IND vs ENG 2nd Test 2025: பும்ராவை ஓர கண்ணால் ரசித்த மர்ம பெண்.. இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்.. யார் இந்த யாஸ்மின் பதியானி?
Who Is Yasmin Pathiani: இந்தியா - இங்கிலாந்து இடையிலான 2025 ஜூலை டெஸ்ட் போட்டியில், ஜஸ்பிரித் பும்ராவைப் பார்த்து சிரித்த ஒரு பெண் வைரலானார். அவர் யாஸ்மின் பதியானி, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாட்டுத் துறை ஊழியர். இந்திய அணியின் பயிற்சி கிட் அணிந்திருந்ததற்கு, அவர் பெரும்பாலான நேரத்தை இந்திய அணியுடன் செலவிடுவதும் தொழில்முறை தோற்றத்தை பராமரிப்பதும் காரணம். அவர் முன்னர் லீசெஸ்டர் சிட்டி கால்பந்து கிளப்பில் விளையாட்டு பிசியோதெரபிஸ்டாக பணியாற்றியவர்.

இந்திய கிரிக்கெட் அணிக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி 2025 ஜூலை 2ம் தேதி முதல் பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டி (IND vs ENG 2nd Test 2025) பல காரணங்களுக்காக செய்திகளில் இடம்பெற்றுள்ளது. சுப்மன் கில்லின் வரலாற்று சிறப்புமிக்க 269 ரன்கள் இன்னிங்ஸ், ஹாரி புரூக் – ஜேமி ஸ்மித்தின் 303 ரன்கள் பார்ட்னர்ஷிப் மற்றும் முகமது சிராஜின் 6 விக்கெட்டுகள் அபாயகரமான பந்துவீச்சு ஆகியவை இந்த போட்டியை மறக்கமுடியாததாக மாற்றியுள்ளன. மேலும், இந்த போட்டியில் பல சுவாரஸ்யமான நிகழ்வுகளும் நடந்துள்ளன. அதில் ஒன்று, ஜஸ்பிரித் பும்ராவை (Jasprit Bumrah) பார்த்து புன்னகைக்கும் ஒரு மர்மமான பெண்ணை கேமரா படம் பிடித்தது. தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
யார் இந்த பெண்..?
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது பும்ராவை ரசித்த அந்த பெண்ணின் பெயர் யாஸ்மின் பதியானி என்பது தெரியவந்துள்ளது. யாஸ்மின் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் (ECB) செயல்பாட்டுத் துறையுடன் தொடர்புடையவர். இந்த இந்திய சுற்றுப்பயணத்தின் போது இந்திய அணியுடன் ஒருங்கிணைக்க ECB அவரை நியமித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்போது பயணம், போட்டி குறித்த விஷயங்கள், பயிற்சி அட்டவணைகள் மற்றும் மைதான அணுகல் ஒருங்கிணைப்பதே யாஸ்மின் பதியானியின் முக்கிய பணியாகும். வருகை தரும் அணிக்கும் உள்நாட்டு வாரியத்திற்கு இடையே சுமூகமான தொடர்பை நிர்வகிக்க, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தங்கள் செயல்பாட்டு குழுவிலிருந்து ஒரு தொடர்பை நியமிப்பது வழக்கம்.




இங்கிலாந்து – இந்தியா அணிக்கு பாலமாக செயல்படும் யாஸ்மின் பதியானி இந்திய பயிற்சி கிட் ஏன் அணிந்திருக்கிறார் என்று பல ரசிகர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு காரணம், யாஸ்மின் பதியானி பெரும்பாலான நேரங்களை இந்திய அணியுடன் செலவிடுகிறார், பதியானி தனது செயல்பாட்டு கடமைகளை செய்யும்போது ஒரு தொழில்முறை தோற்றத்தை பராமரிக்க இந்திய கிட் அணிவார்.
யாஸ்மின் பதியானியின் தொழில் வாழ்க்கை:
#Jasprit_Bumrah with New Support Staff #Viral_Girl : pic.twitter.com/6V2ncgZBqM
— Shekhawat09 (@sshekhawat09) July 5, 2025
கடந்த 2010 லீசெஸ்டர் பல்கலைக்கழகத்தில் பிசியோதெரபி பட்டத்தை முடித்த யாஸ்மின் பதியானி, ஹாரோகேட் மற்றும் மாவட்ட NHS அறக்கட்டளை பணியாற்றி, மருத்துவ துறையில் தனது வாழ்க்கையை தொடங்கினார். அதன்பிறகு 2010 முதல் 2013 வரை யாஸ்மின் பதியானி, லீசெஸ்டர் சிட்டி காலபந்து கிளப்பின் விளையாட்டு பிசியோதெரபிஸ்டாக பணியாற்றினார். தொடர்ந்து, பயிற்சி மற்றும் போட்டி அட்டவணை தொடர்பாக அகாடமி வீரர்களுக்கு உதவினார். பின்னர், யாஸ்மின் பதியானி விளையாட்டு வணிக தலைமைக்கு வந்தார். ஃபிஸ் லிமிடெட்டில் விளையாட்டு தலைவராகாவும், கிளினோவாவில் ORS ஸ்போர்ட்டின் தலைவராகவும் பதவிகளை வகித்தார்.
கடந்த 2022ம் ஆண்டு யாஸ்மின் பதியானி, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாட்டு குழுவில் சேர்ந்தார். இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸின் போது, இந்திய அணியின் டக்அவுட்டில் இருந்த யாஸ்மின் பதியானி கேமராக்கள் திரும்பியது. அப்போது, யாஸ்மின் பதியானி சிரித்துக் கொண்டே ஜஸ்பிரித் பும்ராவுடன் உரையாடுவது போல் காணப்பட்டார். இதையடுத்து, அந்தப் பெண்ணின் படம் சமூக ஊடகங்களில் விரைவாக வைரலானது.