மிஸ்டர் எக்ஸ் படம் இப்படிதான் இருக்கும் – நடிகர் கௌதம் ராம் கார்த்திக் பேச்சு
Gautham Ram Karthik talks about Mr X movie : தமிழ் சினிமாவில் ஆக்ஷன் ட்ராமா பாணியில் உருவாகி திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் மிஸ்டர் எக்ஸ். இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் கௌதம் ராம் கார்த்திக் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் மூன்றாம் தலைமுறை நாயகனாக அறிமுகம் ஆனவர் நடிகர் கௌதம் ராம் கார்த்திக். இவர் நாயகனாக அறிமுகம் ஆன ஆரம்ப காலக்கட்டத்தில் இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்த நிலையில் சமீப காலமாக தொடர்ந்து நாயகனாக மட்டும் இல்லாமல் இரண்டாம் நாயகனாகவும் நடிகர் கௌதம் ராம் கார்த்திக் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது நடிகர் ஆர்யா நாயகானக நடித்து உள்ள மிஸ்டர் எக்ஸ் படத்தில் இரண்டாம் நாயகனாக நடிகர் கௌதம் ராம் கார்த்திக் நடித்து உள்ளார். இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் சரத் குமார், மஞ்சு வாரியர், அனகா, ரைசா வில்சன், அதுல்யா, ஜெயபிரகாஷ், காளி வெங்கட் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர்.
மேலும் இந்தப் படத்தினை இயக்குநர் மனு ஆனந்த் எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர்கள் ஸ்ரீ வினீத் ஜெயின் மற்றும் எஸ் லக்ஷ்மன் குமார் ஆகியோர் இணைந்து தயாரித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் இசையமைத்து உள்ளார். இந்த நிலையில் படம் வருகின்ற 17-ம் தேதி ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியக உள்ள நிலையில் படம் குறித்து கௌதம் ராம் கார்த்திக் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மிஸ்டர் எக்ஸ் படம் இப்படிதான் இருக்கும்:
மிஸ்டர் எக்ஸ் திரைப்படம் கிட்டத்தட்ட 70% ஆக்ஷன் நிறைந்தது. படத்தில் உள்ள ஏறக்குறைய ஒவ்வொரு நடிகருக்கும் அவரவருக்கென தனி ஆக்ஷன் காட்சிகள் உள்ளன, இது படத்தை இன்னும் சுவாரஸ்யமாக்குகிறது. முதலில், பிரின்ஸ் பிக்சர்ஸுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். அவர்களின் ஆதரவு இல்லாமல், இவ்வளவு பெரிய திட்டத்தில் நான் ஒரு பகுதியாக இருந்திருக்க மாட்டேன். ஆர்யா படம் முழுவதும் நம்பமுடியாத அளவிற்கு ஆதரவாக இருந்தார். படப்பிடிப்பின் போது அவர் ‘நீ பண்ணு மச்சான்’ என்று சொன்னது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அது என் தன்னம்பிக்கையை உண்மையிலேயே அதிகரித்தது. அவரைப் பார்த்து கற்றுக்கொண்டது ஒரு சிறந்த அனுபவம்.




Also Read… கண்டா வரச்சொல்லுங்க கர்ணன கையோட கூட்டி வாருங்க – 5 ஆண்டுகளை நிறைவு செய்தது தனுஷின் கர்ணன் படம்!
மஞ்சு மேடமுடன் எனக்கு காம்பினேஷன் காட்சிகள் இல்லை என்பது கொஞ்சம் வருத்தமாக இருந்தாலும், நாங்கள் திரைக்குப் பின்னால் சில அற்புதமான தருணங்களைப் பகிர்ந்து கொண்டோம். மேலும், படப்பிடிப்புக்குப் பிறகு, என் கதாபாத்திரத்தின் ஸ்டைலிங் மனு சாரைப் போலவே இருந்தது என்பதை உணர்ந்தேன். எனக்கு இவ்வளவு சுவாரஸ்யமான ஒரு பாத்திரத்தைக் கொடுத்த இயக்குநருக்கு நன்றி என்று தெரிவித்து இருந்தார்.