India vs England 4th Test: ஓல்ட் டிராஃபோர்ட் சாபத்தை இந்தியா உடைக்குமா? சுப்மன் கில் படைக்கு காத்திருக்கும் சவால்!
India's Old Trafford Record: இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் 4வது போட்டி ஓல்ட் டிராஃபோர்டில் நடைபெறுகிறது. இந்த மைதானத்தில் இந்தியா 89 ஆண்டுகளாக வெற்றி பெறவில்லை. இங்கிலாந்து 2-1 என முன்னிலையில் உள்ளது. இந்திய அணி இந்த வரலாற்றுச் சாபத்தை உடைத்து வெற்றி பெற முயற்சிக்கும்.

இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான 5 போட்டிகள் (India – England Test Series) கொண்ட டெஸ்ட் தொடரில் 3 போட்டிகள் முடிந்துள்ளன . தற்போது, பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது. இந்த தொடரின் ஒரு அணிகளுக்கு இடையிலான போட்டி வருகின்ற 2025 ஜூலை 23ம் தேதி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்டு ஸ்டேடியத்தில் (Old Trafford Cricket Ground) நடைபெறுகிறது. இந்த ஸ்டேடியத்தில் இந்திய அணியின் (Indian Cricket Team) சாதனை மிகவும் மோசமாக உள்ளது. இந்த ஸ்டேடியத்தில் இந்திய அணி ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. இந்திய அணி கடைசியாக இந்த ஸ்டேடியத்தில் கடந்த 2014ம் ஆண்டு ஒரு போட்டியில் விளையாடியது. அந்த போட்டியில் இங்கிலாந்து அணி மோசமாக இந்திய அணியை வீழ்த்தியது.
ALSO READ: 43 ஆண்டுகால வறட்சி! சாதிப்பார்களா பும்ரா, சிராஜ்..? ஓல்ட் டிராஃபோர்ட்டில் காத்திருக்கும் சாதனை!




89 வருடங்களாக வெற்றிக்காக காத்திருப்பு:
இந்திய அணி 89 ஆண்டுகளாக ஓல்ட் டிராஃபோர்டு மைதானத்தில் வெற்றிக்காகக் காத்திருக்கிறது. இந்திய அணி 1936 ஆம் ஆண்டு முதல் முறையாக இந்த மைதானத்தில் ஒரு போட்டியை விளையாடியது. இந்தப் போட்டியை இந்திய அணி டிரா செய்தது. இதுவரை இந்த ஸ்டேடியத்தில் மொத்தம் 9 போட்டிகளில் விளையாடி, இந்திய அணி ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. இந்த ஸ்டேடியத்தில் இந்திய அணி 4 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. அதேசமயம் 5 போட்டிகள் டிரா செய்யப்பட்டுள்ளன .
இந்தியாவை மோசமாக தோற்கடித்த இங்கிலாந்து:
🚨IND vs ENG 4th Test Pitch Update🚨
The Old Trafford cricket ground’s pitch offers significant pace & bounce. Moreover, Manchester’s weather is expected to be overcast, making the conditions favourable for the pacers. pic.twitter.com/qIHsSOmiJW
— Anish Munda (@MundaAnish67) July 17, 2025
இந்தியாவும் இங்கிலாந்தும் கடைசியாக இந்த மைதானத்தில் 2014 ஆம் ஆண்டு மோதின. இந்தப் போட்டியில், இங்கிலாந்து ஒரு இன்னிங்ஸில் 367 ரன்கள் எடுத்தது. இதன்பிறகு, களமிறங்கிய இந்திய அணி, 2 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 367 ரன்கள் எடுக்க முடியவில்லை. இதனால், இந்திய அணி இந்த போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 54 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
ALSO READ: புஜாராவுக்கு பிறகு யார்? இந்திய டெஸ்ட் அணியின் 3வது இடத்தில் தடுமாற்றம்..!
வரலாற்றை உருவாக்கும் நோக்கத்துடன் இந்திய அணி களமிறங்குமா..?
சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, வரலாறு படைக்கும் நோக்கத்துடன் ஓல்ட் டிராஃபோர்டு ஸ்டேடியத்தில் நுழைகிறது. ஓல்ட் டிராஃபோர்டில் இந்திய அணி இதுவரை ஒரு டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்றதில்லை. ஆனால் இந்த அணி இதற்கு முன்பு எட்ஜ்பாஸ்டன் ஸ்டேடியத்தில் வெற்றி பெற்றதில்லை. ஆனால் இந்த தொடரில் , இந்திய அணி வெற்றி பெற்று வரலாறு படைத்தது. இந்த முறை ஓல்ட் டிராஃபோர்டு ஸ்டேடியத்தில் இந்த சாதனையை மீண்டும் செய்ய இந்திய அணி முயற்சிக்கும் .