்காவது டெஸ்டிலும் அவரிடமிருந்து ஒரு பெரிய ஸ்கோர் எதிர்பார்க்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல், கே.எல்.ராகுல் ஒரு பெரிய சாதனையை படைக்கும் வாய்ப்பும் உள்ளது.
அப்படி என்ன சாதனை..?
மான்செஸ்டர் டெஸ்டில், விராட் கோலியால் கூட இங்கிலாந்தில் சாதிக்க முடியாத ஒரு சாதனையை கே.எல். ராகுல் செய்ய முடியும். கே.எல். ராகுல் இதுவரை இங்கிலாந்தில் 12 டெஸ்ட் போட்டிகளில் 989 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் 1000 ரன்களை நிறைவு செய்ய 11 ரன்கள் தேவையாக உள்ளது. இதுவரை இங்கிலாந்து மண்ணில் 1000 ரன்களுக்கு மேல் எடுத்தவர்கள் 3 இந்திய வீரர்கள் மட்டுமே உள்ளனர். அதன்படி, இங்கிலாந்து மண்ணில் சச்சின் டெண்டுல்கர் 17 போட்டிகளில் 1575 ரன்களும், ராகுல் டிராவிட் 13 போட்டிகளில் 1376 ரன்களும் எடுத்துள்ளனர். முன்னாள் இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் 16 போட்டிகளில் 1152 ரன்கள் எடுத்துள்ளார்.




ALSO READ: டெஸ்டில் பும்ரா கால் வைத்தால் தோல்வியா..? வெளியான புள்ளிவிவரங்கள்!
இங்கிலாந்தில் அதிக ரன்கள்:
How would you rate KL Rahul’s series so far? pic.twitter.com/sDUBwGvjvP
— ESPNcricinfo (@ESPNcricinfo) July 19, 2025
இங்கிலாந்தில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் கே.எல். ராகுல் 12 டெஸ்ட் போட்டிகளில் 989 ரன்கள் எடுத்து நான்காவது இடத்தில் உள்ளார், அதே நேரத்தில், விராட் கோலி 15 டெஸ்ட் போட்டிகளில் 976 ரன்கள் எடுத்துள்ளார். மான்செஸ்டரில், இங்கிலாந்தில் 1000 ரன்கள் எடுத்த நான்காவது இந்திய வீரராக ராகுல் மாற அதிக வாய்ப்பு உள்ளது.தற்போதைய தொடரில், கே.எல். ராகுல் 3 டெஸ்ட் போட்டிகளில் 62.50 சராசரியுடன் 375 ரன்கள் எடுத்துள்ளார். இதி, 2 சதங்களும், 1 அரைசதமும் அடங்கும். இந்த டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் கே.எல்.ராகுல் 4வது இடத்தில் உள்ளார்.
இங்கிலாந்தில் தொடக்க வீரராக அதிக சதம்:
இந்திய தொடக்க ஆட்டக்காரர் கே.எல். ராகுல் லார்ட்ஸ் டெஸ்டில் சதம் அடித்தது, டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது 10வது சதமாகும். இதன் மூலம், லார்ட்ஸ் ஸ்டேடியத்தில் 2 சதங்கள் அடித்த இரண்டாவது இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையை கே.எல். ராகுல் பெற்றார். கடந்த 7 ஆண்டுகளில் இங்கிலாந்தில் கே.எல். ராகுல் அடிக்கும் நான்காவது சதம் இதுவாகும். முன்னதாக, அவர் லீட்ஸ் டெஸ்டிலும் சதம் அடித்திருந்தார், அதே நேரத்தில் 2021 இல் லார்ட்ஸிலும் சதம் அடித்தார், அதற்கு முன்பு 2018 இல் தி ஓவலில் சதம் அடித்தார்.
இதனால், கடந்த 7 ஆண்டுகளில் வேறு எந்த தொடக்க வீரரை விடவும் கே.எல். ராகுல் இங்கிலாந்து மண்ணில் அதிக சதங்களை அடித்துள்ளார். கடந்த 2018 முதல், பென் டக்கெட் இங்கிலாந்துக்காக 3 சதங்களை அடித்துள்ளார். அதே நேரத்தில் ஜாக் கிராலி மற்றும் ரோரி பர்ன்ஸ் ஆகியோர் தங்கள் நாட்டிற்காக 2 சதங்களை மட்டுமே அடித்துள்ளனர், இது ராகுலை விட குறைவு என்று புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.