Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

India Bangladesh Tour Postponed: அதிரடியாக ரத்து செய்யப்பட்ட இந்தியா – வங்கதேச தொடர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன காரணம்..?

India Bangladesh Cricket Tour: இந்திய கிரிக்கெட் அணியின் வங்கதேச சுற்றுப்பயணம் 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற இருந்தது. ஆனால், பிசிசிஐ திடீரென இந்த சுற்றுப்பயணத்தை ஒத்திவைத்துள்ளது. இந்தியா-வங்கதேச இடையிலான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டதற்கு இரு அணிகளின் நெருக்கடியான போட்டி அட்டவணையே காரணம் என கூறப்படுகிறது.

India Bangladesh Tour Postponed: அதிரடியாக ரத்து செய்யப்பட்ட இந்தியா – வங்கதேச தொடர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன காரணம்..?
நஜ்முல் ஹொசைன் சாண்டோ - ரோஹித் சர்மாImage Source: PTI
mukesh-kannan
Mukesh Kannan | Published: 05 Jul 2025 19:54 PM

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு பிறகு, இந்திய அணி மேற்கொள்ள இருந்த வங்கதேச சுற்றுப்பயணம் (India Bangladesh Tour) ரத்து செய்யப்பட்டுள்ளது. வருகின்ற 2025 ஆகஸ்ட் மாதம் இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கும் இடையே ஒருநாள் மற்றும் டி20 தொடர் நடைபெற இருந்தது. அதன்படி, இந்திய அணி வங்கதேசத்திற்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட இருந்தது. ஆனால் இப்போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) இந்திய அணியின் இந்த சுற்றுப்பயணத்தை ரத்து செய்துள்ளது. பிசிசிஐ-யிடமிருந்து பெறப்பட்ட தகவலின்படி, இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கும் இடையிலான இந்த தொடர் பின்னர் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தத் தொடருக்கான புதிய தேதிகள் எப்போது அறிவிக்கப்படும் என்பது தெரியவில்லை.

இந்திய அணியின் வங்கதேச சுற்றுப்பயணம் ரத்து:

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) மற்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியம் (BCB) ஆகியவை பரஸ்பர ஒப்புதலுடனே இந்த முடிவை எடுத்துள்ளன. பிசிசிஐ இந்த தகவலை தனது எக்ஸ் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கும் இடையிலான ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் ஒரு வருடம் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்தத் தொடர் முன்னதாக, வருகின்ற 2025 ஆகஸ்ட் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டது. இப்போது, 2026 செப்டம்பர் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வங்கதேச சுற்றுப்பயணம் ஏன் ரத்து செய்யப்பட்டது?

இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் ரத்து செய்யப்பட்டதற்கு இரு அணிகளின் இறுக்கமான அட்டவணையே காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளும் இந்தத் தொடர் ஒத்திவைக்கக் காரணமாக இருக்கலாம் என்றே ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வேறு எந்த காரணத்தையும் பிசிசிஐ வெளியிடவில்லை.

விராட்-ரோஹித் சர்மாவுக்கு காத்திருக்கும் இந்திய ரசிகர்கள்:

இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இந்திய அணியின் ஜாம்பவான்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டனர். இதனால், விராட் கோலி மற்றும் ரோஹி சர்மா ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதை காண, அவர்களின் ரசிகர்கள் வங்கதேச தொடருக்காக காத்திருந்தனர். ஆனால் இப்போது இந்தத் தொடரும் ரத்து செய்யப்பட்டுள்ளது.