Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Cricket Stumps Split in Two: பந்துவீச்சில் பயங்கரம்! வேகத்தில் இரண்டாக பிளந்த ஸ்டம்ப்.. வைட்டலிட்டி பிளாஸ்டில் கலக்கிய மெரிடித்!

Somerset vs Essex: சோமர்செட் மற்றும் எசெக்ஸ் அணிகள் இடையேயான வைட்டலிட்டி பிளாஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ரிலே மெரிடித் தனது பந்தால் எசெக்ஸ் அணியின் மைக்கேல் பெப்பரின் விக்கெட்டை வீழ்த்தியது மட்டுமல்லாமல், ஸ்டம்பையும் இரண்டாக பிளந்து எறிந்தார். இந்த அதிசய நிகழ்வின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சோமர்செட் அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Cricket Stumps Split in Two: பந்துவீச்சில் பயங்கரம்! வேகத்தில் இரண்டாக பிளந்த ஸ்டம்ப்.. வைட்டலிட்டி பிளாஸ்டில் கலக்கிய மெரிடித்!
ரிலே மெரிடித் எடுத்த விக்கெட்Image Source: Screengrab
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 09 Jul 2025 13:08 PM

சில நேரங்களில் கிரிக்கெட்டில்(Cricket) ஏதாவது ஒரு விஷயம் அதிசயமாக இருக்கும். ஆனால், இதை நம்புவது எளிதாக இருக்காது. நேற்று அதாவது 2025 ஜூலை 8ம் தேதி இங்கிலாந்தில் இதேபோன்ற ஒன்று நிகழ்வு அரங்கேறியது. அப்போது ஒரு வேகப்பந்து வீச்சாளர் விக்கெட்டை எடுத்தது மட்டுமின்றி, ஸ்டம்பை உடைத்து எறிந்தார். இப்போது இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பொதுவாக ஒரு ஸ்டம்ப் உடைந்தால், அதன் மேல் பகுதி அல்லது கீழ் பகுதி உடையும். அப்படி இல்லையென்றால் இரண்டு துண்டுகளாக உடையும். ஆனால், இந்த போட்டியில் ​​பந்து வீச்சாளர் ஸ்டம்பை கோடாரியால் கீறியதுபோல் பிளந்து இருந்தது. அதாவது ஒரு தச்சன் தனது ரம்பத்தால் மரம் வெட்டுவது போல கீறி இருந்தது. இந்த சம்பவம் இங்கிலாந்தில் வைட்டலிட்டி (Vitality Blast) பிளாஸ்ட் போட்டியின் போது நடந்தது.

என்ன நடந்தது..?

வருகின்ற 2025 ஜூலை 8ம் தேதி வைட்டலிட்டி பிளாஸ்டில் சோமர்செட் மற்றும் எசெக்ஸ் இடையே ஒரு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில், சோமர்செட்டுக்காக விளையாடும் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ரிலே மெரிடித், தனது பந்தால் விக்கெட்டை வீழ்த்தினார். எசெக்ஸ் தொடக்க வீரர் மைக்கேல் பெப்பரின் முதல் விக்கெட்டை வீழ்த்தி ஸ்டம்பை இரண்டாக பிளந்து எறிந்தார். அதன்படி, அனைவரையும்  மெரிடித் எடுத்த விக்கெட் திகைக்க வைத்தது.

வீடியோவில், ஸ்டம்பிற்கு என்ன நடந்தது என்பதை நீங்கள் காணலாம். பந்து தாக்கிய பிறகு, அது நடுவில் இருந்து இரண்டு நீண்ட பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது. அது நேராக பிளந்தது போல் தெரிகிறது.

மைக்கேல் பெப்பர் விக்கெட்டை வீழ்த்தி கலக்கிய மெரிடித்:

 

View this post on Instagram

 

A post shared by Vitality Blast (@vitalityblast)


எசெக்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் மைக்கேல் பெப்பரை 13 ரன்கள் எடுத்து ரிலே மெரிடித் வெளியேற்றினார். அதன் பிறகு சார்லி அல்லின்சனின் மற்றொரு விக்கெட்டையும் அவர் வீழ்த்தினார். போட்டியில் ரிலே மெரிடித் 2 ஓவர்களில் 22 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

எசெக்ஸ் அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி:

முதலில் பேட்டிங் செய்த சோமர்செட் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளுக்கு 225 ரன்கள் எடுத்தது. இதில் டாம் கோஹ்லர் அதிகபட்சமாக வெறும் 39 பந்துகளில் 90 ரன்கள் எடுத்தார். இதன் காரணமாக, எசெக்ஸ் அணிக்கு 226 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இலக்கை துரத்திய எசெக்ஸ் அணி 130 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனார்கள். மெரிடித் 2 விக்கெட்கள் வீழ்த்திய நிலையில், மேட் ஹென்றி 4 ஓவர்களில் 21 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது சோமர்செட் அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தது.