Lowest Test Score: 27 ரன்களுக்குள் சுருண்ட வெஸ்ட் இண்டீஸ்.. டெஸ்ட் வரலாற்றில் குறைந்த ரன்களில் அவுட்டான அணிகள் பட்டியல்!
Australia vs West Indies: கிங்ஸ்டனில் நடைபெற்ற ஆஸ்திரேலியா-வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியா 176 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் அணி 27 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது, இது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இரண்டாவது மிகக் குறைந்த ஸ்கோர் ஆகும்.

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு (Australia vs West Indies) இடையேயான 3வது டெஸ்ட் போட்டி ஜமைக்காவின் கிங்ஸ்டனில் உள்ள சபினா பார்க்கில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 225 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, முதல் இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 143 ரன்களுக்குள் சுருண்டது. இதன் அடிப்படையில், 2வது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி வெறும் 121 ரன்களுக்குள் ஆட்டமிழந்தது. 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி வெறும் 27 ரன்களுக்குள் ஆட்டமிழந்தது. இதனால், பாட் கம்மின்ஸ் (Pat Cummins) தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 176 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வரலாற்றில் 2வது மிக குறைந்த டெஸ்ட் ஸ்கோர்:
வெஸ்ட் இண்டீஸ் அணி 27 ரன்களுக்குள் ஆட்டமிழந்ததன்மூலம், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 2வது குறைந்தபட்ச ஸ்கோராக இது பதிவானது. இதன்மூலம், வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் மோசமான பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் இடத்தை தவறவிட்டது.




42 ரன்கள்:
கடந்த 2024ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக இலங்கை அணியும் 1974ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணியும், 1888ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா அணியும், 1946ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நியூசிலாந்து அணியும் 42 ரன்களுக்குள் ஆட்டமிழந்துள்ளன.
அயர்லாந்து – 38 ரன்கள்:
கடந்த 2019ம் ஆண்டு லார்ட்ஸில் நடந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி, அயர்லாந்து அணிக்கு எதிராக 85 ரன்களுக்குள் ஆல் அவுட்டானது. இருப்பினும், அயர்லாந்து 15.4 ஓவர்களில் 38 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் காரணமாக, இந்த போட்டியில் 143 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
ALSO READ: 128 ஆண்டுகளுக்கு பிறகு.. ஒலிம்பிக்கில் களமிறங்கும் கிரிக்கெட்! வெளியான போட்டி அட்டவணை!
இந்தியா – 36 ரன்கள்:
2020-21 சுற்றுப்பயணத்தில் அடிலெய்டில் நடந்த பிங்க் பால் டெஸ்டில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 9 விக்கெட்டுக்கு 36 ரன்கள் எடுத்து வரலாற்றுச் சரிவைச் சந்தித்தது. இந்தப் போட்டியில் முன்னதாக காயத்தால் பாதிக்கப்பட்ட முகமது ஷமி பேட்டிங் செய்ய வரவில்லை. இருப்பினும், அஜிங்க்யா ரஹானே தலைமையில் இந்தியா சிறப்பாக விளையாடி தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது.
ஆஸ்திரேலியா – 36 ரன்கள்:
1902ம் ஆண்டு பர்மிங்காமில் நடந்த தொடரின் போது, இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டதன்மூலம், ஆஸ்திரேலிய அணி 23 ஓவர்களில் 36 ரன்களுக்கு சுருண்டது. இருப்பினும், போட்டி டிராவில் முடிந்தது.
தென்னாப்பிரிக்கா – 36 ரன்கள்:
1932ம் ஆண்டு மெல்போர்னில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா அணி 23.2 ஓவர்களில் 36 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
தென்னாப்பிரிக்கா – 35 ரன்கள்:
1899ம் ஆண்டு கேப் டவுனில் நடந்த போட்டியில் இங்கிலாந்து பந்து வீச்சாளர்களால் 4வது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா அணியை 22.4 ஓவர்களில் 35 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
தென்னாப்பிரிக்கா – 30 ரன்கள்:
1924 ம் ஆண்டு பர்மிங்காமில் இங்கிலாந்துக்கு எதிராக தென்னாப்பிரிக்கா தனது முதல் இன்னிங்ஸை 12.3 ஓவர்களில் 30 ரன்களுக்குள் ஆல் அவுட்டானது. இதனால், தென்னாப்பிரிக்கா அணி மற்றொரு குறைந்த ஸ்கோரை பதிவு செய்தது. மேலும், 1896ம் ஆண்டு கெபெர்ஹாவில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா நான்காவது இன்னிங்ஸில் 18.4 ஓவர்களில் 30 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
வெஸ்ட் இண்டீஸ் – 27 ரன்கள்:
Six wickets for Mitchell Starc. Seven ducks for West Indies. 27 all out at Sabina Park. https://t.co/PatprCcQ6P #WIvAUS pic.twitter.com/I4fl9qN66w
— ESPNcricinfo (@ESPNcricinfo) July 14, 2025
2025 ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் மிட்செல் ஸ்டார்க் 9 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது குறைந்தபட்ச ஸ்கோரை 27 ரன்களை பதிவு செய்தது.
ALSO READ: 2025 ஆசியக் கோப்பையில் இந்தியா பாகிஸ்தானுடன் மோதல் உறுதி.. பிசிசிஐ சுவாரஸ்ய தகவல்..!
நியூசிலாந்து – 26 ரன்கள்:
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகக்குறைந்த ரன்களுக்கு ஆல் அவுட்டான அணி என்ற மோசமான சாதனையை நியூசிலாந்து அணி படைத்துள்ளது. கடந்த 1955ம் ஆண்டு ஆக்லாந்தில் இங்கிலாந்துக்கு எதிராக நியூசிலாந்து அணி வெறும் 26 ரன்களுக்குள் ஆல் அவுட்டானது.