இரண்டாவது நாளாக குறைந்த தங்கம் விலை.. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?
உலக பொருளாதார சீரற்ற நிலை காரணமாக முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதன் காரணமாக தங்க விலை ஏற்றத்தை சந்தித்து வருகிறது. அதேபோல் உலகளவில் நிலவும் பதற்றங்களும் — குறிப்பாக அமெரிக்கா, ஈரான், வெனிசுவேலா ஆகிய நாடுகளுக்கிடையிலான பதற்றங்களும் — தங்க விலையை உயர்த்துவதற்கான காரணங்களாகக் கூறப்படுகின்றன.
தங்கம் விலை, பிப்ரவரி 27, 2026: தங்கம், வெள்ளி விலை தினசரி ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. அந்த வகையில், 27 பிப்ரவரி 2026 அன்று தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. ஒரு கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில், 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ. 14,900க்கும், ஒரு சவரன் ரூ. 1,19,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையை எடுத்துக் கொண்டால், எந்த மாற்றமும் இன்றி முந்தைய விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
எகிறும் தங்கம் விலை:
கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை சரிவைக் கண்டு வருகிறது. தங்க விலையின் ஏற்ற இறக்கத்திற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் அதில் தங்கம் முக்கிய இடம் பெறுகிறது. கடந்த 2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ஒரு லட்சத்தை எட்டியது. இது நடுத்தர மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது தங்கம் ஒரு எட்டாக்கனியாக மாறியுள்ளது.
மேலும் படிக்க: கேஸ் சிலிண்டர் விலை முதல் இபிஎஃப்ஓ வரை.. மார்ச் மாதத்தில் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்!
உலக பொருளாதார சீரற்ற நிலை காரணமாக முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதன் காரணமாக தங்க விலை ஏற்றத்தை சந்தித்து வருகிறது. அதேபோல் உலகளவில் நிலவும் பதற்றங்களும் — குறிப்பாக அமெரிக்கா, ஈரான், வெனிசுவேலா ஆகிய நாடுகளுக்கிடையிலான பதற்றங்களும் — தங்க விலையை உயர்த்துவதற்கான காரணங்களாகக் கூறப்படுகின்றன.
வரும் காலங்களிலும் தங்க விலை இப்படியே தொடரக்கூடும் என்றும், மேலும் விலை ஏற்றம் இருக்கக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. தங்கம், வெள்ளி விலை தினசரி ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் சூழலில், பொதுமக்கள் செய்வதறியாமல் திகைத்து நிற்கின்றனர்.
இன்றைய நிலவரம் என்ன?
இன்றைய நிலவரப்படி, 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 16,254க்கும், ஒரு சவரன் ரூ. 1,30,032க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயம், 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ. 14,900க்கும், ஒரு சவரன் ரூ. 1,19,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையை எடுத்துக் கொண்டால், ஒரு கிராம் ரூ. 295க்கும், ஒரு கிலோ ரூ. 2,95,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.