AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தலைவர் 173 படத்தை இயக்குவதில் இருந்து விலகினாரா சிபி சக்ரவர்த்தி – வைரலாகும் தகவல்

Cibi Chakravarthy has reportedly walked out of Thalaivar 173 Movie : நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்தாக உருவாக இருந்த படம் தலைவர் 173. இந்தப் படத்தை இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இய்க்குவதாக இருந்த நிலையில் அவர் தற்போது படத்தில் இருந்து விலக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தலைவர் 173 படத்தை இயக்குவதில் இருந்து விலகினாரா சிபி சக்ரவர்த்தி – வைரலாகும் தகவல்
ரஜினிகாந்த் - சிபி சக்ரவர்த்திImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 13 Apr 2026 12:03 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாத். 75 வயதைக் கடந்தாலும் தொடர்ந்து பிசியான நடிகராக வலம் வருகிறார். இவரது நடிப்பில் அடுத்ததாக தமிழ் சினிமாவில் ஜெயிலர் 2 படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் இந்தப் படத்தை தயாரித்து வரும் நிலையில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் படத்தினை இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் படத்தின் வெளியீடு தொடர்பான அப்டேட்கள் விரைவில் வெளியகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் இந்த 2026-ம் ஆண்டு இறுதிக்குள் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று கூறப்படுகின்றது. ஜெயிலர் படத்தின் முதல் பாகம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது போல இந்தப் படமும் வெற்றியடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தப் படத்தை தொடர்ந்து தலைவர் 173 படத்தை ராஜ் கமல் புரடெக்‌ஷன் சார்பாக கமல் ஹாசன் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை முன்னதாக இயக்குநர் சுந்தர் சி இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் விலகுவதாக அறிவித்த பிறகு இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. படத்தின் புரோமோ ஷூட்டிங் தொடர்பான அப்டேட்கள் வெளியாகி வந்த நிலையில் தற்போது இந்தப் படத்தை இயக்குவதில் இருந்து இயக்குநர் சிபி சக்ரவர்த்தி விலகுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தலைவர் 173 படத்திற்கு தொடரும் பிரச்சனை:

தலைவர் 173 படத்திலிருந்து சிபி சக்கரவர்த்தி விலகிவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது இந்தச் செய்தி பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. இந்தத் திருப்பத்தைத் தொடர்ந்து, அடுத்ததாக யார் இந்தப் படத்தை இயக்கப்போகிறார்கள் என்பது குறித்த பெரும் எதிர்பார்ப்பும் பரபரப்பும் எழுந்துள்ளன. தற்போதைய நிலவரப்படி, அஸ்வத் மாரிமுத்துவே இந்தப் படத்தின் இயக்குநராகப் பொறுப்பேற்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் அளித்த ஓர் நேர்காணலில், தான் ஏற்கனவே ரஜினிகாந்திடம் ஒரு கதையை விவரித்ததாகவும், அந்தக்கதை சூப்பர்ஸ்டாருக்கு மிகவும் பிடித்திருந்ததாகவும் அஸ்வத் மாரிமுத்து குறிப்பிட்டிருந்தார்.

Also Read… இல்லாதவனுக்காக போராடுறவனுக்கு எதிராக இல்லாதவன நிறுத்துரதுதான் அரசியல் – காட்ஸ் அண்ட் சோல்சர்ஸ் ட்ரைசரை வெளியிட்ட ஏ.ஆர்.முருகதாஸ்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவுகள்:

Also Read… நடிகை கயடு லோஹரின் பர்த்டே ஸ்பெஷல்… தொடர்ந்து வெளியாகும் வீடியோ மற்றும் போஸ்டர்ஸ்

Follow Us