Shubman Gill: 3வது டெஸ்டில் ஜாக் கிரௌலியுடன் வாக்குவாதம் ஏன்..? சுப்மன் கில் விளக்கம்..!
IND vs ENG Test Series: இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரில், சுப்மன் கில் மற்றும் ஜாக் கிரௌலி இடையே நடந்த வாக்குவாதம் குறித்து சுப்மன் கில் விளக்கம் அளித்துள்ளார். இங்கிலாந்து வீரர்களின் தாமதமான வருகை குறித்து அவர் அதிருப்தி தெரிவித்தார்.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடந்து வரும் (IND vs ENG Test Series) டெஸ்ட் தொடர் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக, இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டியின்போது, இந்திய பேட்ஸ்மேன் சுப்மன் கில் (Shubman Gill) மற்றும் இங்கிலாந்து தொடக்க வீரர் ஜாக் கிரௌலி (Jak Crawley) இடையேயான வாக்குவாதம் சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டது. இந்த சம்பவம் மைதானத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், ஆட்டத்தின் உற்சாகம் குறித்தும் கேள்விகளை எழுப்பியது. நான்காவது டெஸ்ட் போட்டிக்கு முன்பு, இந்திய கேப்டன் சுப்மன் கில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கடந்த போட்டியில் நடந்த வாக்குவாதம் குறித்து பேசியுள்ளார்.
என்ன சொன்னார் சுப்மன் கில்..?
லார்ட்ஸ் டெஸ்டின் மூன்றாவது நாள் முடிவில் சுப்மன் கில் மற்றும் ஜாக் க்ரௌலி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து பேசிய சுப்மன் கில், “இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் விளையாட 7 நிமிடங்கள் மட்டுமே இருந்தன. அப்போது, இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் விளையாட வர 90 நிமிடங்கள் எடுத்து கொண்டனர். வெறும் 10-20 அல்ல, சரியாக 90 வினாடிகள் தாமதமாக வந்தனர். நாங்கள் அவர்களின் சூழ்நிலையில் இருந்திருந்தால், நாங்களும் அதையே செய்ய விரும்பியிருப்போம், ஆனால் இதுபோன்ற விஷயங்களைச் செய்வதற்கு ஒரு வழி இருக்கிறது. அது விளையாட்டின் உற்சாகத்தில் இருப்பதாக நான் நினைக்கவில்லை. இதுபோன்ற விஷயங்களை (சர்ச்சை) செய்யும் எண்ணம் எங்களுக்கு இல்லை, ஆனால் சில நேரங்களில் உணர்ச்சிகள் வெளிப்படும்” என்று தெரிவித்தார்.
ALSO READ: புதிய மாற்றத்துடன் களமிறங்கும் இங்கிலாந்து.. இந்திய அணி தாக்கு பிடிக்குமா..?




அன்ஷூல் கம்போஜ் அறிமுகமாக வாய்ப்பு:
இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் ஆகாஷ் தீப் விளையாடவில்லை, அர்ஷ்தீப் சிங்கும் விளையாடவில்லை. ஆனால், 2 இன்னிங்ஸ்களிலும் 20 விக்கெட்டுகளை வீழ்த்த எங்கள் அணியில் நல்ல வீரர்கள் உள்ளனர். அன்ஷூல் கம்போஜ் அறிமுகமாகும் வாய்ப்பு உள்ளது. நாளை பிரசித் அல்லது அன்ஷூலில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதை பார்ப்போம்.
ALSO READ: அடுத்தடுத்து 5 பேருக்கு காயம்.. 4வது டெஸ்டில் இந்திய பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்?
அன்ஷூல் கம்போஜின் திறமையை நாங்கள் பார்த்திருக்கிறோம். அவர் எங்களுக்குப் போட்டிகளை வென்று தருவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. காயங்கள் இருக்கும்போது அது ஒருபோதும் எளிதானது அல்ல. நிதிஷ் குமார் ரெட்டியும் இல்லை, ஆகாஷ் தீப்பும் விளையாடவில்லை. இரு இன்னிங்ஸிலும் 20 விக்கெட்டுகளை வீழ்த்தும் அளவுக்கு நல்ல வீரர்கள் எங்களிடம் உள்ளனர்.” என்று தெரிவித்தார்.