Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Vaibhav Suryavanshi: அசாத்திய ஆல்ரவுண்டராக வலம்.. யூத் டெஸ்டில் விக்கெட் எடுத்து கலக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

Vaibhav Suryavanshi Creates History: இந்தியா அண்டர் 19 அணியின் வைபவ் சூர்யவன்ஷி, இங்கிலாந்துக்கு எதிரான U19 டெஸ்ட் போட்டியில் டெஸ்ட் விக்கெட் வீழ்த்திய இளம் இந்திய வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். 14 வயது 107 நாட்களில் இந்த சாதனையை அவர் படைத்துள்ளார்.

Vaibhav Suryavanshi: அசாத்திய ஆல்ரவுண்டராக வலம்.. யூத் டெஸ்டில் விக்கெட் எடுத்து கலக்கிய வைபவ் சூர்யவன்ஷி!
வைபவ் சூர்யவன்ஷிImage Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 15 Jul 2025 11:28 AM

இந்திய கிரிக்கெட்டில் வளர்ந்து வரும் நட்சத்திர வீரரான வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Suryavanshi) மீண்டும் தனது பெயரை உலகம் முழுவதும் ஒலிக்க செய்துள்ளார். ஆனால், இந்த முறை வைபவ் சூர்யவன்ஷி அதிரடி பேட்டிங்கால் அல்ல, அசாத்திய பந்துவீச்சால் நம் மனதை கவர்ந்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான (ENGU19 vs INDU19) இளைஞர் டெஸ்டின் 2வது நாளில் தனது முதல் இளைஞர் டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தி சூர்யவன்ஷி வரலாறு படைத்தார். அதாவது, இளையோர் கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக டெஸ்ட் விக்கெட் வீழ்த்திய இளைய வீரர் என்ற பெருமையை பெற்றார். இந்த சாதனையை சூர்யவன்ஷி படைத்தபோது அவருக்கு வெறும் 14 வயது 107 நாட்கள் மட்டுமே ஆகும்.

வைபவ் சூர்யவன்ஷி புதிய உலக சாதனை:

இங்கிலாந்து அண்டர் 19 அணியும், இந்தியா அண்டர் 19 அணியும் முதல் இளைஞர் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 540 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஆயுஷ் மாத்ரே 102 ரன்களும், அபிக்யான் குண்டு 90 ரன்களும், ராகுல் குமார் 85 ரன்களும், ஆர்.எஸ்.அம்ப்ரிஷ் 70 ரன்களும் எடுத்திருந்தார். அதேநேரத்தில், வைபவ் சூர்யவன்ஷி 13 பந்துகளில் 14 ரன்கள் எடுத்திருந்தார்.

ALSO READ: 22 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து! தோல்விக்கு காரணம் என்ன?

தொடர்ந்து, முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அண்டர் 19 அணி 439 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணிக்காக கேப்டன் ஹம்சா ஷேக் 84 ரன்களும், ராக்கி ஃப்ளிங்டஃப் 93 ரன்களும் எடுத்தனர். இதன் பிறகு, ராக்கி பிளின்டாஃப் மற்றும் கேப்டன் ஹம்சா ஷேக் ஆகியோர் 154 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். வைபவ் சூர்யவன்ஷி தான் வீசிய 45வது ஓவரில் கடைசி பந்தில் லோ புல்டாஸ் வீசினார். அப்போது, ஷேக் லாங் ஆஃபில் அடிக்க முயன்றி ஆட்டமிழக்க செய்தார். இதன்போது, வைபவ் சூர்யவன்ஷி 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இதன்பின்னர் இந்தியா தனது 2வது இன்னிங்ஸில் 3வது நாள் ஆட்டம் முடியும் வரை 3 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் எடுத்துள்ளது. அதன்படி, இந்திய அண்டர் 19 அணி இதுவரை மொத்தம் 229 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

வைபவ் சூர்யவன்ஷி கலக்கல்:

ஷேக் விக்கெட்டை வீழ்த்தியதன்மூலம் இளையோர் டெஸ்ட் போட்டிகளில் இளம் விக்கெட்டை வீழ்த்திய முதல் இந்தியர் என்ற பெருமையை வைபவ் பெற்றார். இந்த சாதனையை முன்னதாக மனிஷி வைத்திருந்தார், அவர் 2019 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 5/58 மற்றும் 2/30 என்ற சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார். ஒட்டுமொத்தமாக இளையோர் கிரிக்கெட்டில் குறைந்த வயதில் விக்கெட்டை வீழ்த்திய பெருமையை பாகிஸ்தானின் மஹ்மூத் மாலிக் படைத்துள்ளார். இவர் கடந்த 1994ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக 13 வயது 241 நாட்களில் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

ALSO READ: சூர்யவன்ஷியை காண அதீத ஆர்வம்.. 6 மணிநேரம் காரில் விடாது பயணித்த இளம் பெண்கள்..!

இளையோர் கிரிக்கெட்டில் குறைந்த வயதில் விக்கெட் வீழ்த்திய வீரர்கள்:

மஹ்மூத் மாலிக் – 13 ஆண்டுகள் 241 நாட்கள் – பாகிஸ்தான்
ஹிதாயத்துல்லா – 13 ஆண்டுகள் 251 நாட்கள் – பாகிஸ்தான்
வைபவ் சூர்யவன்ஷி – 14 ஆண்டுகள் 107 நாட்கள் – இந்தியா
நிஹாதுஸ்ஸாமான் – 14 ஆண்டுகள் 139 நாட்கள் – வங்கதேசம்
அரிஃபுல் ஹக் – 14 ஆண்டுகள் 231 நாட்கள் – வங்கதேசம்