AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கருப்பு படத்தின் 3-வது பாடல் ரிலீஸ் எப்போது? அப்டேட் கொடுத்த படக்குழு

Karuppu Movie Update: நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் கருப்பு. இந்தப் படத்தில் முன்னதாக இரண்டு சிங்கிள் வெளியான நிலையில் தற்போது மூன்றாவது சிங்கிள் எப்போது வெளியாகும் என்பது குறித்த அப்டேட்டை படங்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

கருப்பு படத்தின் 3-வது பாடல் ரிலீஸ் எப்போது? அப்டேட் கொடுத்த படக்குழு
கருப்புImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 13 Apr 2026 10:50 AM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் கருப்பு. இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் இந்தப் படம் இரண்டு ஆண்டுகளாக உருவாகி வந்த நிலையில் இறுதியாக வருகின்ற 14-ம் தேதி மே மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படம் வெளியாக இன்னும் ஒரு மாத காலம் உள்ள நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை த்ரிஷா கிருஷ்ணன் நாயகியாக நடித்து உள்ளார். முன்னதாக இவர்கள் இருவரும் இணைந்து நடித்தப் படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது போல இந்தப் படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர்கள் இருவரும் இணைந்து நடித்து பல ஆண்டுகளுக்கு மேலே ஆனதாலும் இந்தப் படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேலும் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ள நிலையில் படத்தில் இருந்து மூன்றாவது பாடல் எப்போது வெளியாகும் என்று அப்டேட்டை தெரிவித்துள்ளனர்.

கருப்பு படத்தின் 3-வது பாடல் ரிலீஸ் எப்போது?

இந்த கருப்பு படத்தில் இருந்து முன்னதாக இரண்டு பாடல்கள் வெளியானது. இந்த இரண்டு பாடல்களும் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வந்தது. இந்த நிலையில் படத்தில் இருந்து மூன்றாவது சிங்கிள் ரிலீஸ் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி படத்தில் இருந்து மூன்றாவது பாடல் நாளை 14-ம் தேதி ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு வெளியாக உள்ளது. இந்த தகவல் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… ஜன நாயகனுகாக  குரல் கொடுக்கும் கமல் ஹாசன் முதல் பான் இந்திய பிரபலங்கள்

கருப்பு படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… ஓடிடி ரிலீஸ் தேதியை லாக் செய்தது கென் கருணாஸின் யூத் படம்

Follow Us