Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

2027 Odi World Cup: 2027 உலகக் கோப்பையில் கோலி, ரோஹித் விளையாடுவது உறுதி.. சூப்பர் அப்டேட் கொடுத்த பிசிசிஐ..!

Rohit Sharma, Kohli in 2027 World Cup: ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, 2027 உலகக்கோப்பையில் அவர்களின் இடம் குறித்து சந்தேகம் எழுந்தது. ஆனால், பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, இருவரும் 2027 உலகக்கோப்பையில் விளையாடுவார்கள் என்று உறுதிப்படுத்தியுள்ளார்.

2027 Odi World Cup: 2027 உலகக் கோப்பையில் கோலி, ரோஹித் விளையாடுவது உறுதி.. சூப்பர் அப்டேட் கொடுத்த பிசிசிஐ..!
விராட் கோலி - ரோஹித் சர்மாImage Source: PTI
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 16 Jul 2025 11:36 AM

டி20 ஓய்வுக்கு பிறகு இந்திய கேப்டன் ரோஹித் சர்மா (Rohit Sharma) மற்றும் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி (Virat Kohli) ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து திடீரென ஓய்வை அறிவித்து அதிர்ச்சியை அளித்தனர். இதனால், இருவரும் 2027ம் ஆண்டு உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறுவார்களா இல்லையா என்ற கேள்விகள் எழுந்தது. இப்போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) இது குறித்து மிகப்பெரிய அப்டேட்டை கொடுத்துள்ளது. அதன்படி, பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, இரு வீரர்களும் 2027ம் ஆண்டு நடைபெற உள்ள உலகக் கோப்பை விளையாட இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ரோஹித் – கோலியின் எதிர்காலம்:

கடந்த 2025 மே 7ம் தேதி ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இருப்பினும், இரு வீரர்களும் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவார்கள். விராட் கோலியும் சமீபத்தில் 2027 உலகக் கோப்பை வரை விளையாட விரும்புவதாக தெரிவித்தார். இதுகுறித்து லண்டனில் செய்தியாளர்களிடம் பேசிய பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா, “நாங்கள் அனைவரும் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி மிஸ் செய்கிறோம். ஆனால், ஓய்வு பெறுவது அவர்களின் சொந்த முடிவு.

ALSO READ: 27 ரன்களுக்குள் சுருண்ட வெஸ்ட் இண்டீஸ்.. டெஸ்ட் வரலாற்றில் குறைந்த ரன்களில் அவுட்டான அணிகள் பட்டியல்!

ரோஹித் சர்மாதான் கேப்டன்:

எந்தவொரு வீரரும் எப்போது, எந்த வடிவத்தில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று நாங்கள் ஒருபோதும் சொல்ல மாட்டோம் என்பது பிசிசிஐயின் கொள்கை. இது முற்றிலும் வீரரை பொறுத்தது. டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் முடிவை இந்த இரண்டு வீரர்களும் தாங்களாகவே எடுத்தனர். ” என்று தெரிவித்தார்.

விராட் கோலியின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை:

இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு தற்போது 36 வயதாகிறது. இவர் இதுவரை இந்திய அணிக்காக 302 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 51 சதங்கள் மற்றும் 74 அரைசதங்களுடன் 14,181 ரன்கள் எடுத்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். இதுதவிர, இந்திய அணிக்காக இதுவரை 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 9,230 ரன்களும், 125 டி20 போட்டிகளில் விளையாடி 4,188 ரன்களும் எடுத்துள்ளார்.

ALSO READ: இந்தியா அணிக்கு எதிராக புதிய வியூகம்.. இடது கை சுழற்பந்து வீச்சாளரை களமிறக்கும் இங்கிலாந்து!

ரோஹித் சர்மாவின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை:

ரோஹித் சர்மாவிற்கு தற்போது 38 வயதாகிறது. இவர் இந்திய அணிக்காக இதுவரை 273 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 32 சதங்கள் மற்றும் 58 அரைசதங்களுடன் 11,168 ரன்கள் எடுத்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 264 ரன்கள் குவித்து, அதிகபட்ச தனிநபர் ஸ்கோரை ரோஹித் சர்மா படைத்துள்ளார். மேலும், ரோஹித் சர்மா 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4,301 ரன்களும், 159 டி20 போட்டிகளில் விளையாடி 4,231 ரன்களும் எடுத்துள்ளார். இவரது தலைமையிலான இந்திய அணி இதுவரை 2024 டி20 உலகக் கோப்பையையும், 2025 சாம்பியன்ஸ் டிராபியையும் வென்றுள்ளது.