England Faces ICC Fine: வெற்றிலும் பின்னடைவை சந்தித்த இங்கிலாந்து.. ஸ்லோ ஓவர் ரேட்டிங்.. ஐசிசி அபராதம் விதிப்பு!
England vs India: இங்கிலாந்து, இந்தியாவை லார்ட்ஸில் 22 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஆனால், மெதுவான ஓவர் ரேட் காரணமாக ஐசிசி அபராதம் விதித்துள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளில் இருந்து 2 புள்ளிகள் குறைக்கப்பட்டு, தரவரிசையில் மூன்றாவது இடத்திற்கு சரிந்துள்ளனர்.

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் (Lords Test Match) இந்திய அணியை 22 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (England vs India) இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றாலும் பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes) தலைமையிலான இங்கிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதாவது, ஸ்லோ ஓவர் ரேட் காரணமாக, இங்கிலாந்து அணிக்கு போட்டிக் கட்டணத்தில் இருந்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் இருந்து 2 புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, இங்கிலாந்து அணி தரவரிசையில் 3வது இடத்திற்கு சரிந்துள்ளது.
கேப்டன் ஸ்டோக்ஸூக்கு அபராதம் விதிப்பு:
லார்ட்ஸில் நடைபெற்ற இந்தியாவிற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 2 ஓவர்கள் ஸ்லோ ஓவர் ரேட் வீசியதாக போட்டி அம்பயர் ரிச்சி ரிச்சர்ட்சன் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஐ.சி.சி ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதன்படி, இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் அவரது அணிக்கு அவர்களின் போட்டிக் கட்டணத்தில் 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.




ALSO READ: 2027 உலகக் கோப்பையில் கோலி, ரோஹித் விளையாடுவது உறுதி.. சூப்பர் அப்டேட் கொடுத்த பிசிசிஐ..!
ஐசிசி வெளியிட்ட அறிக்கையின்படி,”ஐசிசியின் பிரிவு 2.22 இன் படி, ஒவ்வொரு ஓவர் ஷார்ட்டிற்கும் போட்டிக் கட்டணத்தில் 5% அபராதம் விதிக்கப்படுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் விதி 16.11.2 இன் படி, தாமதமான ஒவ்வொரு ஓவருக்கும் ஒரு புள்ளி கழிக்கப்படுகிறது. இதன் விளைவாக, இங்கிலாந்துக்கு 2 ஓவர்கள் ஸ்லோவாக வீசியதால், அந்த அணி புள்ளிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் இருந்து கழிக்கப்பட்டுள்ளன.” என தெரிவித்திருந்தது.
தவறை ஒப்புக்கொண்ட பென் ஸ்டோக்ஸ்:
🚨ICC FINED ENGLAND 🚨
– 10 Percent Of Match Fees & 2 WTC Points For Slow Over Rate. ( Cricbuzz) pic.twitter.com/PvAPWbzq13
— Md Nagori (@Sulemannagori23) July 16, 2025
பென் ஸ்டோக்ஸ் ஸ்லோ ஓவர் ரேட்டில் பந்துவீசியதாக தவறை ஒப்புக்கொண்டு, எந்தவித முறையான விசாரணையும் இல்லாமல் அபராதத்தை ஏற்றுக்கொண்டார். போட்டி நடுவர்கள் பால் ரீஃபெல், ஷராபுத்தௌலா இப்னே ஷாஹித், அஹ்சன் ராசா மற்றும் கிரஹாம் லாயிட் ஆகியோர் அறிக்கை வெளியிட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இலங்கை அணிக்கு பலன்:
2 புள்ளிகள் குறைக்கப்பட்டதால் இங்கிலாந்தின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் புள்ளிகள் இப்போது 24 லிருந்து 22 ஆக குறைந்துள்ளன. இதன் காரணமாக, இங்கிலாந்து அணியின் புள்ளி சதவீதமும் (PCT) 66.67% இலிருந்து 61.11% ஆகக் குறைந்துள்ளது.
இதன் மூலம், இலங்கை அணி நேரடிப் பலனைப் பெற்றது. இதையடுத்து, 66.67% புள்ளிகளுடன் 2வது இடத்தை எட்டியுள்ளது. அதே நேரத்தில் இங்கிலாந்து 3வது இடத்திற்கு சரிந்துள்ளது.
ALSO READ: அப்படி என்ன பணிச்சுமை..? இந்திய அணியின் வெற்றியே முக்கியம்.. பும்ராவை விளாசிய இர்பான் பதான்!
இந்திய அணி எந்த இடத்தில் உள்ளது..?
பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இதுவரை விளையாடிய 3 டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்று 100% புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அதேநேரத்தில், சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் 33.33% புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது.