Bumrah Performance: அப்படி என்ன பணிச்சுமை..? இந்திய அணியின் வெற்றியே முக்கியம்.. பும்ராவை விளாசிய இர்பான் பதான்!
Irfan Pathan Slams Bumrah: இந்தியா - இங்கிலாந்து 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்குப் பிறகு, முன்னாள் இந்திய வீரர் இர்ஃபான் பதான், ஜஸ்பிரித் பும்ராவின் செயல்பாட்டை கடுமையாக விமர்சித்துள்ளார். பென் ஸ்டோக்ஸின் திறமையைப் பாராட்டிய அவர், பும்ராவின் பந்து வீச்சு மற்றும் போட்டிக்கு ஏற்ற பயன்பாடு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் நடைபெற்ற லார்ட்ஸில் சுப்மன் கில் (Shubman Gill) தலைமையிலான இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதன்மூலம், 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது. இதனுடன், 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC 2025) புள்ளிகள் அட்டவணையிலும் இந்திய அணி ஒரு இடம் சரிந்து 4வது இடத்திற்கு வந்துள்ளது. அதேநேரத்தில், இங்கிலாந்து அணி 3வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தநிலையில், லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட தோல்வி தொடர்பாக இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை (Jasprit Bumrah) முன்னாள் இந்திய ஆல்ரவுண்டர் இர்பான் பதான் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸை இர்பான் பதான் நிறைய பாராட்டியுள்ளார்.
ALSO READ: இந்தியா அணிக்கு எதிராக புதிய வியூகம்.. இடது கை சுழற்பந்து வீச்சாளரை களமிறக்கும் இங்கிலாந்து!




இர்ஃபான் பதான் என்ன சொன்னார்?
இந்திய அணியின் தோல்விக்கு பிறகு இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரும் வர்ணனையாளருமான இர்ஃபான் பதான் தனது யூடியூப் சேனலில், “லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் 5வது நாளான கடந்த 2025 ஜூலை 14ம் தேதி காலை இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 9.2 ஓவர்கள் நீண்ட நேரம் பந்து வீசினார். அதேபோட்டியில், ரிஷப் பண்ட் போன்ற முக்கிய வீரரை ரன் அவுட் கூட செய்கிறார், பேட்டிங்கும் செய்கிறார். ஆனால், பென் ஸ்டோக்ஸ் அவரது பணிச்சுமை பற்றி எதுவும் பேசப்படவில்லை. அதேநேரத்தில், இந்தியாவில் அப்படி இல்லை. பென் ஸ்டோக்ஸ் கடந்த ஆண்டு பல அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டார். இருப்பினும் இந்த தொடரில் அவர் தொடர்ந்து பந்து வீசி வருகிறார்.
போட்டியில் வெற்றி பெறுவது மிக முக்கியம்:
Irfan Pathan questions India’s use of Jasprit Bumrah as Ben Stokes’ resilience steals the spotlight at Lord’s. 🏏
📸: BCCI/X#oneturfnews #engvsind #jaspritbumrah #teamindia #cricket pic.twitter.com/f5CkxRUz5x
— OneTurf News (@oneturf_news) July 16, 2025
அதே நாளில் ஜஸ்பிரித் பும்ரா 5 ஓவர்கள் வீசுகிறார். பின்னர் ஜோ ரூட் பேட்டிங் செய்ய வரும் வரை காத்திருக்கிறார். இதுபோன்ற சூழ்நிலையில் நீங்கள் எதிரணிக்கு எதிராக போட்டியைக் கட்டுப்படுத்த வேண்டும். அவர் எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் விளையாடாததால் அவரது பணிச்சுமை குறைக்கப்பட்டது. ஆனால் நீங்கள் 3வது டெஸ்டில் களத்தில் இறங்கும்போது, பணிச்சுமை பற்றி கவலைப்பட தேவையில்லை. எப்படியும் போட்டியை வெல்ல வேண்டும் என்பதே குறிக்கோளாக இருக்க வேண்டும்” என்று இர்ஃபான் பதான் கூறினார்.
ALSO READ: 2027 உலகக் கோப்பையில் கோலி, ரோஹித் விளையாடுவது உறுதி.. சூப்பர் அப்டேட் கொடுத்த பிசிசிஐ..!
ஜோஃப்ரா ஆர்ச்சரைப் பாராட்டிய இர்பான் பதான்:
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சரின் அற்புதமான பந்துவீச்சை வர்ணனையாளர் இர்பான் பதான் பாராட்டினார். அதில், “ஜோஃப்ரா ஆர்ச்சர் கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார. ஆனால், ஆர்ச்சர் எங்கும் நிற்கவில்லை. காலையில் 6 ஓவர்கள் வீசினார்.” என்று தெரிவித்தார்.