Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Vaibhav Suryavanshi: சூர்யவன்ஷியை காண அதீத ஆர்வம்.. 6 மணிநேரம் காரில் விடாது பயணித்த இளம் பெண்கள்..!

Vaibhav Suryavanshi Meets Fans: 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி, ஐபிஎல் 2025ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அசத்திய பின், இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் 143 ரன்கள் குவித்து அசத்தினார். 5 போட்டிகளில் 355 ரன்கள் எடுத்த அவர், 30 பவுண்டரிகள், 29 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இவரைப் பார்க்க 6 மணி நேரம் பயணம் செய்த ரசிகைகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

Vaibhav Suryavanshi: சூர்யவன்ஷியை காண அதீத ஆர்வம்.. 6 மணிநேரம் காரில் விடாது பயணித்த இளம் பெண்கள்..!
ரசிகைகளுடன் வைபவ் சூர்யவன்ஷிImage Source: Rajasthan Royals/Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 10 Jul 2025 12:01 PM

2025 ஐபிஎல் (IPL 2025) சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் (Rajasthan Royals) அணிக்காக அதிரடியாக விளையாடிய 14 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Suryavanshi) தற்போது இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 19 வயதுக்குட்பட்டோர் இந்திய அணியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இவரது அதிரடியான ஆட்டம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்தநிலையில், இங்கிலாந்து அண்டர் 19 அணிக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டி வைபவ் சூர்யவன்ஷி வழக்கம்போல் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 143 ரன்களை குவித்தார். இது மட்டுமின்றி இங்கிலாந்து 19 வயதுக்குட்பட்ட அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரராகவும் வலம் வருகிறார். இப்படியான் சூழ்நிலையில், வைபவ் சூர்யவன்ஷியை காண 2 பெண்கள் நீண்ட நேரம் காத்திருந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ் எக்ஸ் போஸ்ட்:


இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட தொடருக்கு முன்பாக, வைபவ் சூர்யவன்ஷி ஐபிஎல் 2025 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி ஐபிஎல் வரலாற்றில் அதிவேக சதத்தை பதிவு செய்தார். இந்தநிலையில், இங்கிலாந்தில் விளையாடி வரும் 14 வயதான வைபவ் சூர்யவன்ஷியை காண, அவரது வயதுடைய பெண்களாக அனன்யா மற்றும் ரிவா, வைபவை சந்தித்த வொர்செஸ்டருக்கு 6 மணிநேரம் காரில் பயணித்து வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்போது, அந்த 2 பெண்களும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஜெர்சியை அணிந்து வைபவ் சூர்யவன்ஷியுடன் புகைப்படம் எடுத்து கொண்டனர். இந்த புகைப்படத்தை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

ALSO READ: பந்துவீச்சில் பயங்கரம்! வேகத்தில் இரண்டாக பிளந்த ஸ்டம்ப்.. வைட்டலிட்டி பிளாஸ்டில் கலக்கிய மெரிடித்! 

143 ரன்கள் எடுத்த வைபவ் ஆட்டம்:


வைபவ் சூர்யவன்ஷியின் சிறப்பான தொடர் ஆட்டத்தால், இந்திய 19 வயதுக்குட்பட்ட அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-2 என்ற கணக்கில் வென்றது. இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகளில் 355 ரன்கள் எடுத்த வைபவ் சூர்யவன்ஷி, 30 பவுண்டரிகள் மற்றும் 29 சிக்ஸர்களையும் அடித்தார். அதாவது வைபவ் குவித்த 355 ரன்களில் 294 ரன்கள் பவுண்டரிகள் மூலமே வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: ஆர்சிபிக்கு மேலும் சிக்கல்..! வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது பெண் அடுக்கிய புகார்.. விரைவில் கைதா..? 

ஐபிஎல்லில் கலக்கல்:

ஐபிஎல் 2025 சீசனில் வைபவ் சூர்யவன்ஷியின் அபாரமான ஆட்டத்தால் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் அவரது பெயர் தொடர்ந்து ஒலித்துகொண்டே இருந்தது. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக சூர்யவன்ஷி வெறும் 35 பந்துகளில் சதம் அடித்து உலகெங்கிலும் தனது பெயரை பதிவு செய்தார். 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி ஐபிஎல் மற்றும் டி20 கிரிக்கெட்டில் சதம் அடித்த இளைய பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்தார்.