India vs England 2nd Test: இங்கிலாந்து அணிக்கு 608 ரன்கள் இலக்கு.. மாஸ் காட்டிய இந்திய அணி..! வெற்றியை ருசிப்பாரா கில்?
India 608-Run Target for England: இந்திய அணி எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் இங்கிலாந்துக்கு 608 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை நிர்ணயித்துள்ளது. சுப்மன் கில் 161 ரன்கள், ஜடேஜா 69*, பண்ட் 65 மற்றும் ராகுல் 55 ரன்கள் எடுத்து அசத்தினர். இந்தியா தனது முதல் டெஸ்ட் வெற்றியை நோக்கி நகர்ந்துள்ளது. இங்கிலாந்து அணிக்கு இவ்வளவு பெரிய இலக்கை துரத்துவது மிகவும் கடினம். இந்திய அணியின் அற்புதமான வெற்றிக்கு வாய்ப்பு அதிகம்.

இங்கிலாந்து அணிக்கு எதிராக நேற்று அதாவது 2025 ஜூலை 5ம் தேதி நடைபெற்ற நடைபெற்ற எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில், இரண்டாவது இன்னிங்ஸை 427/6 என்ற கணக்கில் டிக்ளேர் செய்த இந்திய அணி (Indian Cricket Team), இங்கிலாந்து அணிக்கு 608 ரன்கள் என்ற கடினமான இலக்கை நிர்ணயித்தது. சுப்மன் கில் (Shubman Gill) ஒரு மாஸ்டர் கிளாஸ் 150 பிளஸ் ரன்களை குவித்து அசத்த, ரவீந்திர ஜடேஜா, ரிஷப் பண்ட் மற்றும் கே.எல். ராகுல் (KL Rahul) ஆகியோர் அரைசதம் அடித்து இந்திய அணியின் 2வது இன்னிங்ஸில் முக்கிய பங்கு வகித்தனர். நான்காவது நாள் ஆட்டத்தில் மீதமுள்ள ஒரு மணி நேர ஆட்டத்திலும் இந்திய அணி 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளது. 2025 ஜூலை 6ம் தேதியான இன்று ஐந்தாவது மற்றும் கடைசி நாளின் மூன்று அமர்வுகளிலும் இவ்வளவு பெரிய ஸ்கோரை இங்கிலாந்து அணி துரத்துவது ஒரு மிகப்பெரிய பணியாகும்.
இந்தியா தனது முதல் டெஸ்ட் போட்டியை வெல்ல பந்து வீச்சில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த கடுமையாக முயற்சிக்கும். இதற்கிடையில், ஒரே போட்டியில் இரட்டை சதம் (முதல் இன்னிங்ஸ்) மற்றும் 150-க்கும் மேற்பட்ட ஸ்கோரை அடித்த முதல் வீரர் என்ற பெருமையை சுப்மன் கில் பெற்றார். இந்திய கேப்டன் சுப்மன் கில் 162 பந்துகளில் 13 பவுண்டரிகள் மற்றும் 8 அபார சிக்சர்கள் உட்பட 161 ரன்கள் எடுத்தார். அதேநேரத்தில், ரவீந்திர ஜடேஜா 69 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இரண்டாவது இன்னிங்ஸில் ரிஷப் பண்ட் 65 ரன்களும், கே.எல்.ராகுல் 55 ரன்கள் எடுத்து அணிக்கு அடித்தளம் அமைத்தார்.




இங்கிலாந்துக்கு சவாலான பணி
#TeamIndia declare at 427/6 and secure a mighty 607-run lead! 👏 👏
161 for captain Shubman Gill
69* for Ravindra Jadeja
65 for vice-captain Rishabh Pant
55 for KL RahulUpdates ▶️ https://t.co/Oxhg97g4BF#ENGvIND | @ShubmanGill | @imjadeja | @RishabhPant17 | @klrahul pic.twitter.com/S7kgHbjhs2
— BCCI (@BCCI) July 5, 2025
யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கருண் நாயர் முறையே 28 மற்றும் 26 ரன்கள் எடுத்தனர். வாஷிங்டன் சுந்தர் 12 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து தரப்பில் ஜோஷ் டோங்கு மற்றும் சோயிப் பஷீர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், பிரைடன் கார்ஸ் மற்றும் ஜோ ரூட் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
டெஸ்ட் போட்டியின் நான்காவது இன்னிங்ஸில் இதுபோன்ற இலக்கை துரத்துவது அந்த அணிக்கு கடினமான வேலையாக இருக்கும். ஏனெனில், கடந்த 2003ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணி 418 ரன்கள் எடுத்ததே டெஸ்ட் போட்டியின் நான்காவது இன்னிங்ஸில் அதிகபட்ச இலக்கை எட்டியது. இதற்கிடையில், இந்தியாவுக்கு இது டெஸ்ட் வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச இலக்காகும். இதற்கு முன்னதாக இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக இதுவரை இல்லாத அதிகபட்ச இலக்காக 637 ரன்களை வைத்திருந்தது.
டெஸ்ட் போட்டியின் நான்காவது இன்னிங்ஸில் துரத்தப்பட்ட அதிகபட்ச இலக்கு
- 418 – வெஸ்ட் இண்டீஸ் vs ஆஸ்திரேலியா, 2003
- 414 – தென்னாப்பிரிக்கா vs ஆஸ்திரேலியா, 2008
- 404 – ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து, 1948
- 403 – இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ், 1976
- 395 – வெஸ்ட் இண்டீஸ் vs வங்கதேசம், 2021