Shubman Gill Record: ஒரு டெஸ்டில் அதிக ரன்கள்.. ஓரம் போன சுனில் கவாஸ்கர் ரெக்கார்ட்! தொடரும் கில்லின் ரன் வேட்டை!
India vs England Test Series: சுப்மன் கில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்துள்ளார். முதல் இன்னிங்ஸில் இரட்டை சதமும், இரண்டாவது இன்னிங்ஸில் சதமும் அடித்த இவர், சுனில் கவாஸ்கரின் பலதரப்பட்ட சாதனைகளை முறியடித்துள்ளார். ஒரு டெஸ்ட் போட்டியில் 400 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் சுப்மன் கில் (Shubman Gill), இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்டின் (IND vs ENG 2nd Test) இரண்டாவது இன்னிங்ஸிலும் சதம் அடித்துள்ளார். இந்த இன்னிங்ஸில் சுப்மன் கில் 162 பந்துகளில் 13 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 161 ரன்கள் எடுத்தார். இந்த சதத்தின் மூலம், சுப்மன் கில் இந்தியாவின் ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கரின் (Sunil Gavaskar) சாதனையை சமன் செய்துள்ளார். ஒரே டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் மற்றும் சதம் அடித்த ஒரே இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் மட்டுமே. ஆனால் தற்போது இந்திய டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில் இந்த சாதனையை தனது பெயரில் படைத்துள்ளார்.
ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்:
ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையை சுப்மன் கில் படைத்துள்ளார். இதன்மூலம், சுனில் கவாஸ்கர் சாதனையை சுப்மன் கில் முறியடித்துள்ளார். கடந்த 1971ம் ஆண்டு போர்ட் ஆஃப் ஸ்பெயினில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் சுனில் கவாஸ்கர் 344 ரன்கள் எடுத்தார். பர்மிங்காமில் நடைபெறும் இந்த போட்டியில் கில் 430 ரன்கள் எடுத்து 54 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார். ஒரு டெஸ்ட் போட்டியில் 400 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் இந்திய பேட்ஸ்மேன் கில் ஆவார்.




8வது இந்திய பேட்ஸ்மேன்:
Another record-breaking knock from Shubman Gill at Edgbaston 🔥#WTC27 #ENGvIND 📝: https://t.co/Av3A67xTry pic.twitter.com/XAMBUrOWSV
— ICC (@ICC) July 5, 2025
ஒரு டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்த எட்டாவது இந்திய பேட்ஸ்மேன் சுப்மன் கில் ஆவார். அதே நேரத்தில், ஒரே டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் மற்றும் சதம் அடித்த ஒன்பதாவது வீரர் ஆவார். பர்மிங்காம் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் கில் 269 ரன்கள் எடுத்தார், இப்போது இரண்டாவது இன்னிங்ஸிலும் 161 ரன்களும் எடுத்துள்ளார்.
இந்திய அணியின் கேப்டனாக தனது முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் கோலி 449 ரன்கள் எடுத்திருந்தார். தற்போது இந்த சாதனையையும் சுப்மன் கில் முறியடித்துள்ளார். இதுவரை இரண்டு டெஸ்ட் போட்டிகளில் கில் 550 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். கேப்டனாக தனது முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் 429 ரன்கள் எடுத்த சுனில் கவாஸ்கர் இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். இந்தக் காலகட்டத்தில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 367 ரன்கள் எடுத்திருந்தார்.
டான் பிராட்மேன் சாதனையை முறியடிப்பாரா கில்..?
இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர் சுப்மன் கில். இந்தத் தொடரில் கில் இன்னும் மூன்று போட்டிகளில் விளையாட வேண்டும். இதுவரை, சுப்மன் கில் 2 போட்டிகளில் மட்டுமே 500 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். ஒரு தொடரில் அதிக ரன்கள் எடுத்த சாதனை ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேனின் வசம் உள்ளது. 1930 ஆஷஸ் தொடரில் டான் பிராட்மேன் ஐந்து போட்டிகளில் 974 ரன்கள் எடுத்தார். கில் தொடர்ந்து இப்படி ரன்களை குவித்தால், டான் பிராட்மேனின் 95 ஆண்டுகால சாதனையை முறியடிக்க முடியும்.