AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இணையத்தில் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்தது முட்டகலக்கி பாடல் – நெகிழ்ச்சியில் படக்குழு

Mutta Kalakki Music Video Crossed 100 Million Views | நடிகர் கென் கருணாஸ் எழுதி இயக்கி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் யூத். இந்தப் படத்தில் வெளியான முட்ட கலக்கி பாடல் 100 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

இணையத்தில் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்தது முட்டகலக்கி பாடல் – நெகிழ்ச்சியில் படக்குழு
முட்ட கலக்கிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 13 Apr 2026 12:37 PM IST

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆன ஜிவி பிரகாஷ் குமார் தற்போது தென்னிந்திய சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருகிறார். இவரது இசையில் வெளியாகும் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையில் வெளியாகும் பாடல் வருடத்திற்கு ஒரு பாடலாவது ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெறும். மேலும் இவரது இசையில் வெளியாகும் பாடல்கள் தற்போது எல்லாம் 100 மில்லியனைக் கடப்பது மிகவும் எளிமையான ஒன்றாக உள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தென்னிந்திய சினிமாவில் பிசியான இசையமைப்பாளராக மட்டும் இன்றி நாயகனாகவும் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான ஹேப்பி ராஜ் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து நடிப்பு இசை என இரண்டிலும் பிசியகா இருக்கிறார் ஜிவி பிரகாஷ் குமார். அதன்படி இந்த 2026-ம் தொடங்கியதில் இருந்து இதுவரை இவரது இசையில் அடுத்தடுத்தடுத்து பராசக்தி மற்றும் யூத் என அடுத்தடுத்து இரண்டு படங்கள் திரையரங்குகளில் வெளியானது. இந்த இரண்டு படங்களில் வெளியான பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இணையத்தில் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்தது முட்டகலக்கி பாடல்:

இந்த நிலையில் இறுதியாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையில் வெளியான யூத் படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதிலும் குறிப்பாக முட்ட கலக்கி என்ற பாடல் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் பாடல் வெளியானதில் இருந்து இதுவரை 100 மில்லியன் பார்வைகளைக் கடந்தது. இந்தப் பாடல் பட்டிதொட்டி எங்கும் மக்களிடையே பிரபலமாக உள்ளது. இதனை கொண்டாடும் விதமாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்தப் பதிவு தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… Pooja Hegde: விஜய் சாரை கடைசி முறையாக கொண்டாட வேண்டாமா? திருட்டுத்தனமாக பார்ப்பதை ஊக்குவிக்க வேண்டாம் – நடிகை பூஜா ஹெக்டே கண்டனம்!

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… மலையாள சினிமாவில் கட்டாளன் படம் எப்போது வெளியாகிறது? அப்டேட் இதோ

Follow Us