நிலவைச் சுற்றி வரலாற்று சாதனை படைத்த ஆர்தமிஸ் விண்வெளி பயணக் குழுவை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாராட்டியுள்ளார். ஒரியன் விண்கலம் மூலம் நிலவின் பின்புறத்தைச் சுற்றி பூமிக்குத் திரும்பிக் கொண்டிருந்த விண்வெளி வீரர்களுடன் தொடர்பு கொண்டு பேசிய அவர், “நீங்கள் வரலாறு படைத்துள்ளீர்கள். அமெரிக்காவை பெருமைப்பட வைத்துள்ளீர்கள்” என்று தெரிவித்தார்.