AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

புத்தாண்டில் புதுப் படத்தின் அறிவிப்பை வெளியிட்ட நடிகர் ரவி மோகன் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

Actor Ravi Mohan New Movie Update: நடிகர் ரவி மோகன் நடிப்பில் தற்போது அடுத்தடுத்து படங்கள் உருவாகி வருகின்றது. இந்த நிலையில் அடுத்ததாக நடிகர் ரவி மோகன் நாயகனாக நடிக்க உள்ள படம் தொடர்பான அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.

புத்தாண்டில் புதுப் படத்தின் அறிவிப்பை வெளியிட்ட நடிகர் ரவி மோகன் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
தயாரிப்பாளர்கள் உடன் ரவி மோகன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 15 Apr 2026 11:40 AM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ரவி மோகன். இவர் நாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி இருந்தாலும் தொடர்ந்து தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் அவதாரங்களையும் தற்போது எடுத்துள்ளார். தொடர்ந்து படங்களில் பிசியான நடிகராக வலம் வரும் நடிகர் ரவி மோகன் நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியான பராசக்தி படத்தில் நடித்து இருந்தார். இயக்குநர் சுதா கொங்கரா எழுதி இயக்கிய இந்தப் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தான் நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகர் ரவி மோகன் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்தப் படத்தில் நாயகனின் நடிப்பை விட வில்லனின் கதாப்பாத்திரமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்தப் படங்களில் பிசியாக இருக்கிறார்.

அதன்படி நடிகர் ரவி மோகன் நடிப்பில் தற்போது கராத்தே பாபு, ஜீனி மற்றும் ரவி மோகன் புரடெக்‌ஷன் நம்பர் 1 ஆகியப் படங்கள் அடுத்தடுத்து பிசியாக நடைப்பெற்று வருகின்றது. மேலும் இந்தப் படங்கள் திரையரங்குகளில் எப்போது வெளியாகும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில் நடிகர் ரவி மோகன் அடுத்ததாக நடிக்க ஒப்பந்தமான படம் தொடர்பான அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.

புத்தாண்டில் புதுப் படத்தின் அறிவிப்பை வெளியிட்ட நடிகர் ரவி மோகன்:

ரவி மோகன் நாயகனாக நடிக்க உள்ள இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ரோமியோ பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர் ராகுல் தயாரிக்க உள்ளார். மேலும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஜிஎன்டி ஷ்யாம் குமார் இயக்க உள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு படக்குழு வெளியிட்டது. இந்த செய்தி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Also Read… தலைவர் 173 படத்தில் தொடரும் இயக்குநர் பிரச்சனை? அடுத்த இயக்குநர் யார் தெரியுமா

நடிகர் ரவி மோகன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… கருப்பு படத்திலிருந்து இன்று வெளியாகிறது ராத்து ராசன் பாடல்

Follow Us