Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

India’s 2026 England Tour: 5 டி20, 3 ஒருநாள் போட்டி.. 2026ம் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியின் அட்டவணை இதோ!

India vs England Cricket 2026: 2026 ஜூலையில் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இந்த அட்டவணையை வெளியிட்டுள்ளது. டி20 தொடர் ஜூலை 1 முதல் 11 வரையும், ஒருநாள் தொடர் ஜூலை 14 முதல் 19 வரையும் நடைபெறும். இந்திய அணியின் வெற்றிக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

India’s 2026 England Tour: 5 டி20, 3 ஒருநாள் போட்டி.. 2026ம் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியின் அட்டவணை இதோ!
இந்தியா - இங்கிலாந்து டி20 மற்றும் ஒருநாள் தொடர்Image Source: ICC
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 24 Jul 2025 17:15 PM

இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் (India – England Test Series) தற்போது நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், 2026ம் ஆண்டுக்கான இந்தியாவின் இங்கிலாந்து சுற்றுப்பயணம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்திய அணி (Indian Cricket Team) அடுத்த 2026ம் ஆண்டு மீண்டும் இங்கிலாந்துக்கு வந்து இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடர்களில் விளையாடவுள்ளது. அடுத்த ஆண்டு 2026 ஜூலை மாதம் இந்தியாவிற்கும், இங்கிலாந்துக்கும் (England Cricket Team) இடையே 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதுதொடர்பாக, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்று அதாவது 2025 ஜூலை 24ம் தேதி இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

ALSO READ: தொடர்ந்து 14 முறையாக டாஸில் தோற்ற இந்திய அணி – பின்னடைவா?

இந்தியா – இங்கிலாந்து தொடர் எப்போது..?

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்காக இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்யவுள்ளது. இந்த சுற்று பயணமானது அடுத்த ஆண்டு அதாவது 2026ம் ஆண்டு ஜூலை மாதம் இந்திய அணி விளையாடுகிறது. இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே 2026 ஜூலை 1 முதல் 2026 ஜூலை 11 வரை டி20 தொடர் நடைபெறும். இந்தத் தொடரில் இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதற்குப் பிறகு, 2026ம் ஆண்டு ஜூலை 14 முதல் ஜூலை 19 வரை 3 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடுகிறது. அடுத்த 2026ம் ஆண்டு இந்தியாவின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் முழுமையான அட்டவணையை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடர்:

  1. முதல் போட்டி: 2026 ஜூலை 1; பேங்க் ஹோம் ரிவர்சைடு, டர்ஹாம்
  2. 2வது போட்டி: 2026 ஜூலை 4; ஓல்ட் டிராஃபோர்ட், மான்செஸ்டர்
  3. 3வது போட்டி: 2026 ஜூலை 7; டிரென்ட் பிரிட்ஜ், நாட்டிங்ஹாம்
  4. 4வது போட்டி: 2026 ஜூலை 9; சீட் யுனிக் ஸ்டேடியம், பிரிஸ்டல்
  5. 5வது போட்டி: 2026 ஜூலை 11; யுடிலிடா பவுல், சவுத்தாம்ப்டன்

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர்

  1. முதல் போட்டி: 2026 ஜூலை 14; எட்ஜ்பாஸ்டன், பர்மிங்காம்
  2. 2வது போட்டி: 2026 ஜூலை 16, சோபியா கார்டன்ஸ், கார்டிஃப்.
  3. 3வது போட்டி: 2026 ஜூலை 19, லார்ட்ஸ், லண்டன்

ALSO READ: டெஸ்டில் முதல் அரைசதத்துடன் முத்தான சாதனைகள்.. இங்கிலாந்துக்கு எதிராக கெத்து காட்டிய சாய் சுதர்சன்!

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர்

இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது 2025 ஜூலை மாதம் நடைபெற்று வருகிறது. இன்று, ஜூலை 24 அன்று, இந்திய அணி மான்செஸ்டரில் நான்காவது டெஸ்ட் போட்டியில் 2வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதுவரை இந்தத் தொடரில் இந்தியா 2-1 என பின்தங்கியுள்ளது. 2025 ஆம் ஆண்டு இந்தியாவின் சுற்றுப்பயணம் இந்த ஆண்டு 2025 ஜூன் 20ம் தேதி தொடங்கியது. இந்த இரு அணிகளுக்கும் இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி 2025 ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 4 வரை நடைபெறுகிறது.